Skip to main content

Posts

Showing posts from March, 2020

``பொது வாழ்க்கைக்கு வர ஆசைப்பட்டதில்லை!'' - ஜெயலலிதாவிடம் சசிகலா `பொய் சொன்ன' தினம் இன்று!

2020 மார்ச் 28-ம் தேதி விகடன் இணையத் தளத்தில் எழுதப்பட்ட கட்டுரை! `அரசியல் ஆசை இல்லை... கட்சிப் பதவிக்கு வர விரும்பவில்லை... எம்.எல்.ஏ ஆக வேண்டும் என்ற எண்ணம் இல்லை... அமைச்சர் பதவி வேண்டாம்’ என்றெல்லாம் ஜெயலலிதாவிடம் சசிகலா பொய் சொன்ன தினம் இன்று. எதற்காக சசிகலா இந்தப் பொய்யைச் சொன்னார்? ``கனவிலும் அக்காவுக்கு நான் துரோகம் நினைத்ததில்லை'' ``என் உறவினர்கள் செய்தது மன்னிக்க முடியாத துரோகம்'' ``உறவினர்களுடன் எனக்கு ஒட்டுமில்லை; உறவுமில்லை'' ``பொது வாழ்வில் பங்கு பெறவேண்டும் என்ற ஆசை இல்லை'' - இவையெல்லாம் சசிகலா உதிர்த்த வார்த்தைகள். இந்தப் பொன் முத்துகள் உதிர்ந்த தினம் இன்று! ஜெயலலிதா, சசிகலா ``அக்கா... கோட்டைக்குக் கிளம்பிட்டிங்களா. மதிய சாப்பாட்டுக்கு என்ன வேண்டும்?'' என ஜெயலலிதாவிடம் அனுதினமும் சசிகலா கேட்டுக்கொண்டிருந்த காலம் அது! 1988-ம் ஆண்டிலிருந்து ஜெயலலிதாவின் கட்சியையும் ஆட்சியையும் சசிகலா குடும்பம் பங்கு போட்டுக்கொண்டிருந்தபோது, இடையில் ஒரு சறுக்கல். ஜெயலலிதா ஆட்சியைக் கைப்பற்ற ச

கொரோனா தடுப்பு... முன்பு சொன்ன 2,000 ரூபாயையும் சேர்த்துக் கொடுங்க எடப்பாடியாரே!

விகடன் இணையத் தளத்தில் 2020 மார்ச் 27-ம் தேதி எழுதப்பட்ட கட்டுரை! கொரோனா தடுப்பு நடவடிக்கையால் இழப்பு ஏற்பட்டவர்களுக்கு தரப்படும் ஆயிரம் ரூபாயுடன், நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் தருவதாக சொன்ன இரண்டாயிரம் ரூபாயை எடப்பாடி அரசு சேர்த்து தருமா? கொரோனா தடுப்பு நடவடிக்கையால் ஏற்படும் பொருளாதார இழப்பைச் சமாளிக்க அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்  என அறிவித்திருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அதோடு, ``அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களுக்கும் அவர்களுக்கு உரித்தான ஏப்ரல் மாதத்திற்கான அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் மற்றும் சர்க்கரை விலையின்றி வழங்கப்படும்'' எனவும் சொல்லியிருக்கிறார். பணத்தைப் பெறுவதற்காக ரேஷன் கடைகளில் மக்கள் கூடுவார்களே? இதை எப்படி வழங்கப் போகிறார்கள்? ரேஷன் கடைகளில் கூட்டத்தைத் தவிர்க்க டோக்கன் முறையில், ஒதுக்கப்பட்ட நாளில் நிவாரணம் விநியோகிக்கப்படும் எனச் சொல்லியிருக்கிறார்கள். ரேஷன் கடை இதுதவிர கட்டடத் தொழிலாளர்கள் மற்றும் ஓட்டுநர் நல வாரியத்தில் உள்ள ஆட்டோ தொழிலாளர்கள் குடும்பங்களுக்குச் சிறப்பு