* போலீஸ் அனுமதியுடன் நடத்தப்படும் பொதுக் கூட்டங்களில் ரகளை செய்யக்கூடாது. மீறிச் செய்தால் அது 6 மாத தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும்.
* ஓட்டுப் பதிவுக்கு 24 மணி நேரத்திற்கு முன்பு தேர்தல் பிரசாரத்தை முடிக்க வேண்டும். மீறிபிரசாரம் செய்தால் 2 ஆண்டு வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும்.
* வேட்பாளருக்காக வேறு யாரும் செலவு செய்யக் கூடாது. அப்படிச் செய்தால் அதுசட்டப்படி குற்றமாகும்.
* கள்ள ஓட்டுப்போட்டால் 1 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை கிடைக்கும்.
* ஓட்டுப் போட வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பவர்களுக்கு 1 ஆண்டு சிறைத் தண்டனை கிடைக்கும்.
* வாக்காளர்களை வாகனங்களில் ஓட்டுச் சாவடிக்குஅழைத்துச் செல்பவர்களுக்கு 3 மாத கடுங்காவல் தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படும்.
* ஓட்டுச் சாவடி ஊழியரோ அல்லது காவலில் நிற்கும் போலீஸாரோ குறிப்பிட்ட வேட்பாளருக்கு ஆதரவாக பேசினாலோ அல்லது ஓட்டுப் போடும்படி தூண்டினாலோ 6 மாத கடுங்காவல் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டுமோ சேர்த்து விதிககப்படும்.
* வாக்குச் சாவடி தலைமை அதிகாரிக்குக் கீழ்படிய மறுத்து கலாட்டா, ரகளைசெய்பவர்களுக்கு 3 மாத கடுங்காவல் தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படும்.
* ஓட்டுச் சாவடி அருகே சொந்தக் கட்டடங்களில் நின்று கொண்டு ஒலிபெருக்கி மூலம்பிரசாரம் செய்தால் 3 மாத கடுங்காவல் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்.
Comments