தொகுதி மறுசீரமைப்பில் புதிதாக உருவாக்கப்பட்ட தொகுதி கே.வி.குப்பம். தனித் தொகுதியான இந்த தொகுதியில் குடியாத்தம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 32 ஊராட்சிகளும் கே.வி. குப்பம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 39 ஊராட்சிகளும் காட்பாடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 2 ஊராட்சிகளும் இணைத்து 73 ஊராட்சிகள் கொண்டிருக்கிறது.
சுமார் 1.72 லட்சம் வாக்காளர்கள் இந்த தொகுதியில் 213 வாக்குச் சாவடிகள் உள்ளன. முழுக்க கிராமங்களையே உள்ளடக்கிய தொகுதியாக இருக்கும் கே.வி.குப்பத்தில் இந்திய குடியரசு கட்சி தலைவர் செ.கு. தமிழரசன் போட்டியிடுவார் என்று பேச்சு அடிபடுகிறது. அ.தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய குடியரசு கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. செ.கு.தமிழரசனின் சொந்த ஊர் செட்டிகுப்பம். இது கே.வி.குப்பம் தொகுதிக்குள்தான் அடங்கியிருக்கிறது.
செ.கு. தமிழரசன்

Comments