Skip to main content

Posts

ஜெயலலிதாவுக்கு தண்டனையா?

  2007 ஜூலை 4 தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழில் எழுதிய கட்டுரை இது! ஜெயலலிதாவுக்கு தண்டனையா? கடந்த 2001-ம் ஆண்டு நடந்த தமிழக சட்ட சபைத் தேர்தலில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஆண்டிபட்டி, கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை மற்றும் புவனகிரி ஆகிய நான்கு தொகுதிகளில் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்தார். ஆனால் அந்த நேரத்தில், ஏற்கெனவே ஆட்சி யில் இருந்த போது விதிகளை மீறி டான்சி நிலத்தை வாங்கியதாகச் சொல்லி போடப் பட்ட வழக்கொன்றில் ஜெயலலிதாவுக்கு சிறப்பு நீதிமன்றம் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்திருந்தது. ஊழல் வழக்கில் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டால் தேர்தலில் போட்டியிட முடியாது என்பது தேர்தல் கமிஷனின் விதி. ஆகவே, ஜெயலலிதா வின் நான்கு மனுக்களும் தள்ளுபடி செய்யப் பட்டு அவர் தேர்தலில் நிற்கும் வாய்ப்பை இழந்தார். இது ஒருபுறமிருக்க, ‘மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி ஒருவர் ஒரு சமயத்தில் இரண்டு தொகுதிகளில் மட்டுமே போட்டியிட முடியும். ஆனால், நான்கு தொகுதிகளில் வேட்புமனுத் தாக்கல் செய்திருந்த ஜெயலலிதா, தான் இரண்டு தொகுதிகளுக்கு மேல் வேட்புமனுத் தாக்கல் செய்யவில்லை என்று
Recent posts

பிரதீபா பிரசாரத்தில் கூட்டணி குழப்பங்கள்! நேரடி ரிப்போர்ட்..

  2007 ஜூலை 8 தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழில் எழுதிய கட்டுரை இது! . பிரதீபா பிரசாரத்தில் கூட்டணி குழப்பங்கள்! ஜனாதிபதி தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி சார்பில் போட்டியிடும் பிரதீபா பாட்டீல், தன் பிரசாரத்தைத் தமிழகத்தில் இருந்து தொடங்கியிருக்கிறார். பிரதீபா பாட்டீலை ஆதரித்து சென்னையில் தி.மு.க. கூட்டணி சார்பில் மகளிர் பேரணியும் நடந்து முடிந்திருக்கிறது. ஜூலை 1-ம் தேதி அண்ணா சாலை மன்றோ சிலையில் இருந்து சேப்பாக்கம் வரையில் நடந்த இந்தப் பிரமாண்ட பேரணிக்கு, மதியத்தில் இருந்தே பெண்கள் குவிய ஆரம்பித்துவிட்டனர். ஊர்வலத்தை பிரதீபா பாட்டீல் பார்வையிடுவதற்காக, சிம்சன் அருகே ஒரு ஸ்பெஷல் மேடை அமைத்திருந்தார்கள். ‘ராஷ்டிரபதி பவன்’ மாடலில் அந்த மேடையை அமைக்க ஐடியா கொடுத்தது கருணாநிதிதானாம். இந்த மேடையை முந்தின நாள் இரவு வந்து பார்வையிட்டார் கருணாநிதி. ராஷ்டிரபதி பவன் மாடலின் கோபுரத்தில் கருணாநிதிக்குப் பிடித்த மஞ்சள்(!) நிறத்தில் கொடி பறந்து கொண்டிருந்தது. சரியாக மாலை 4.50-க்குக் கருணாநிதியின் கார் மேடை அருகே வந்து நின்றது. உடனே இறங்காமல் சிறிது நேரம் காரிலேயே காத்திருந்தார் கருணாநிதி. அடுத்த சில வினாடிக

மிஸ்டர் கழுகு - அம்மாவின் காமெடி டைம்?

2007 ஜூலை 25 தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழில் எழுதிய கட்டுரை இது! வியாழன் பொழுது சாயும் நேரம்... கழுகார் உள்ளே வந்தபோது, அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெய லலிதா பெயரில் வெளியாகியிருந்த அறிக்கையும் கையுமாக நாம் அசையாமல் அமர்ந்திருந்தோம். ''என்ன... 'ஜனாதிபதி தேர்தலில், என் கட்சியின் எம்.பி-க்களும் எம்.எல்.ஏ-க்களும் தாங்களாகவே முடிவெடுத்து ஓட்டு போட்டுவிட் டார்கள். அது பற்றி எனக்கு எதுவுமே தெரியாது' என்று அம்மை யார் விட்டிருக்கும் அறிக்கையைக் கண்டுதானே ஆடிப் போயிருக் கிறீர்? அம்மாவை நடுநாயகமாக்கி, டெல்லி, ஹைதராபாத், சென்னை என்று மாறி மாறி கூட்டங்கள் நடத்தி, கடைசியில் 'ஜனாதி பதித் தேர்தலை புறக்கணிப்போம்' என்று உறுதிபட அறிவித்த மூன்றாவது அணியைச் சேர்ந்த சில கட்சிகளின் சில உறுப்பினர்கள் ஓட்டுப் போட்டு இருக்கிறார்கள். இதில் அ.தி.மு.க. மட்டும் சிந்தாமல் சிதறாமல் பெருங்கூட்டமாக ஓட்டு போட்டிருப்பதைப் பார்த்து அரசியல் வட்டாரமே குழம்பித் தான் போயிருக்கிறது’’ என்று சிரித்தார் கழுகார். ''சிரிக்கிற விஷயமா இது?'' என்று நாம் கடுகடுக்க... ''அட! 'ஜனாதிபதித்

``பொது வாழ்க்கைக்கு வர ஆசைப்பட்டதில்லை!'' - ஜெயலலிதாவிடம் சசிகலா `பொய் சொன்ன' தினம் இன்று!

2020 மார்ச் 28-ம் தேதி விகடன் இணையத் தளத்தில் எழுதப்பட்ட கட்டுரை! `அரசியல் ஆசை இல்லை... கட்சிப் பதவிக்கு வர விரும்பவில்லை... எம்.எல்.ஏ ஆக வேண்டும் என்ற எண்ணம் இல்லை... அமைச்சர் பதவி வேண்டாம்’ என்றெல்லாம் ஜெயலலிதாவிடம் சசிகலா பொய் சொன்ன தினம் இன்று. எதற்காக சசிகலா இந்தப் பொய்யைச் சொன்னார்? ``கனவிலும் அக்காவுக்கு நான் துரோகம் நினைத்ததில்லை'' ``என் உறவினர்கள் செய்தது மன்னிக்க முடியாத துரோகம்'' ``உறவினர்களுடன் எனக்கு ஒட்டுமில்லை; உறவுமில்லை'' ``பொது வாழ்வில் பங்கு பெறவேண்டும் என்ற ஆசை இல்லை'' - இவையெல்லாம் சசிகலா உதிர்த்த வார்த்தைகள். இந்தப் பொன் முத்துகள் உதிர்ந்த தினம் இன்று! ஜெயலலிதா, சசிகலா ``அக்கா... கோட்டைக்குக் கிளம்பிட்டிங்களா. மதிய சாப்பாட்டுக்கு என்ன வேண்டும்?'' என ஜெயலலிதாவிடம் அனுதினமும் சசிகலா கேட்டுக்கொண்டிருந்த காலம் அது! 1988-ம் ஆண்டிலிருந்து ஜெயலலிதாவின் கட்சியையும் ஆட்சியையும் சசிகலா குடும்பம் பங்கு போட்டுக்கொண்டிருந்தபோது, இடையில் ஒரு சறுக்கல். ஜெயலலிதா ஆட்சியைக் கைப்பற்ற ச