Skip to main content

கருணாநிதியின் தங்க கிரீடம் 55 லட்சத்துக்கு ஏலம் போனது!

சிலம்புச் செல்வர் ம.பொ.சி.யின் சிலையை முதல்வர் கருணாநிதி இன்று (பிப்ரவரி 9) திறந்து வைத்தார். மூன்று நாட்களுக்கு முன்பு சென்னை சைதாப்பேட்டையில் நடந்த தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் கருணாநிதி தங்க கிரிடமும் தங்க வாளும் பரிசளிக்கப்பட்டது. அதனை சிலை திறப்பு விழாவில் கருணாநிதி முன்பு ஏலம் விட்டார்கள். காமராஜ் என்பவர் அதை 55 லட்சத்திற்கு ஏலம் எடுத்தார். இந்த தொகையை ம.பொ.சி.யின் குடும்பத்தினருக்கு வழங்க போகிறார்கள்.

சிலை திறப்பு விழாவில் கருணாநிதி ஆற்றிய‌ உரை:

சிலம்புச் செல்வர் ம.பொ.சி. அவர்களுக்குச் சிலை எடுக்க வேண்டும் என்ற எண்ணம் நீண்ட காலமாக எனக்கும், என்னைச் சார்ந்தவர்களுக்கும் குறிப்பாக தி.மு. கழகத்தில் உள்ள எங்கள் அனைவருக்கும் இருந்து வந்தது என்றாலுங்கூட,  இன்றைக்கு அந்தச் சிலையை அமைக்கின்ற அந்த வாய்ப்பு இன்றைக்குக் கிடைத்து - அவருடைய குடும்பத்தாரும் நலமுடன் வாழ, மகிழ்வுடன் வாழ எங்களால் இயன்ற இந்த உதவியைச் செய்கின்ற வாய்ப்பையும் நாங்கள் பெற்றிருக்கிறோம்.

தமிழைக் காக்க - தமிழர்களைக் காப்பாற்ற -  தமிழ்நாட்டை வளம் பெற்ற நாடாக ஆக்க - நம்மை நாமே தயார்படுத்திக் கொள்ள நம்முடைய தன்னலத்தின் காரணமாக, அவரை நாம் இன்றைக்கு நினைத்துப் போற்றுகிறோம், பாராட்டுகிறோம் என்று சொன்னால், அதை யாரும் மறுப்பதற்கில்லை.  தமிழகத்திலே ஈடு இணையற்ற தமிழ்ச் செம்மல்களில் ஒருவராகத் திகழ்ந்து இன்றளவும் நம்முடைய நெஞ்சில் நிலைபெற்று வாழ்கின்றார் சிலம்புச் செல்வர் ம.பொ.சி. என்று சொன்னால், அது மிகையாகாது.

தமிழகத்திலே வாழ்ந்து மறைந்த பல பெரும்புலவர்கள்,  தமிழறிஞர்கள், தியாகச் செம்மல்கள் அவர்களையெல்லாம் மறவாமல், அவர்களுக்கு - அவர்களுடைய குடும்பத்தாருக்கு நிதி உதவி,  வாழ்வாதாரத்திற்கான பல  உதவிகள் - இவைகளையெல்லாம் செய்து கடமையாற்றி வருவது இந்த அரசு.

திராவிட முன்னேற்றக் கழக அரசைப் பொறுத்தவரையில், தியாகிகளை -  அவர்கள் எந்தக் கட்சியைச் சார்ந்தவர்களாக இருந்தாலும், எந்த இயக்கத்திற்காகப் பாடுபட்டவர்களாக இருந்தாலும், அவர்களை மறப்பதில்லை -  அவர்களுக்கு மரியாதை செய்யத் தயங்குவதில்லை.

ம.பொ.சி. குடும்பத்திற்கு தங்க வாள் -  தங்க மகுடம் எனக்குத் தரப்பட்டவைகளை பரிசாக வழங்கி - அதை நிதியாக மாற்றி அவருடைய குடும்பத்திற்கு அதைப் பயன்படுத்த வேண்டுமென்று விரும்பி அதை இன்றைக்கு ஏலம் விட்டிருக்கிறோம்.  அதை 55 இலட்சம் ரூபாய்க்கு காமராஜ் என்ற இளைஞர் ஏலம் எடுத்திருக்கிறார்.  வேடிக்கை பாருங்கள் -  ம.பொ.சி. விழாவில் - கருணாநிதி ஏலம் விட - அதைக் காமராஜர் வாங்க இந்த அரசியல் ஒற்றுமை எதிர்காலத்திலே மாத்திரமல்ல -  நிகழ் காலத்திலும் நிலவிட வேண்டும் - எதிர்காலத்திலும் வளர்ந்திட வேண்டும்.

Comments

இந்த காமராஜ் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகனின் மச்சான்,ஸ்பெக்ட்ரம் ஊழல் பணம் வெள்ளையாக மாறுகிறது,அரசே உஷார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
இந்த காமராஜ் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகனின் மச்சான்,ஸ்பெக்ட்ரம் ஊழல் பணம் வெள்ளையாக மாறுகிறது,அரசே உஷார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

Popular posts from this blog

எப்படி நடந்தது தொகுதி மறுசீரமைப்பு ?

தொகுதி மறுசீரமைப்பு செய்வதற்கு முன்பும் பின்பும் தொகுதிகள் எப்படி மாறியிருக்கின்றன என்பது பற்றி, தமிழக நாடாளுமன்ற தொகுதிகளில் அடங்கியிருக்கும் சட்டசபைத் தொகுதிகள் வாரியாக, இங்கே அலசப்பட்டிருக்கிறது. ஏற்கனவே இருந்த தொகுதிகளும் இப்போது மாற்றப்பட்டிருக்கும் தொகுதிகளின் பட்டியல்.. 1. திருவள்ளூர் (தனி) நாடாளுமன்றத் தொகுதி 1. பழனி - கும்மிடிப்பூண்டி (தனி) 2. ஒட்டன்சத்திரம் - பொன்னேரி 3. வேடசந்தூர் - பூந்தமல்லி (தனி) 4. காங்கேயம் - மாதவரம் 5. நத்தம் - திருவள்ளூர் 6. வெள்ளைக்கோவில் - ஆவடி * புதிதாக திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதி உருவானது. * ஸ்ரீபெரும்புதூர் எம்.பி. தொகுதியில் இருந்த கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, பூந்தமல்லி, திருவள்ளூர், ஆகிய சட்டசபைத் தொகுதிகள் இங்கே சேர்க்கப்பட்டது. * புதிதாக உருவாக்கப்பட்ட மாதவரம், ஆவடி சட்டசபைத் தொகுதிகள் இங்கே இணைக்கப்பட்டன.

திருநெல்வேலி மாவட்ட தொகுதிகள் எல்லை

1. சங்கரன்கோவில் (தனி) தொகுதி சங்கரன்கோவில் தாலுக்கா (பகுதி) கலிங்கப்பட்டி, சுப்பையாபுரம், சத்திரப்பட்டி, வரகனூர், முக்கூடுமலை, இளையரசனேந்தல், புளியங்குளம், சித்திரம்பட்டி, அப்பனேரி, அய்யனேரி, நக்கலமுத்தன்பட்டி, நடுவப்பட்டி, மைப்பறை, சங்குப்பட்டி, வெள்ளாகுளம், அ.கரிசல்குளம், குலசேகரப்பேரி, காரிச்சாத்தான், சத்திரங்கொண்டான், கல்ப்பகுளம், பெருங்கோட்டூர், அழகாபுரி, வடக்கு குருவிகுளம், குருஞ்சாகுளம், சுந்தரேசபுரம், குளக்கட்டாகுறிச்சி, வடக்குப்பட்டி, பிச்சைத்தலைவன்பட்டி, பிள்ளையார்நத்தம், ஜமீந்தேவர்குளம், அத்திப்பட்டி, இராமலிங்கபுரம், தெற்கு குருவிகுளம், வாகைகுளம், நாலுவாசன்கோட்டை, செவல்குளம், மலையாங்குளம், தெற்கு சங்கரன்கோவில், பெரியகோவிலாங்குளம், கோ.மருதப்பபுரம், இலந்தைகுளம், உசிலங்குளம், பழங்கோட்டை, கே.ஆலங்குளம், செட்டிகுளம், மகேந்திரவாடி, களப்பாளங்குளம், நாலாந்துலா, கே.கரிசல்குளம், சாயமலை, மருதங்கிணறு, கீழநீலிதநல்லூர், மேலநீலிதநல்லூர், குருக்கள்பட்டி, சின்னகோவிலான்குளம், நடுவக்குறிச்சி (மைனர்), நடுவக்குறிச்சி (மேஜர்), பட்டாடைக்கட்டி, குலசேகரமங்கலம் சேத்தமங்கலம், வெள்ளாளங்குளம், ஈச்சண்டா

புதுக்கோட்டை மாவட்ட தொகுதிகள் எல்லை

1. கந்தர்வக்கோட்டை (தனி) தொகுதி கந்தர்வகோட்டை தாலுக்கா, குளத்தூர் தாலுக்கா (பகுதி) செட்டிபட்டி, வெள்ளைபிள்ளையார்பட்டி, கண்ணன்குடி, செங்கலூர், காட்டுக்கோட்டைபட்டி, கிள்ளுக்கோட்டை, உலகன்காத்தான்பட்டி, கிள்ளுக்குவளவாய்ப்பட்டி, ராகத்தான்பட்டி, கீழையூர், விசலூர், புலியூர், கீரனூர், நஞ்சூர், மருதூர், வலியம்பட்டி, ஒடுகம்பட்டி, உடையாளிப்பட்டி, குன்னாண்டார்கோயில், தெம்மாவூர், மின்னாத்தூர், வத்தனாக்கோட்டை, பெரம்பூர், கிள்ளனூர், வீரக்குடி, கடம்பவயல், மங்கத்தேவன்பட்டி, பிரகதாம்பாள்புரம், நார்த்தமலை, அம்மாசத்திரம், உப்பிலியக்குடி, வாழங்களம், சீமானூர், சினையக்குடி, அண்டக்குளம், சாத்தினிப்பட்டி, வைத்தூர், சிரங்கன்பட்டி, உச்சணி, தென்னங்குடி, மூட்டாம்பட்டி, நரங்கியன்பட்டி, வத்தனாக்குறிச்சி, துடையூர், சத்தியமங்கலம், இறம்பாளி, மேலூர், வெள்ளனூர், முட்டுக்காடு, வேங்கைவயல் மற்றும் பூங்குடி கிராமங்கள். கீரனூர் (பேரூராட்சி), ஆலங்குடி தாலுக்கா (பகுதி) தட்டாமணைப்பட்டி, கீரத்தூர், கிளாங்காடு, முதலிப்பட்டி, செங்கமேடு, கல்லுமடை, பாப்பாபட்டி, ரெகுநாதபுரம், புதுவிடுதி, பெயாடிப்பட்டி, திருப்பாகோவில், ஒடப்பவிடுதி, சி