அ.தி.மு.க. கூட்டணியில் தொடர்ந்து அங்கம் வகித்து வருகிறது அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகம். அந்த கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் ந. சேதுராமன் இன்று (பிப்ரவரி 17) போயஸ் கார்டன் இல்லத்தில் ஜெயலலிதாவை தமது கட்சியின் நிர்வாகிகளுடன் நேரில் சந்தித்தார். அப்போது, நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தலில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியில், அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகம் ஒரு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுவது என ஒப்பந்தம் ஆனது.
இந்நிகழ்வின் போது, பொருளாளர் ஓ. பன்னீர்செல்வம், எம்.எல்.ஏ., தலைமை நிலையச் செயலாளர் கே.ஏ. செங்கோட்டையன், எம்.எல்.ஏ., ஆகியோர் உடன் இருந்தனர். திருமங்களம் தொகுதியில் மூ.மு.க. போட்டியிட வாய்ப்பு இருப்பதாக பேச்சுகள் அடிபடுகிறது.
இந்த சந்திப்பு பிறகு மாவட்டப் பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்களுடன் ஜெயலலிதா ஆலோசனை நடத்தினார். சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தலுக்கான பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
ஒப்பந்தத்துடன் சேதுராமன்

Comments