உள் நாட்டு பாதுகாப்பு தொடர்பாக டெல்லியில் நடைபெறும் முதல்வர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக முதல்வர் கருணாநிதி நேற்று (ஜனவரி 30) டெல்லி சென்றார். அங்கே பத்திரிகையாளர்களுக்கு கருணாநிதி பேட்டி அளித்த போது வரும் சட்டசபைத் தேர்தலில் தி.மு.க. அணியில் பா.ம.க. இடம் பெறும் என்று கருணாநிதி தெரிவித்தார். இந்த நிலையில் திங்கள் கிழமை காலையில் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்தார்.
சோனியா சந்திப்பு மாலையில் நடப்பதற்கு முன்பே ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் திடிரென்று ராசாவை அழைத்து சி.பி.ஐ. விசாரித்தது. அதோடு ஸ்பெக்ட்ரம் தொடர்பாக அமைக்கப்பட்ட நீதிபதி சிவராஜ் பாட்டீல் தனது அறிக்கையை பிரதமரிடம் வழங்கினார். இந்த பரபரப்புக்கு இடையே சோனியாவை சந்தித்து கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தினார்.
சோனியா காந்தியை அவரது இல்லத்தில் சந்தித்து முக்கால் மணி நேரத்திற்கு மேல் உரையாடினார். அப்போது நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர். பாலு, மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி ஆகியோர் உடன் இருந்தனர். இந்தச் சந்திப்புக்குப் பின் முதலமைச்சர் கருணாநிதி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
கேள்வி: சோனியா காந்தியை சந்தித்த போது என்ன பேசினீர்கள், எவ்வளவு நேரம் பேசினீர்கள், அதன் விவரம் கூற முடியுமா?
பதில்: சோனியா காந்தி அம்மையாருடன் முக்கால் மணி நேரம் விவாதித்தோம். காங்கிரஸ், திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணி தொடருகிறது. தொகுதிகளைப் பற்றி விவரங்கள், எண்ணிக்கை பற்றி விவாதிக்க காங்கிரஸ் சார்பில் ஒரு குழுவினை அமைக்கிறார்கள். அந்தக் குழுவில் யார் யார் இடம் பெறுவார்கள் என்பதை விரைவில் அறிவிப்பார்கள். அதன் பிறகு எங்களுடைய கூட்டணிப் பணிகள் தொடரும்.
கேள்வி : அந்தக் குழுவின் கூட்டம் எப்போது நடைபெறும்?
பதில்: குழு அமைத்த பிறகு.
கேள்வி : பேச்சுவார்த்தை எப்படி இருந்தது?
பதில்: திருப்திகரமாக அமைந்தது.
இப்படி கருணாநிதி சொன்னாலும் பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லையாம். 80 தொகுதிகள் வரை தர வேண்டும் என்று காங்கிரஸ் விடப்பிடியாக இருக்கிறதாம். அதனால்தான் குழு அமைக்கப்பட்டிருக்கிறது என்று கருணாநிதி சொல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்.

Comments