சிலம்புச் செல்வர் ம.பொ.சி.யின் சிலையை முதல்வர் கருணாநிதி இன்று (பிப்ரவரி 9) திறந்து வைத்தார். மூன்று நாட்களுக்கு முன்பு சென்னை சைதாப்பேட்டையில் நடந்த தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் கருணாநிதி தங்க கிரிடமும் தங்க வாளும் பரிசளிக்கப்பட்டது. அதனை சிலை திறப்பு விழாவில் கருணாநிதி முன்பு ஏலம் விட்டார்கள். காமராஜ் என்பவர் அதை 55 லட்சத்திற்கு ஏலம் எடுத்தார். இந்த தொகையை ம.பொ.சி.யின் குடும்பத்தினருக்கு வழங்க போகிறார்கள்.
சிலை திறப்பு விழாவில் கருணாநிதி ஆற்றிய உரை:
சிலம்புச் செல்வர் ம.பொ.சி. அவர்களுக்குச் சிலை எடுக்க வேண்டும் என்ற எண்ணம் நீண்ட காலமாக எனக்கும், என்னைச் சார்ந்தவர்களுக்கும் குறிப்பாக தி.மு. கழகத்தில் உள்ள எங்கள் அனைவருக்கும் இருந்து வந்தது என்றாலுங்கூட, இன்றைக்கு அந்தச் சிலையை அமைக்கின்ற அந்த வாய்ப்பு இன்றைக்குக் கிடைத்து - அவருடைய குடும்பத்தாரும் நலமுடன் வாழ, மகிழ்வுடன் வாழ எங்களால் இயன்ற இந்த உதவியைச் செய்கின்ற வாய்ப்பையும் நாங்கள் பெற்றிருக்கிறோம்.
தமிழைக் காக்க - தமிழர்களைக் காப்பாற்ற - தமிழ்நாட்டை வளம் பெற்ற நாடாக ஆக்க - நம்மை நாமே தயார்படுத்திக் கொள்ள நம்முடைய தன்னலத்தின் காரணமாக, அவரை நாம் இன்றைக்கு நினைத்துப் போற்றுகிறோம், பாராட்டுகிறோம் என்று சொன்னால், அதை யாரும் மறுப்பதற்கில்லை. தமிழகத்திலே ஈடு இணையற்ற தமிழ்ச் செம்மல்களில் ஒருவராகத் திகழ்ந்து இன்றளவும் நம்முடைய நெஞ்சில் நிலைபெற்று வாழ்கின்றார் சிலம்புச் செல்வர் ம.பொ.சி. என்று சொன்னால், அது மிகையாகாது.
தமிழகத்திலே வாழ்ந்து மறைந்த பல பெரும்புலவர்கள், தமிழறிஞர்கள், தியாகச் செம்மல்கள் அவர்களையெல்லாம் மறவாமல், அவர்களுக்கு - அவர்களுடைய குடும்பத்தாருக்கு நிதி உதவி, வாழ்வாதாரத்திற்கான பல உதவிகள் - இவைகளையெல்லாம் செய்து கடமையாற்றி வருவது இந்த அரசு.
திராவிட முன்னேற்றக் கழக அரசைப் பொறுத்தவரையில், தியாகிகளை - அவர்கள் எந்தக் கட்சியைச் சார்ந்தவர்களாக இருந்தாலும், எந்த இயக்கத்திற்காகப் பாடுபட்டவர்களாக இருந்தாலும், அவர்களை மறப்பதில்லை - அவர்களுக்கு மரியாதை செய்யத் தயங்குவதில்லை.
ம.பொ.சி. குடும்பத்திற்கு தங்க வாள் - தங்க மகுடம் எனக்குத் தரப்பட்டவைகளை பரிசாக வழங்கி - அதை நிதியாக மாற்றி அவருடைய குடும்பத்திற்கு அதைப் பயன்படுத்த வேண்டுமென்று விரும்பி அதை இன்றைக்கு ஏலம் விட்டிருக்கிறோம். அதை 55 இலட்சம் ரூபாய்க்கு காமராஜ் என்ற இளைஞர் ஏலம் எடுத்திருக்கிறார். வேடிக்கை பாருங்கள் - ம.பொ.சி. விழாவில் - கருணாநிதி ஏலம் விட - அதைக் காமராஜர் வாங்க இந்த அரசியல் ஒற்றுமை எதிர்காலத்திலே மாத்திரமல்ல - நிகழ் காலத்திலும் நிலவிட வேண்டும் - எதிர்காலத்திலும் வளர்ந்திட வேண்டும்.

Comments