''உள்ளாட்சித் தேர்தலில் பா.ம.க. வேட்பாளர்கள் பல இடங்களில் தோற்கடிக்கப்பட்டுள்ளனர். கூட்டணி தர்மத்தை தி.மு.க.வினர் கடைப்பிடிக்கவே இல்லை. இதை நாங்கள் சுட்டிக் காட்டி அறிக்கை வெளியிட்டால், நான்கு சுவர்களுக்குள் நடந்ததை வெளியில் சொல்லக்கூடாது என்கிறார் கலைஞர். வெளியில் சொல்லாவிட்டால் எங்கே போய்ச் சொல்வது?
இத்தனை தவறுகள் நடந்துள்ளன என்று நாங்கள் கூறியபோதிலும் கூட அதை ஏற்றுக் கொள்ளாமல், தவறுகளையெல்லாம் அவர்கள் செய்து விட்டு, பச்சை துரோகம் செய்து விட்டு, எங்கள் மீதே குற்றம் சாட்டுகிறார் கலைஞர். இதை வெளியில் வேறு சொல்லக் கூடாது என்றும் கூறுகிறார்.
தொகுதிப் பங்கீட்டு ஒப்பந்தத்தை தி.மு.க. அமைச்சர்களும், மாவட்டச் செயலாளர்களும் மதிக்கவே இல்லை.எங்களை இழிவுபடுத்தி விட்டனர். பா.ம.க.வினருக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் தி.மு.க. போட்டி வேட்பாளர்கள் போட்டியிடப் போவதை முன்கூட்டியே உளவுத்துறை மூலம் அறிந்து கொண்ட கருணாநிதி, அதைத் தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதேபோல 6 மாநகராட்சிகளிலும் துணை மேயர் பதவிகளை பா.ம.க.வுக்கு தருவதாக கூறியிருந்தார் கருணாநிதி. ஆனால் தேர்தலில் வெற்றி பெற்றவுடன் அந்த உடன்பாட்டையும் குழி தோண்டிப் புதைத்து விட்டார்.
உள்ளாட்சித் தேர்தலில் எங்களுக்கு அதிருப்தி உள்ளது உண்மைதான். ஆனால் தி.மு.க. ஆட்சிக்கு எங்களால் எந்தப் பாதகம் ஏற்படாது. இறுதி வரை திமுக ஆட்சிக்கு ஆதரவு தருவோம்.'' - 2006 உள்ளாட்சித் தேர்தலின் போது ராமதாஸ் அளித்த பேட்டி (2006 அக்டோபர் 30)

பச்சை துரோகம் செய்த தி.மு.க.வோடு மீண்டும் கூட்டணி சேர்ந்தது இருக்கட்டும். இந்த தேர்தலுக்கு பிறகு இதே டயலாக்கை இன்னொரு முறை சொல்லுவீங்களா டாக்டர்.
Comments