''கடந்த 5 வருடமாக தமிழகத்தில் என்ன நடந்தது? சட்டசபையில் ஜனநாயகத்துக்கே இடமில்லாமல் போனது. அரசு ஊழியர்களை கூண்டோடு சிறையில் போட்டார்கள். கல்வியையும் சுகாதாரத்தையும் தனியாரிடம் தாரை வார்த்துவிட்டார்கள். 500க்கும் மேற்பட்ட ஆரம்பப் பள்ளிகளை மூடிவிட்டார் ஜெயலலிதா. பிக்பாக்கெட் அடிப்பது மாதிரி மக்களுக்குத் தரப்பட்ட பல சலுகைளைப் பறித்துக் கொண்டார் ஜெயலலிதா. அந்த பிக்பாக்கெட்டுக்கு கூட்டாளியாக சேர்ந்திருக்கிறார் வைகோ. ஜெயலலிதா அரசை பாஸிஸ ஆட்சி என்று சொன்னவர் வைகோ. நாங்கள் கூட அப்படிச் சொல்லவில்லை. ஜெயலலிதாவைத் தோற்கடிப்பது ஏதேச்சதிகாரத்தை தோற்கடிப்பது மாதிரி. அதைச் செய்து காட்டுங்கள்'' - கடந்த 2006 தேர்தலில் ஏப்ரல் 5, 2006 அன்று சென்னை சைதாப்பேட்டை பிரச்சார கூட்டத்தில் மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி பேசியது.
ஜெயலலிதா-வைகோ கூட்டணியை பிக்பாக்கெட் கூட்டணி என்று கடந்த தேர்தலில் வர்ணித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டுதான் இந்த தேர்தலில் போயஸ் கார்டன் படிக்கட்டுகளில் ஏறி இறங்கி கொண்டிருக்கிறார்கள். பாவம் காம்ரேட்டுகள்.

Comments