தமிழக சட்டசபைத் தேர்தலில், அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகத்துடன் தொகுதிப் பங்கீடு குறித்து, அ.தி.மு.க. தொகுதி பங்கீட்டுக் குழு உறுப்பினர்களான, பொருளாளர் ஓ. பன்னீர்செல்வம், தலைமை நிலையச் செயலாளர் கே.ஏ. செங்கோட்டையன், தேர்தல் பிரிவுச் செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் இன்று (பிப்ரவரி 1 செவ்வாய்) மாலை 6.00 மணியளவில், அ.தி.மு.க. தலைமைக் அலுவலகத்தில் அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகத்தின் நிறுவனத் தலைவர் டாக்டர் ந. சேதுராமன், மாநில பொதுச் செயலாளர் இசக்கிமுத்து ஆகியோருடன் முதல் கட்டப் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதேப் போல அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, மாநில அமைப்புச் செயலாளர் வே.க. அய்யர், மாநில இளைஞர் அணி செயலாளர் எஸ். பாஸ்கர் மதுரம் ஆகியோருடன் முதல் கட்டப் பேச்சுவார்த்தை நடத்தினர்.
Comments