Skip to main content

எப்படி நடந்தது தொகுதி மறுசீரமைப்பு ?

தொகுதி மறுசீரமைப்பு செய்வதற்கு முன்பும் பின்பும் தொகுதிகள் எப்படி மாறியிருக்கின்றன என்பது பற்றி, தமிழக நாடாளுமன்ற தொகுதிகளில் அடங்கியிருக்கும் சட்டசபைத் தொகுதிகள் வாரியாக, இங்கே அலசப்பட்டிருக்கிறது. ஏற்கனவே இருந்த தொகுதிகளும் இப்போது மாற்றப்பட்டிருக்கும் தொகுதிகளின் பட்டியல்..

1. திருவள்ளூர் (தனி) நாடாளுமன்றத் தொகுதி


1. பழனி - கும்மிடிப்பூண்டி (தனி)

2. ஒட்டன்சத்திரம் - பொன்னேரி

3. வேடசந்தூர் - பூந்தமல்லி (தனி)

4. காங்கேயம் - மாதவரம்

5. நத்தம் - திருவள்ளூர்

6. வெள்ளைக்கோவில் - ஆவடி

* புதிதாக திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதி உருவானது.

* ஸ்ரீபெரும்புதூர் எம்.பி. தொகுதியில் இருந்த கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, பூந்தமல்லி, திருவள்ளூர், ஆகிய சட்டசபைத் தொகுதிகள் இங்கே சேர்க்கப்பட்டது.

* புதிதாக உருவாக்கப்பட்ட மாதவரம், ஆவடி சட்டசபைத் தொகுதிகள் இங்கே இணைக்கப்பட்டன.

2. வட சென்னை நாடாளுமன்றத் தொகுதி
1. ராயபுரம் - ராயபுரம்

2. துறைமுகம் - கொளத்தூர்

3. டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் - டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர்

4. பெரம்பூர் (தனி) - பெரம்பூர்

5. திருவொற்றியூர் - திருவொற்றியூர்

6. வில்லிவாக்கம் - திரு.வி.க. நகர் (தனி)

* துறைமுகம், வில்லிவாக்கம் ஆகிய சட்டசபைத் தொகுதிகளுக்குப் பதிலாக கொளத்தூர், திரு.வி.க.நகர் (தனி) ஆகிய சட்டசபைத் தொகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளது

3. தென் சென்னை நாடாளுமன்றத் தொகுதி
1. தியாகராய நகர் - தியாகராய நகர்

2. திருவல்லிக்கேணி - வேளச்சேரி

3. மைலாப்பூர் - மைலாப்பூர்

4. சைதாப்பேட்டை - சைதாப்பேட்டை

5. தாம்பரம் - விருகம்பாக்கம்

6.ஆலந்தூர் - சோழிங்கநல்லூர்

* தாம்பரம், ஆலந்தூர் சட்டசபைத் தொகுதிகளுக்குப் பதிலாக விருகம்பாக்கம், சோழிங்கநல்லூர் சட்டசபைத் தொகுதிகள் புதிதாக இணைக்கப்பட்டன.

* திருவல்லிக்கேணி சட்டசபைத் தொகுதி நீக்கப்பட்டது.

* ஆலந்தூர், தாம்பரம்- சட்டசபைத் தொகுதிகள் ஸ்ரீபெரும்புதூர் எம்.பி. தொகுதியில் சேர்க்கப்பட்டன.

4. மத்திய சென்னை நாடாளுமன்றத் தொகுதி
1. சேப்பாக்கம் - சேப்பாக்கம் -திருவல்லிக்கேணி

2. ஆயிரம் விளக்கு - ஆயிரம் விளக்கு

3. அண்ணா நகர் - அண்ணா நகர்

4. எழும்பூர் (தனி) - எழும்பூர் (தனி)

5. புரசைவாக்கம் - துறைமுகம்

6. பூங்கா நகர் - வில்லிவாக்கம்


* மத்திய சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் இருந்த சேப்பாக்கம், ஆயிரம் விளக்கு, அண்ணா நகர், எழும்பூர் (தனி), ஆகிய சட்டசபைத் தொகுதி அப்படியே தொடர்கின்றன.


* மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதியில் இடம்பெற்றிருந்த புரசைவாக்கம், பூங்கா நகர், சட்டசபைத் தொகுதிகள் நீக்கப்பட்டன. தென் சென்னை நாடாளுமன்ற தொகுதியில் இருந்த திருவல்லிக்கேணி, சேப்பாக்கம் சட்டசபைத் தொகுதியோடு ஒன்றாக சேர்க்கப்பட்டு சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி என்று இணைக்கப்பட்டது.

* வட சென்னை எம்.பி. தொகுதியில் இருந்த வில்லிவாக்கம் மத்திய சென்னைக்கு எம்.பி. தொகுதிக்கு மாற்றப்பட்டது.

5. ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதி
1. ஸ்ரீபெரும்புதூர் (தனி) - ஸ்ரீபெரும்புதூர் (தனி)

2. கும்மிடிப்பூண்டி - ஆலந்தூர்

3. பொன்னேரி - பல்லாவரம்

4. பூந்தமல்லி - தாம்பரம்

5. திருவள்ளூர் - மதுரவாயல்

6. திருத்தணி - அம்பத்தூர்


* ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதியில் இருந்த ஸ்ரீபெரும்புதூர் சட்டபைத் தொகுதி அப்படியே தொடர்கிறது.


* தென் சென்னை நாடாளுமன்ற தொகுதியில் இருந்த ஆலந்தூர், தாம்பரம் ஆகிய சட்டசபைத் தொகுதிகள் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதிக்கு மாற்றப்பட்டது.


* மதுரவாயல், அம்பத்தூர், பல்லாவரம் ஆகிய சட்டசபைத் தொகுதிகள் புதிதாக சேர்க்கப்பட்டன.


6. காஞ்சிபுரம் (தனி) நாடாளுமன்றத் தொகுதி
1. திருப்போரூர் - திருப்போரூர்

2. செங்கல்பட்டு - செங்கல்பட்டு

3. அச்சிரபாக்கம் - செய்யூர் (தனி)

4. மதுராந்தகம் - மதுராந்தகம் (தனி)

5. உத்திரமேரூர் - உத்திரமேரூர்

6.காஞ்சிபுரம் - காஞ்சிபுரம்


* செங்கல்பட்டு பாராளுமன்ற தொகுதி நீக்கப்பட்டது


* காஞ்சிபுரம் பாராளுமன்றத் தொகுதி புதிதாக உருவானது.


* செய்யூர் (தனி) சட்டசபைத் தொகுதி புதிதாக இங்கே சேர்க்கப்பட்டது.


* ஏற்கனவே செங்கல்பட்டு எம்.பி. தொகுதியில் இருந்த திருப்போரூர், செங்கல்பட்டு, மதுராந்தகம், உத்திரமேரூர், காஞ்சிபுரம் ஆகிய சட்டசபைத் தொகுதிகள் இங்கே தொடர்கின்றன.


* செங்கல்பட்டு எம்.பி. தொகுதியில் இருந்த அச்சிரபாக்கம் சட்டசபைத் தொகுதி நீக்கப்பட்டது.


7. அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதி

1. பள்ளிபட்டு - திருத்தணி

2. அரக்கோணம் (தனி) - அரக்கோணம்

3. சோளிங்கர் - சோளிங்கர்

4. ராணிப்பேட்டை - ராணிப்பேட்டை

5. ஆற்காடு - ஆற்காடு

6. செய்யாறு - காட்பாடி


* ஸ்ரீபெரும்புதூர் பாராளுமன்ற தொகுதியில் இருந்த திருத்தணி சட்டசபைத் தொகுதியும், வேலூர் பாராளுமன்ற தொகுதியில் இருந்த காட்பாடி சட்டசபைத் தொகுதியும் இங்கே மாற்றப்பட்டன.


* சோளிங்கர் புதிய சட்டசபைத் தொகுதி புதிதாக சேர்க்கப்பட்டது.


* அரக்கோணம், சோளிங்கர், ராணிப்பேட்டை, ஆற்காடு ஆகிய சட்டசபைத் தொகுதிகள் தொடர்கின்றன.


* அரக்கோணம் எம்.பி. தொகுதியில் இருந்த பள்ளிப்பட்டு, செய்யாறு ஆகிய சட்டசபைத் தொகுதிகள் நீக்கப்பட்டன.

8. வேலூர் நாடாளுமன்றத் தொகுதி
1. அணைக்கட்டு - அணைக்கட்டு

2. வேலூர் - வேலூர்

3. பேரணாம்பட்டு - கீழ்வைத்தியணான் குப்பம் (தனி)

4. குடியாத்தம் - குடியாத்தம் (தனி)

5. காட்பாடி - வாணியம்பாடி

6. ஆரணி - ஆம்பூர்


* திருப்பத்தூர் எம்.பி. தொகுதியில் இருந்த வாணியம்பாடி சட்டசபைத் தொகுதி இங்கே மாற்றப்பட்டது. கீழ்வைத்தியணான் குப்பம் (தனி), ஆம்பூர் ஆகிய சட்டசபைத் தொகுதிகள் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டன.


* அணைக்கட்டு, வேலூர், குடியாத்தம், ஆகிய தொகுதிகள் தொடர்கின்றன.


* ஏற்கனவே வேலூர் எம்.பி. தொகுதியில் இருந்த காட்பாடி, பேரணாம்பட்டு (தனி)- ஆகிய சட்டசபைத் தொகுதிகள் நீக்கப்பட்டன.


* நீக்கப்பட்ட எம்.பி. தொகுதியான திருப்பத்தூர் எம்.பி. தொகுதியில் இருந்த வாணியம்பாடி சட்டசபைத் தொகுதி இங்கே சேர்க்கப்பட்டது.

9. கிருஷ்ணகிரி நாடாளுமன்றத் தொகுதி
1. கிருஷ்ணகிரி - கிருஷ்ணகிரி

2. காவேரிபட்டணம் - ஊத்தங்கரை (தனி)

3. பாலக்கோடு - வேப்பனஹள்ளி

4. பர்கூர் - பர்கூர்

5. ஓசூர் - ஓசூர்

6. தளி - தளி


* கிருஷ்ணகிரி பாராளுமன்ற தொகுதியில் ஊத்தங்கரை (தனி), வேப்பனஹள்ளி ஆகிய புதி சட்டசபைத் தொகுதிகள் சேர்க்கப்பட்டது.


* கிருஷ்ணகிரி, பர்கூர், ஓசூர், தளி ஆகிய சட்டசபைத் தொகுதிகள் தொடர்கின்றன.


* கிருஷ்ணகிரி எம்.பி. தொகுதியில் இருந்த காவேரிப்பட்டினம் சட்டசபைத் தொகுதி நீக்கப்பட்டது.

10. தர்மபுரி நாடாளுமன்றத் தொகுதி

1. தர்மபுரி - தர்மபுரி

2. பெண்னாகரம் - பெண்னாகரம்

3. அரூர் (தனி) - அரூர் (தனி)

4. மொரப்பூர் - பாலக்கோடு

5. மேட்டூர் - மேட்டூர்

6. தாரமங்கலம் & பாப்பிரெட்டிபட்டி


* பாலக்கோடு சட்டசபைத் தொகுதி கிருஷ்ணகிரி எம்.பி. தொகுதியில் இருந்து இங்கே மாற்றப்பட்டன.


* பாப்பிரெட்டிபட்டி தொகுதி புதிதாக உருவாக்கப்பட்டது.


* தர்மபுரி, பெண்னாகரம், அரூர், மேட்டூர் ஆகிய சட்டசபைத் தொகுதிகள் தொடர்கின்றன.


* தர்மபுரி எம்.பி. தொகுதியில் ஏற்கனவே இருந்த மொரப்பூர், தாரமங்கலம் ஆகிய சட்டசபைத் தொகுதிகள் நீக்கப்பட்டது.


11. திருவண்ணாமலை நாடாளுமன்றத் தொகுதி
1. கலசப்பாக்கம் - கலசபாக்கம்

2. திருப்பத்தூர் - திருப்பத்தூர்

3. வாணியம்பாடி - செங்கம் (தனி)

4. நாட்ரம்பள்ளி - திருவண்ணாமலை

5. செங்கம் - கீழ்ப்பெண்ணாத்தூர்

6. தண்டராம்பட்டு - ஜோலார்பேட்டை


* திருப்பத்தூர் நாடாளுமன்றத் தொகுதி மாற்றப்பட்டு அதற்கு பதிலாக திருவண்ணாமலை என்ற புதிய நாடாளுமன்றத் தொகுதி உருவாக்கப்பட்டது.


* ஏற்கனவே திருப்பத்தூர் நாடாளுமன்றத் தொகுதியில் இருந்த கலசப்பாக்கம், திருப்பத்தூர், செங்கம் ஆகிய சட்டசபைத் தொகுதிகள் இங்கே சேர்க்கப்பட்டது.


* புதிதாக கீழ்பெண்ணாத்தூர், ஜோலார்பேட்டை, ஆகிய சட்டசபைத் தொகுதிகளும் இதில் இணைக்கப்பட்டன.


* செங்கம் சட்டசபைத் தொகுதி செங்கம் (தனி) தொகுதியாக மாற்றப்பட்டது.


* ஏற்கனவே திருப்பத்தூர் நாடாளுமன்றத் தொகுதியில் இருந்த வாணியம்பாடி சட்டசபைத் தொகுதி வேலூர் எம்.பி. தொகுதியில் சேர்க்கப்பட்டது.


* நாட்ரம்பள்ளி, செங்கம், தண்டராம்பட்டு ஆகிய சட்டசபைத் தொகுதிகள் நீக்கப்பட்டன.


* நீக்கப்பட்ட வந்தவாசி எம்.பி. தொகுதியில் இருந்த திருவண்ணமலை சட்டசபைத் தொகுதி இங்கே சேர்க்கப்பட்டது.

12. ஆரணி நாடாளுமன்றத் தொகுதி
1. போளூர் - போளூர்

2. வந்தவாசி - வந்தவாசி (தனி)

3. செஞ்சி - செஞ்சி

4. திருவண்ணாமலை - செய்யாறு

5. பெரணமல்லூர் - ஆரணி

6. மேல்மலையனூர் - மைலம்


* வந்தவாசி பாராளுமன்ற தொகுதி நீக்கப்பட்டது. அதற்கு பதிலாக ஆரணி பாராளுமன்றத் தொகுதி உருவானது.


* ஏற்கனவே வந்தவாசி நாடாளுமன்றத் தொகுதியில் இருந்த போளூர், வந்தவாசி, செஞ்சி, ஆகிய சட்டசபைத் தொகுதிகள் இங்கே சேர்க்கப்பட்டன.


* செய்யாறு சட்டமன்ற தொகுதி அரக்கோணம் எம்.பி. தொகுதியில் இருந்தும், ஆரணி சட்டமன்ற தொகுதி வேலூர் எம்.பி. தொகுதியில் இருந்தும் இங்கே மாற்றப்பட்டன.


* புதிதாக உருவாக்கப்பட்ட மைலம் சட்டசபைத் தொகுதியும் இதில் இணைக்கப்பட்டன.


* ஏற்கனவே வந்தாசி எம்.பி. தொகுதியில் இருந்த திருவண்ணாமலை சட்டசபைத் தொகுதி திருவண்ணாமலை எம்.பி. தொகுதியில் இணைந்தது.


* பெரணமல்லூர், மேல்மலையனூர் ஆகிய சட்டசபைத் தொகுதிகள் நீக்கப்பட்டன.


13. விழுப்புரம் (தனி) நாடாளுமன்றத் தொகுதி
1. திண்டிவனம் - திண்டிவனம் (தனி)

2. வானூர் - வானூர் (தனி)

3. கண்டமங்கலம் - திருக்கோவிலூர்

4. விழுப்புரம் - விழுப்புரம்

5. முகையூர் - விக்கிரவாண்டி

6. திருநாவலூர் - உளுந்தூர்பேட்டை


* திண்டிவனம் நாடாளுமன்றத் தொகுதி மாற்றப்பட்டு அதற்கு பதிலாக விழுப்புரம் (தனி) என்ற புதிய நாடாளுமன்றத் தொகுதி உருவானது.


* ஏற்கனவே திண்டிவனம் எம்.பி. தொகுதியில் இருந்த திண்டிவனம், வானூர் சட்டசபைத் தொகுதிகள் இங்கே தனி தொகுதிகளாக சேர்க்கப்பட்டது. அதோடு விழுப்புரம் சட்டசபைத் தொகுதியும் இங்கே இணைந்தது.


* புதிதாக திருகோவிலூர், விக்கிரவாண்டி, உளுந்தூர்பேட்டை தொகுதிகளும் சேர்ந்தன.


* ஏற்கனவே திண்டிவனம் எம்.பி. தொகுதியில் இருந்த கண்டமங்கலம், முகையூர், திருநாவலூர் ஆகிய சட்டசபைத் தொகுதிகள் நீக்கப்பட்டன. 1414


14 . கள்ளக்குறிச்சி நாடாளுமன்றத் தொகுதி
1. பட்டுக்கோட்டை - ஆத்தூர் (தனி)

2. பேராவூரணி - ரிஷிவந்தியம்

3. கொளத்தூர் - சங்கராபுரம்

4. புதுக்கோட்டை - கள்ளக்குறிச்சி (தனி)

5. ஆலங்குடி - கங்கவல்லி (தனி)

6. அறந்தாங்கி - ஏற்காடு (தனி)


* ஏற்கனவே இருந்த புதுக்கோட்டை பாராளுமன்ற தொகுதி நீக்கப்பட்டது. புதிதாக கள்ளக்குறிச்சி பாராளுமன்றம் தொகுதி உருவானது.


* புதிதாக உருவாக்கப்பட்ட இந்த எம்.பி தொகுதியில் கங்கவல்லி (தனி), கள்ளக்குறிச்சி (தனி) ஆகிய புதிய சட்டமன்ற தொகுதிகள் சேர்க்கப்பட்டது.


* கடலூர் எம்.பி. தொகுதியில் இருந்த ரிஷிவந்தியம், சங்கராபுரம் சட்டமன்ற தொகுதிகள் இங்கே மாற்றப்பட்டன.


* சேலம் எம்.பி. தொகுதியில் இருந்த ஏற்காடு சட்டசபைத் தொகுதி இங்கே மாற்றப்பட்டது.


* ஏற்கனவே ராசிபுரம் (தனி) நாடாளுமன்றத் தொகுதியில் இருந்த ஆத்தூர் இங்கே இணைக்கப்பட்டது.


15. சேலம் நாடாளுமன்றத் தொகுதி
1. சேலம் 1 - சேலம் (மேற்கு)

2. சேலம் 2 - சேலம் (தெற்கு)

3. ஓமலூர் - சேலம் (வடக்கு)

4. பனமரத்துப்பட்டி - எடப்பாடி

5. வீரபாண்டி - வீரபாண்டி

6. ஏற்காடு - ஓமலூர்


* சேலம் எம்.பி. தொகுதியில் இருந்த சேலம் 1, சேலம் 2, ஆகிய சட்டசபைத் தொகுதிகள் முறையே சேலம் (மேற்கு), சேலம் (தெற்கு), என மாற்றப்பட்டன.


* வீரபாண்டி, ஓமலூர் ஆகிய சட்டசபைத் தொகுதி இங்கே தொடர்கிறது.


* புதிதாக சேலம் (வடக்கு) என்ற சட்டசபைத் தொகுதி உருவானது.


* ஈரோடு எம்.பி. தொகுதியில் இருந்த எடப்பாடி சட்டசபைத் தொகுதி இங்கே மாற்றப்பட்டது.


* ஏற்கனவே சேலம் எம்.பி. தொகுதியில் இருந்த பனமரத்துப்பட்டி சட்டசபைத் தொகுதி நீக்கப்பட்டது.


* ஏற்கனவே சேலம் எம்.பி. தொகுதியில் இருந்த ஏற்காடு சட்டசபைத் தொகுதி கள்ளக்குறிச்சி எம்.பி. தொகுதியில் மாற்றப்பட்டது.


16. நாமக்கல் நாடாளுமன்றத் தொகுதி
1. ராசிபுரம் - ராசிபுரம் (தனி)

2. ஆத்தூர் - பரமத்தி வேலூர்

3. சின்ன சேலம் - சங்ககிரி

4. சேந்தமங்கலம் - சேந்தமங்கலம் (தனி)

5. தலைவாசல் - திருச்செங்கோடு

6. நாமக்கல் (தனி) - நாமக்கல்


* ராசிபுரம் (தனி) நாடாளுமன்றத் தொகுதி நீக்கப்பட்டது. அதற்குப் பதிலாக நாமக்கல் நாடாளுமன்றத் தொகுதி புதிதாக உருவானது.


* ஏற்கனவே ராசிபுரம் (தனி) நாடாளுமன்றத் தொகுதியில் இடம்பெற்றிருந்த ராசிபுரம், சேந்தமங்கலம், நாமக்கல் ஆகிய சட்டசபைத் தொகுதிகள் இங்கே இடம் பிடித்தன. அப்போது தனித் தொகுதிகளாக இருந்த நாமக்கல், ராசிபுரம் ஆகியவை பொதுத் தொகுதியாகவும் பொதுத் தொகுதியாக இருந்த ராசிபுரம் தனித் தொகுதியாக மாறின.


* ஈரோடு எம்.பி. தொகுதியில் இருந்த திருச்செங்கோடு, சங்ககிரி, ஆகிய சட்டசபைத் தொகுதிகள் இங்கே சேர்க்கப்பட்டன.


* பரமத்தி வேலூர் என்ற புதிய சட்டசபைத் தொகுதி உருவாக்கப்பட்டு இங்கு இணைக்கப்பட்டது. * ஏற்கனவே ராசிபுரம் (தனி) நாடாளுமன்றத் தொகுதியில் இருந்த சின்ன சேலம், தலைவாசல் ஆகிய சட்டசபைத் தொகுதிகள் நீக்கப்பட்டன.


17. ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி
1. எடப்பாடி - குமாரப்பாளையம்

2. சங்ககிரி - தாராபுரம் (தனி)

3. திருச்செங்கோடு - ஈரோடு (கிழக்கு)

4. ஈரோடு - ஈரோடு (மேற்கு)

5. மொடக்குறிச்சி - மொடக்குறிச்சி

6. கபிலர்மலை - காங்கேயம்


* திருச்செங்கோடு நாடாளுமன்றத் தொகுதி நீக்கப்பட்டது. அதற்கு பதிலாக ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி உருவானது.


* ஏற்கனவே இருந்த திருச்செங்கோடு நாடாளுமன்றத் தொகுதியில் இடம்பெற்றிருந்த மொடக்குறிச்சி சட்டசபைத் தொகுதி இங்கே இடம்பெற்றது.


* ஈரோடு சட்டசபைத் தொகுதி ஈரோடு மேற்கு தொகுதியாக மாறியது.


* பொள்ளாச்சி எம்.பி தொகுதியில் இருந்த தாராபுரம் சட்டசபைத் தொகுதி இங்கே இணைந்தது.


* குமாரப்பாளையம், ஈரோடு கிழக்கு, காங்கேயம் ஆகிய சட்டசபைத் தொகுதிகளும் நீக்கப்பட்டன.


* ஏற்கனவே திருச்செங்கோடு எம்.பி. இருந்த கபிலர்மலை சட்டசபைத் தொகுதி நீக்கப்பட்டது.


* ஏற்கனவே திருச்செங்கோடு எம்.பி. தொகுதியில் இருந்த திருச்செங்கோடு, சங்ககிரி ஆகிய சட்டசபைத் தொகுதிகள் நாமக்கல் எம்.பி. தொகுதியில் சேர்க்கப்பட்டது.


* ஏற்கனவே திருச்செங்கோடு எம்.பி தொகுதியில் இருந்த எடப்பாடி சட்டசபைத் தொகுதி சேலம் எம்.பி. தொகுதியில் இணைக்கப்பட்டன.


18. திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதி
1. பவானி - பவானி,

2. பெருந்துறை - பெருந்துறை

3. சத்தியமங்கலம் - திருப்பூர் (வடக்கு)

4. கோபிச்செட்டிப்பாளையம் - கோபிச்செட்டிப்பாளையம்

5. பவானிசாகர் - திருப்பூர் (தெற்கு)

6. அந்தியூர் - அந்தியூர்


* கோபிச்செட்டிப்பாளையம் நாடாளுமன்றத் தொகுதி நீக்கப்பட்டது. அதற்கு பதிகாக திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதி உருவாக்கப்பட்டது.


* ஏற்கனவே இருந்த கோபிச்செட்டிப்பாளையம் நாடாளுமன்றத் தொகுதியில் இடம்பெற்றிருந்த பவானி, பெருந்துறை, கோபிச்செட்டிப்பாளையம், அந்தியூர் ஆகிய நான்கு சட்டசபைத் தொகுதிகள் இங்கே சேர்க்கப்பட்டன.


* ஏற்கனவே கோவை எம்.பி. தொகுதியில் இருந்த திருப்பூர் சட்டசபைத் தொகுதி இரண்டாக பிரிக்கப்பட்டு திருப்பூர் (வடக்கு), திருப்பூர் (மேற்கு) என இரண்டு புதிய சட்டசபைத் தொகுதிகள் சேர்க்கப்பட்டது.


* ஏற்கனவே இருந்த கோபிச்செட்டிப்பாளையம் நாடாளுமன்றத் தொகுதியில் இடம்பெற்றிருந்த பவானிசாகர் சட்டசபைத் தொகுதி நீலகிரி எம்.பி. தொகுதியில் சேர்க்கப்பட்டது. சத்தியமங்கலம் சட்டசபைத் தொகுதி நீக்கப்பட்டது.


19. நீலகிரி நாடாளுமன்றத் தொகுதி
1. தொண்டாமுத்தூர் - பவானிசாகர் (தனி)

2. ஊட்டி - ஊட்டி

3. கூடலூர் - கூடலூர் (தனி)

4. குன்னூர் - குன்னூர்

5. மேட்டுப்பாளையம் - மேட்டுப்பாளையம்

6. அவினாசி - அவினாசி (தனி)


* நீலகிரி எம்.பி. தொகுதியில் இருந்த ஊட்டி, கூடலூர், குன்னூர், மேட்டுப்பாளையம், அவினாசி ஆகிய சட்டசபைத் தொகுதிகள் தொடர்கின்றன. ஆனால் கூடலூர், அவினாசி ஆகிய சட்டசபைத் தொகுதிகள் தனித் தொகுதிகளாக மாற்றப்பட்டது.


* நீக்கப்பட்ட கோபிச்செட்டிப்பாளையம் எம்.பி. தொகுதியில் இடம்பெற்றிருந்த பவானி சாகர் சட்டசபைத் தொகுதி இங்கு மாற்றப்பட்டது.


20. கோவை நாடாளுமன்றத் தொகுதி
1. சிங்காநல்லூர் - சூலூர்

2. திருப்பூர் - கவுண்டம்பாளையம்

3. கோவை கிழக்கு - கோவை (வடக்கு)

4. பல்லடம் - பல்லடம்

5. கோவை மேற்கு - கோவை (தெற்கு)

6. பேரூர் - சிங்காநல்லூர்


* கோவை எம்.பி. தொகுதியில் இருந்த கோவை கிழக்கு, கோவை மேற்கு ஆகிய சட்டசபைத் தொகுதிகள் முறையே கோவை (வடக்கு), கோவை (தெற்கு) என்று மாற்றப்பட்டன.


* பல்லடம், சிங்காநல்லூர் ஆகிய சட்டசபைத் தொகுதிகள் இங்கே தொடர்கிறது.


* சூலூர், கவுண்டம்பாளையம் ஆகிய புதிய சட்டசபைத் தொகுதிகள் உருவாக்கப்பட்டு இங்கே சேர்க்கப்பட்டது.


* ஏற்கனவே கோவை எம்.பி. தொகுதியில் இருந்த பேரூர்- சட்டசபைத் தொகுதி நீக்கப்பட்டது. * கோவை எம்.பி. தொகுதியில் இருந்த திருப்பூர் சட்டசபைத் தொகுதி இரண்டாக பிரிக்கப்பட்டு திருப்பூர் (வடக்கு), திருப்பூர் (மேற்கு) என இரண்டு புதிய சட்டசபைத் தொகுதிகள் உருவாக்கப்பட்டு திருப்பூர் எம்.பி. தொகுதியில் இணைக்கப்பட்டன.


21. பொள்ளாச்சி (தனி) நாடாளுமன்றத் தொகுதி
1. பொங்கலூர் - தொண்டாமுத்தூர்

2. பொள்ளாச்சி - பொள்ளாச்சி

3. கிணத்துக்கடவு ‍- கிணத்துக்கடவு

4. வால்பாறை (தனி) - வால்பாறை (தனி)

5. உடுமலைப்பேட்டை - உடுமலைப்பேட்டை

6. தாராபுரம் (தனி) - மடத்துக்குளம்


* பொள்ளாச்சி எம்.பி. தொகுதியில் இருந்த பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, வால்பாறை (தனி), உடுமலைப்பேட்டை ஆகிய தொகுதிகள் இங்கு தொடர்கின்றன.


* நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் இருந்து தொண்டாமுத்தூர் சட்டசபைத் தொகுதி இங்கே மாற்றப்பட்டது.

* மடத்துக்குளம் சட்டசபைத் தொகுதி புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டது.

* பொள்ளாச்சி எம்.பி. தொகுதியில் இருந்த தாராபுரம், பொங்கலூர் ஆகிய சட்டசபைத் தொகுதிகள் நீக்கப்பட்டன.


22. திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதி
1. நிலக்கோட்டை - நிலக்கோட்டை (தனி)

2. ஆத்தூர் - ஆத்தூர்

3. திண்டுக்கல் - திண்டுக்கல்

4. சோழவந்தான் - ஒட்டன்சத்திரம்

5. உசிலம்பட்டி - பழனி

6. திருமங்கலம் - நத்தம்

* பழனி நாடாளுமன்றத் தொகுதி நீக்கப்பட்டது.

* திண்டுக்கல் எம்.பி. தொகுதியில் இருந்த நிலக்கோட்டை, ஆத்தூர், திண்டுக்கல், ஆகிய சட்டசபைத் தொகுதிகள் தொடர்கின்றன. நிலக்கோட்டை சட்டசபைத் தொகுதி தனித் தொகுதியாக மாற்றப்பட்டது.

* பழனி எம்.பி. தொகுதியில் இருந்த ஒட்டன்சத்திரம், பழனி, நத்தம் ஆகிய சட்டசபைத் தொகுதிகள் இங்கு மாற்றப்பட்டது. தனித் தொகுதியாக இருந்த பழனி பொதுத் தொகுதியாக மாறியது.

* திண்டுக்கல் எம்.பி. தொகுதியில் இருந்த உசிலம்பட்டி, சோழவந்தான், ஆகிய சட்டமன்ற தொகுதிகள் தேனி எம்.பி. தொகுதியில் சேர்க்கப்பட்டது.

* திண்டுக்கல் எம்.பி. தொகுதியில் இருந்த திருமங்கலம் சட்டசபைத் தொகுதி விருதுநகர் எம்.பி. தொகுதியில் சேர்க்கப்பட்டது.

* பழனி எம்.பி. தொகுதியில் இருந்த வேடசந்தூர் சட்டசபைத் தொகுதி கரூர் எம்.பி. தொகுதியில் சேர்க்கப்பட்டது.

* பழனி எம்.பி. தொகுதியில் இருந்த வெள்ளக்கோவில், காங்கேயம் ஆகிய சட்டசபைத் தொகுதிகள் நீக்கப்பட்டன.


23. கரூர் நாடாளுமன்றத் தொகுதி
1. அரவக்குறிச்சி - வேடசந்தூர்

2. கரூர் - கரூர்

3. கிருஷ்ணராயபுரம் - கிருஷ்ணராயபுரம் (தனி)

4. குளித்தலை- அரவக்குறிச்சி

5. தொட்டியம்- மணப்பாறை

6. மருங்காபுரி - விராலிமலை

* கரூர் எம்.பி. தொகுதியில் இருந்த அரவக்குறிச்சி, கரூர், கிருஷ்ணராயபுரம், ஆகிய சட்டசபைத் தொகுதிகள் தொடர்கின்றன. கிருஷ்ணராயபுரம் தொகுதி தனித் தொகுதியாக மாற்றப்பட்டது.

* பழனி எம்.பி. தொகுதியில் இருந்த வேடசந்தூர் சட்டசபைத் தொகுதி இங்கு சேர்க்கப்பட்டது.

* மணப்பாறை, விராலிமலை ஆகிய சட்டசபைத் தொகுதிகள் புதிதாக உருவாக்கப்பட்டு இங்கு சேர்க்கப்பட்டது.

* கரூர் எம்.பி. தொகுதியில் இருந்த குளித்தலை சட்டசபைத் தொகுதி பெரம்பலூர் (தனி) எம்.பி. தொகுதியில் சேர்க்கப்பட்டது.

* கரூர் எம்.பி. தொகுதியில் இருந்த மருங்காபுரி, தொட்டியம் ஆகிய சட்டசபைத் தொகுதிகள் நீக்கப்பட்டன.


24. திருச்சி நாடாளுமன்றத் தொகுதி
1. திருச்சி-1 - திருச்சி (கிழக்கு)

2. திருச்சி-2 - திருச்சி (மேற்கு)

3. திருவெறும்பூர் - திருவெறும்பூர்

4. ஸ்ரீரங்கம் - ஸ்ரீரங்கம்

5. லால்குடி - கந்தர்வக்கோட்டை (தனி)

6. முசிறி - புதுக்கோட்டை

* நீக்கப்பட்ட புதுக்கோட்டை எம்.பி. தொகுதியில் இருந்த புதுக்கோட்டை சட்டசபைத் தொகுதி இங்கே மாற்றப்பட்டது.

* கந்தர்வக்கோட்டை (தனி) சட்டசபைத் தொகுதி புதிதாக சேர்க்கப்பட்டது.

* திருச்சி 1, திருச்சி 2, ஆகிய சட்டசபைத் தொகுதிகள் முறையே திருச்சி (கிழக்கு), திருச்சி (மேற்கு) என மாற்றப்பட்டன.

* ஸ்ரீரங்கம், திருவெறும்பூர் ஆகிய சட்டசபைத் தொகுதிகள் தொடர்கின்றன.

* திருச்சி எம்.பி. தொகுதியில் இருந்த முசிறி, லால்குடி ஆகிய சட்டசபைத் தொகுதிகள் பெரம்பலூர் (தனி) எம்.பி. தொகுதியில் சேர்க்கப்பட்டன.


25. பெரம்பலூர் (தனி) நாடாளுமன்றத் தொகுதி
1. வரகூர் (தனி) - முசிறி

2. பெரம்பலூர் (தனி) - பெரம்பலூர் (தனி)

3. ஆண்டிமடம் - மண்ணச்சநல்லூர்

4. ஜெயங்கொண்டம் - துறையூர் (தனி)

5. அரியலூர் - லால்குடி

6. உப்பிலியபுரம் (தனி) - குளித்தலை

* கரூர் எம்.பி. தொகுதியில் இருந்த குளித்தலை சட்டசபைத் தொகுதியும், திருச்சி எம்.பி. தொகுதியில் இருந்த லால்குடி, முசிறி ஆகிய சட்டசபைத் தொகுதிகளும் இங்கே மாற்றப்பட்டன.

* துறையூர் (தனி), மண்ணச்சநல்லூர் சட்டசபைத் தொகுதிகள் புதிதாக சேர்க்கப்பட்டன.* பெரம்பலூர் (தனி) சட்டசபைத் தொகுதி தொடர்கிறது.

* பெரம்பலூர் (தனி) எம்.பி. தொகுதியில் இருந்த அரியலூர், ஜெயங்கொண்டம் ஆகிய சட்டசபைத் தொகுதிகள் சிதம்பரம் (தனி) எம்.பி. தொகுதியில் சேர்க்கப்பட்டது.

* பெரம்பலூர் (தனி) எம்.பி. தொகுதியில் இருந்த உப்பிலியாபுரம், வரகூர், ஆண்டிமடம் ஆகிய சட்டசபைத் தொகுதிகள் நீக்கப்பட்டன.


26. கடலூர் நாடாளுமன்றத் தொகுதி
1. உளுந்தூர்பேட்டை - திட்டக்குடி (தனி)

2. நெல்லிக்குப்பம் - நெய்வேலி

3. கடலூர் - கடலூர்

4. பண்ருட்டி - பண்ருட்டி

5. ரிஷிவந்தியம் - விருத்தாசலம்

6. சங்கராபுரம் - குறிஞ்சிப்பாடி

* சிதம்பரம் எம்.பி. தொகுதியில் இருந்த குறிஞ்சிப்பாடி, விருத்தாசலம் ஆகிய சட்டசபைத் தொகுதிகள் இங்கே மாற்றப்பட்டன.

* திட்டக்குடி (தனி), நெய்வேலி சட்டசபைத் தொகுதிகள் புதிதாக சேர்க்கப்பட்டன.

* கடலூர், பண்ருட்டி ஆகிய சட்டசபைத் தொகுதிகள் தொடர்கின்றன.

* கடலூர் எம்.பி. தொகுதியில் இருந்த ரிஷிவந்தியம், சங்கராபுரம் சட்டமன்ற தொகுதிகள் கள்ளக்குறிச்சி எம்.பி. தொகுதியில் சேர்க்கப்பட்டது.

* கடலூர் எம்.பி. தொகுதியில் இருந்த உளுந்தூர்பேட்டை, நெல்லிக்குப்பம் சட்டசபைத் தொகுதிகள் நீக்கப்பட்டன.


27. சிதம்பரம் (தனி) நாடாளுமன்றத் தொகுதி
1. குறிஞ்சிபாடி - குன்னம்

2. புவனகிரி - புவனகிரி

3. காட்டுமன்னார்கோவில் & காட்டுமன்னார் கோவில் (தனி)

4. சிதம்பரம் - சிதம்பரம்

5. விருத்தாசலம் - ஜெயங்கொண்டம்

6. மங்களூர் - அரியலூர்

* புவனகிரி, காட்டுமன்னார் கோவில், சிதம்பரம், ஆகிய சட்டசபைத் தொகுதிகள் தொடர்கின்றன.

* பெரம்பலூர் (தனி) எம்.பி. தொகுதியில் இருந்த அரியலூர், ஜெயங்கொண்டம் ஆகிய சட்டசபைத் தொகுதிகள் இங்கே சேர்க்கப்பட்டது.

* குன்னம் என்ற புதிய சட்டசபைத் தொகுதி உருவாக்கப்பட்டு இங்கே சேர்க்கப்பட்டது.

* குறிஞ்சிபாடி, விருத்தாசலம் ஆகியவை சட்டசபைத் தொகுதிகள் கடலூர் எம்.பி. தொகுதிக்கு மாற்றப்பட்டன.

* மங்களூர் சட்டசபைத் தொகுதி நீக்கப்பட்டது.


28. மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதி
1. சீர்காழி - சீர்காழி (தனி)

2. பூம்புகார் - பூம்புகார்

3. மயிலாடுதுறை - மயிலாடுதுறை

4. குத்தாலம் - பாபநாசம்

5. கும்பகோணம் - கும்பகோணம்

6. திருவிடைமருதூர் - திருவிடைமருதூர் (தனி)

* சீர்காழி, பூம்புகார், மயிலாடுதுறை, கும்பகோணம், திருவிடைமருதூர் ஆகிய சட்டசபைத் தொகுதிகள் தொடர்கின்றன. சீர்காழி, திருவிடைமருதூர் ஆகிய சட்டசபைத் தொகுதிகள் தனித் தொகுதிகளாக மாற்றப்பட்டது.

* தஞ்சாவூர் எம்.பி. தொகுதியில் இருந்த பாபநாசம் சட்டசபைத் தொகுதி இங்கு மாற்றப்பட்டது.

* மயிலாடுதுறை எம்.பி. தொகுதியில் இருந்த குத்தாலம் சட்டசபைத் தொகுதி நீக்கப்பட்டது.


29. நாகப்பட்டினம் நாடாளுமன்றத் தொகுதி
1. நாகப்பட்டினம் - நாகப்பட்டினம்

2. வேதாரண்யம் - வேதாரண்யம்

3. திருவாரூர் - திருவாரூர்

4. நன்னிலம் - நன்னிலம்

5. திருத்துறைப்பூண்டி - திருத்துறைப்பூண்டி (தனி)

6. மன்னார்குடி - கீழ்வேலூர் (தனி)

* நாகப்பட்டினம், வேதாரண்யம், திருவாரூர், நன்னிலம், திருத்துறைப்பூண்டி ஆகிய சட்டசபைத் தொகுதிகள் தொடர்கின்றன. திருத்துறைப்பூண்டி தனித் தொகுதியாக மாறியது.

* கீழ்வேலூர் (தனி) என்ற புதிய சட்டசபைத் தொகுதி இங்கே இணைக்கப்பட்டது.

* நாகப்பட்டிணம் எம்.பி. தொகுதியில் இருந்த மன்னார்குடி சட்டசபைத் தொகுதி தஞ்சாவூர் எம்.பி. தொகுதியில் சேர்க்கப்பட்டது.


30. தஞ்சாவூர் நாடாளுமன்றத் தொகுதி
1. தஞ்சாவூர் - தஞ்சாவூர்

2. திருவோணம் - பேராவூரணி

3. ஒரத்தநாடு - ஒரத்தநாடு

4. திருவையாறு - திருவையாறு

5. பாபநாசம் - பட்டுக்கோட்டை

6. வலங்கைமான் (தனி) - மன்னார்குடி

* தஞ்சாவூர், ஒரத்தநாடு, திருவையாறு, ஆகிய சட்டசபைத் தொகுதிகள் தொடர்கின்றன.

* பேராவூரணி, பட்டுக்கோட்டை ஆகிய சட்டசபைத் தொகுதிகள் புதுக்கோட்டை எம்.பி. தொகுதியில் இருந்தும் மன்னார்குடி சட்டசபைத் தொகுதி நாகை எம்.பி. தொகுதியில் இருந்தும் இங்கே மாற்றப்பட்டன.

* தஞ்சாவூர் எம்.பி. தொகுதியில் இருந்த பாபநாசம் சட்டசபைத் தொகுதி மயிலாடுதுறை எம்.பி. தொகுதியில் சேர்க்கப்பட்டது.

* திருவோணம், வலங்கைமான் (தனி) ஆகிய சட்டசபைத் தொகுதிகள்- நீக்கப்பட்டன.


31. சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதி
1. சிவகங்கை - சிவகங்கை

2. திருப்பத்தூர் - திருப்பத்தூர்

3. காரைக்குடி - காரைக்குடி

4. திருமயம் - திருமயம்

5. இளையான்குடி - ஆலங்குடி

6. திருவாடானை - மானாமதுரை (தனி)

* சிவகங்கை, திருப்பத்தூர், காரைக்குடி, திருமயம், ஆகிய சட்டசபைத் தொகுதிகள் தொடர்கின்றன.

* புதுக்கோட்டை பாராளுமன்ற தொகுதியில் இருந்த ஆலங்குடி சட்டசபைத் தொகுதியும் ராமாநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் இருந்த மானாமதுரை சட்டசபைத் தொகுதியும் இங்கே மாற்றப்பட்டன.

* சிவகங்கை எம்.பி. தொகுதியில் இருந்த திருவாடனை சட்டசபைத் தொகுதி ராமநாதபுரம் எம்.பி. தொகுதிக்கு மாற்றப்பட்டது.

* இளையான்குடி சட்டசபைத் தொகுதி நீக்கப்பட்டது.


32. மதுரை நாடாளுமன்றத் தொகுதி
1. திருப்பரங்குன்றம் - மதுரை (வடக்கு)

2. மதுரை மேற்கு - மதுரை (தெற்கு)

3. மதுரை மத்தி - மதுரை (மையம்)

4. மதுரை கிழக்கு - மதுரை (கிழக்கு)

5. சமயநல்லூர் - மதுரை (மேற்கு)

6. மேலூர் - மேலூர்

* மதுரை மேற்கு, மதுரை மத்தி, மதுரை கிழக்கு, மேலூர் ஆகிய சட்டசபைத் தொகுதிகள் தொடர்கின்றன.

* மதுரை வடக்கு, மதுரை தெற்கு, ஆகிய சட்டசபைத் தொகுதிகள் புதிதாக உருவாக்கப்பட்டன.

* மதுரை எம்.பி. தொகுதியில் இருந்த திருப்பரங்குன்றம் சட்டசபைத் தொகுதி விருதுநகர் எம்.பி. தொகுதியில் சேர்க்கப்பட்டது. சமயநல்லூர் (தனி)- சட்டசபைத் தொகுதி நீக்கப்பட்டது.


33. தேனி நாடாளுமன்றத் தொகுதி
1. தேனி - சோழவந்தான் (தனி)

2. பெரியகுளம் - பெரியகுளம் (தனி)

3. போடிநாயக்கனூர் - போடிநாயக்கனூர்

4. கம்பம் - கம்பம்

5. ஆண்டிபட்டி - ஆண்டிப்பட்டி

6. சேடப்பட்டி - உசிலம்பட்டி

* பெரியகுளம் பாராளுமன்ற தொகுதி தேனி தொகுதியாக மாற்றப்பட்டன.

* நீக்கப்பட்ட பெரியகுளம் எம்.பி. தொகுதியில் இருந்த பெரியகுளம், போடிநாயக்கனூர், கம்பம், ஆண்டிப்பட்டி, ஆகிய சட்டசபைத் தொகுதிகள் தொடர்கின்றன.

* திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் இருந்த உசிலம்பட்டி, சோழவந்தான் (தனி) ஆகிய சட்டமன்ற தொகுதிகள் தேனி எம்.பி. தொகுதியில் சேர்க்கப்பட்டது.

* நீக்கப்பட்ட பெரியகுளம் எம்.பி. தொகுதியில் இருந்த தேனி, சேடப்பட்டி சட்டசபைத் தொகுதிகள் காணாமல் போனது.


34. விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி
1. சாத்தூர் - திருப்பரங்குன்றம்

2. விருதுநகர் - விருதுநகர்

3. சிவகாசி - சிவகாசி

4. ஸ்ரீவில்லிபுத்தூர் - அருப்புக்கோட்டை

5. ராஜபாளையம் - திருமங்கலம்

6. கோவில்பட்டி - சாத்தூர்

* சிவகாசி நாடாளுமன்றத் தொகுதி மாற்றப்பட்டு அதற்கு பதிலாக விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதி புதிதாக உருவாக்கப்பட்டது.

* நீக்கப்பட்ட சிவகாசி எம்.பி. தொகுதியில் இருந்த சாத்தூர், விருதுநகர், சிவகாசி, ஆகிய சட்டசபைத் தொகுதிகள் இங்கு மாற்றப்பட்டன.

* மதுரை எம்.பி. தொகுதியில் இருந்த திருப்பரங்குன்றம் சட்டசபைத் தொகுதியும் ராமநாதபுரம் எம்.பி. தொகுதியில் இருந்த அருப்புக்கோட்டை சட்டசபைத் தொகுதியும் இங்கு மாற்றப்பட்டன. திண்டுக்கல் எம்.பி. தொகுதியில் இருந்த திருமங்கலம் சட்டசபைத் தொகுதி இங்கு மாற்றப்பட்டது.

* நீக்கப்பட்ட சிவகாசி நாடாளுமன்றத் தொகுதியில் இருந்த ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய சட்டசபைத் தொகுதிகள் தென்காசி (தனி) எம்.பி. தொகுதியிலும் கோவில்பட்டி- சட்டசபைத் தொகுதி தூத்துக்குடி எம்.பி. தொகுதியிலும் இணைக்கப்பட்டன.


35. ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதி
1. மானாமதுரை - அறந்தாங்கி

2. பரமக்குடி - பரமக்குடி (தனி)

3. ராமநாதபுரம் - ராமநாதபுரம்

4. கடலாடி - திருச்சுழி

5. முதுகுளத்தூர் - முதுகுளத்தூர்

6. அருப்புக்கோட்டை - திருவாடனை

* பரமக்குடி, ராமநாதபுரம், முதுகுளத்தூர், ஆகிய சட்டசபைத் தொகுதிகள் தொடர்கின்றன.

* சிவகங்கை எம்.பி. தொகுதியில் இருந்த திருவாடனை சட்டசபைத் தொகுதி இங்கே மாற்றப்பட்டது.

* நீக்கப்பட்ட புதுக்கோட்டை எம்.பி. தொகுதியில் இருந்த அறந்தாங்கி சட்டசபைத் தொகுதி இங்கு சேர்க்கப்பட்டது. திருச்சுழி என்ற பெயரில் புதிய சட்டசபைத் தொகுதி உருவாக்கப்பட்டது.

* ராமநாதபுரம் எம்.பி. தொகுதியில் இருந்த மானாமதுரை சட்டசபைத் தொகுதி சிவகங்கை எம்.பி. தொகுதியிலும், அருப்புக்கோட்டை சட்டசபைத் தொகுதி விருந்துநகர் எம்.பி. தொகுதியிலும் சேர்க்கப்பட்டது.

* கடலாடி- சட்டசபைத் தொகுதி நீக்கப்பட்டது.


36. தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி
1. சேரன்மாதேவி - விளாத்திகுளம்

2. நாங்குநேரி - தூத்துக்குடி

3. திருச்செந்தூர் - திருச்செந்தூர்

4. ராதாபுரம் - ஸ்ரீவைகுண்டம்

5. சாத்தான்குளம் - ஓட்டப்பிடாரம் (தனி)

6. கன்னியாகுமரி - கோவில்பட்டி

* திருச்செந்தூர் நாடாளுமன்றத் தொகுதி நீக்கப்பட்டது. அதற்கு பதிலாக புதிதாக தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி புதிதாக உருவானது.

* ஏற்கனவே திருச்செந்தூர் எம்.பி. தொகுதியில் இடம்பெற்றிருந்த திருச்செந்தூர் சட்டசபைத் தொகுதி இங்கே சேர்க்கப்பட்டது.

* திருநெல்வேலி எம்.பி. தொகுதியில் இருந்த விளாத்திகுளம், ஒட்டப்பிடாரம், தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் ஆகிய சட்டசபைத் தொகுதிகள் தூத்துக்குடி எம்.பி. தொகுதிக்கு மாற்றப்பட்டன.

* விருதுநகர் எம்.பி. தொகுதியில் இடம்பெற்ற கோவில்பட்டி சட்டசபைத் தொகுதி இங்கு மாற்றப்பட்டது.

* ஏற்கனவே திருச்செந்தூர் எம்.பி. தொகுதியில் இடம்பெற்றிருந்த சேரன்மாதேவி, நாங்குநேரி, சாத்தான்குளம், ஆகிய சட்டசபைத் தொகுதிகள் நீக்கப்பட்டன.

* ஏற்கனவே திருச்செந்தூர் எம்.பி. தொகுதியில் இடம்பெற்றிருந்த ராதாபுரம் சட்டசபைத் தொகுதி திருநெல்வேலி எம்.பி. தொகுதியில் சேர்க்கப்பட்டது.

* கன்னியாகுமரி சட்டசபைத் தொகுதி கன்னியாகுமரி எம்.பி. தொகுதியில் சேர்க்கப்பட்டது.


37. தென்காசி (தனி) நாடாளுமன்றத் தொகுதி
1. சங்கரன்கோவில் - சங்கரன்கோவில் (தனி)

2. தென்காசி - தென்காசி

3. வாசுதேவநல்லூர் - வாசுதேவநல்லூர் (தனி)

4. கடையநல்லூர் - கடையநல்லூர்

5. ஆலங்குளம் - ராஜபாளையம்

6. அம்பாசமுத்திரம் - ஸ்ரீவில்லிப்புத்தூர் (தனி)

* சங்கரன்கோவில், தென்காசி, வாசுதேவநல்லூர், கடையநல்லூர், ஆகிய சட்டசபைத் தொகுதிகள் தொடர்கின்றன.

* விருதுநகர் எம்.பி. தொகுதியில் இருந்த ஸ்ரீவில்லிப்புத்தூர் (தனி), ராஜபாளையம் ஆகிய சட்டசபைத் தொகுதிகளும் இங்கே மாற்றப்பட்டன.

* தென்காசி எம்.பி. தொகுதியில் இருந்த ஆலங்குளம், அம்பாசமுத்திரம் ஆகிய சட்டசபைத் தொகுதிகள் திருநெல்வேலி எம்.பி. தொகுதிக்கு மாற்றப்பட்டன.


38. திருநெல்வேலி நாடாளுமன்றத் தொகுதி
1. திருநெல்வேலி - திருநெல்வேலி

2. தூத்துக்குடி - அம்பாசமுத்திரம்

3. பாளையங்கோட்டை - பாளையங்கோட்டை

4. ஸ்ரீவைகுண்டம் - நாங்குநேரி

5. ஓட்டப்பிடாரம் (தனி) - ராதாபுரம்

6. விளாத்திகுளம் - ஆலங்குளம்

* திருநெல்வேலி, பாளையங்கோட்டை, ஆகிய சட்டசபைத் தொகுதிகள் தொடர்கின்றன.

* தென்காசி (தனி) எம்.பி. தொகுதியில் இருந்த அம்பாசமுத்திரம், ஆலங்குளம் ஆகிய சட்டசபைத் தொகுதிகள் இங்கு மாற்றப்பட்டன.

* தூத்துக்குடி எம்.பி. தொகுதியில் இருந்த நாங்குநேரி, ராதாபுரம், ஆகிய சட்டசபைத் தொகுதிகள் இங்கு மாற்றபட்டது.

* திருநெல்வேலி எம்.பி. தொகுதியில் இருந்த விளாத்திகுளம், ஒட்டப்பிடாரம், தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் ஆகிய சட்டசபைத் தொகுதிகள் தூத்துக்குடி எம்.பி. தொகுதிக்கு மாற்றப்பட்டன.


39. கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி
1. நாகர்கோவில் - நாகர்கோவில்

2. குளச்சல் - குளச்சல்

3. பத்மநாபபுரம் - பத்மநாபபுரம்

4. திருவட்டார் - கன்னியாகுமரி

5. விளவங்கோடு - விளவங்கோடு

6. கிள்ளியூர் - கிள்ளியூர்

* நாகர்கோவில் நாடாளுமன்றத் தொகுதி மாற்றப்பட்டு புதிதாக கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதி உருவாக்கப்பட்டது.

* நீக்கப்பட்ட நாகர்கோவில் நாடாளுமன்றத் தொகுதியில் இருந்த நாகர்கோவில், குளச்சல், பத்மநாபபுரம், விளவங்கோடு, கிள்ளியூர் ஆகிய சட்டசபைத் தொகுதிகள் இங்கே சேர்க்கப்பட்டன.

* தூத்துக்குடி எம்.பி. தொகுதியில் இருந்த கன்னியாகுமரி சட்டசபைத் தொகுதி இங்கே சேர்க்கப்பட்டது.

* ஏற்கனவே நாகர்கோவில் நாடாளுமன்றத் தொகுதியில் இருந்த திருவட்டார் சட்டசபைத் தொகுதி நீக்கப்பட்டது.

* கரூர் எம்.பி. தொகுதியில் இருந்த அரவக்குறிச்சி, கரூர், கிருஷ்ணராயபுரம், ஆகிய சட்டசபைத் தொகுதிகள் தொடர்கின்றன. கிருஷ்ணராயபுரம் தொகுதி தனித் தொகுதியாக மாற்றப்பட்டது.

* பழனி எம்.பி. தொகுதியில் இருந்த வேடசந்தூர் சட்டசபைத் தொகுதி இங்கு சேர்க்கப்பட்டது.

* மணப்பாறை, விராலிமலை ஆகிய சட்டசபைத் தொகுதிகள் புதிதாக உருவாக்கப்பட்டு இங்கு சேர்க்கப்பட்டது.

* கரூர் எம்.பி. தொகுதியில் இருந்த குளித்தலை சட்டசபைத் தொகுதி பெரம்பலூர் (தனி) எம்.பி. தொகுதியில் சேர்க்கப்பட்டது.

* கரூர் எம்.பி. தொகுதியில் இருந்த மருங்காபுரி, தொட்டியம் ஆகிய சட்டசபைத் தொகுதிகள்- நீக்கப்பட்டன.

Comments

Popular posts from this blog

திருநெல்வேலி மாவட்ட தொகுதிகள் எல்லை

1. சங்கரன்கோவில் (தனி) தொகுதி சங்கரன்கோவில் தாலுக்கா (பகுதி) கலிங்கப்பட்டி, சுப்பையாபுரம், சத்திரப்பட்டி, வரகனூர், முக்கூடுமலை, இளையரசனேந்தல், புளியங்குளம், சித்திரம்பட்டி, அப்பனேரி, அய்யனேரி, நக்கலமுத்தன்பட்டி, நடுவப்பட்டி, மைப்பறை, சங்குப்பட்டி, வெள்ளாகுளம், அ.கரிசல்குளம், குலசேகரப்பேரி, காரிச்சாத்தான், சத்திரங்கொண்டான், கல்ப்பகுளம், பெருங்கோட்டூர், அழகாபுரி, வடக்கு குருவிகுளம், குருஞ்சாகுளம், சுந்தரேசபுரம், குளக்கட்டாகுறிச்சி, வடக்குப்பட்டி, பிச்சைத்தலைவன்பட்டி, பிள்ளையார்நத்தம், ஜமீந்தேவர்குளம், அத்திப்பட்டி, இராமலிங்கபுரம், தெற்கு குருவிகுளம், வாகைகுளம், நாலுவாசன்கோட்டை, செவல்குளம், மலையாங்குளம், தெற்கு சங்கரன்கோவில், பெரியகோவிலாங்குளம், கோ.மருதப்பபுரம், இலந்தைகுளம், உசிலங்குளம், பழங்கோட்டை, கே.ஆலங்குளம், செட்டிகுளம், மகேந்திரவாடி, களப்பாளங்குளம், நாலாந்துலா, கே.கரிசல்குளம், சாயமலை, மருதங்கிணறு, கீழநீலிதநல்லூர், மேலநீலிதநல்லூர், குருக்கள்பட்டி, சின்னகோவிலான்குளம், நடுவக்குறிச்சி (மைனர்), நடுவக்குறிச்சி (மேஜர்), பட்டாடைக்கட்டி, குலசேகரமங்கலம் சேத்தமங்கலம், வெள்ளாளங்குளம், ஈச்சண்டா

புதுக்கோட்டை மாவட்ட தொகுதிகள் எல்லை

1. கந்தர்வக்கோட்டை (தனி) தொகுதி கந்தர்வகோட்டை தாலுக்கா, குளத்தூர் தாலுக்கா (பகுதி) செட்டிபட்டி, வெள்ளைபிள்ளையார்பட்டி, கண்ணன்குடி, செங்கலூர், காட்டுக்கோட்டைபட்டி, கிள்ளுக்கோட்டை, உலகன்காத்தான்பட்டி, கிள்ளுக்குவளவாய்ப்பட்டி, ராகத்தான்பட்டி, கீழையூர், விசலூர், புலியூர், கீரனூர், நஞ்சூர், மருதூர், வலியம்பட்டி, ஒடுகம்பட்டி, உடையாளிப்பட்டி, குன்னாண்டார்கோயில், தெம்மாவூர், மின்னாத்தூர், வத்தனாக்கோட்டை, பெரம்பூர், கிள்ளனூர், வீரக்குடி, கடம்பவயல், மங்கத்தேவன்பட்டி, பிரகதாம்பாள்புரம், நார்த்தமலை, அம்மாசத்திரம், உப்பிலியக்குடி, வாழங்களம், சீமானூர், சினையக்குடி, அண்டக்குளம், சாத்தினிப்பட்டி, வைத்தூர், சிரங்கன்பட்டி, உச்சணி, தென்னங்குடி, மூட்டாம்பட்டி, நரங்கியன்பட்டி, வத்தனாக்குறிச்சி, துடையூர், சத்தியமங்கலம், இறம்பாளி, மேலூர், வெள்ளனூர், முட்டுக்காடு, வேங்கைவயல் மற்றும் பூங்குடி கிராமங்கள். கீரனூர் (பேரூராட்சி), ஆலங்குடி தாலுக்கா (பகுதி) தட்டாமணைப்பட்டி, கீரத்தூர், கிளாங்காடு, முதலிப்பட்டி, செங்கமேடு, கல்லுமடை, பாப்பாபட்டி, ரெகுநாதபுரம், புதுவிடுதி, பெயாடிப்பட்டி, திருப்பாகோவில், ஒடப்பவிடுதி, சி