Skip to main content

கூட்டணியில் பா.ம.க. விலகல்: சென்னை திரும்பிய கருணாநிதி பேட்டி

உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பாகவும் காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணி பேச்சுவார்த்தைக்காகவும் டெல்லி போன முதல்வர் கருணாநிதி இன்று (பிப்ரவரி 1) சென்னை திரும்பினார். அதன்பிறகு அறிவாலயத்தில் கருணாநிதி பேட்டி அளித்தார். அதன் விவரம்:

கேள்வி: உங்கள் டெல்லிப் பயணம் எப்படி அமைந்தது?

பதில்: வானம் நிர்மலமாக இருந்தது - வழியில் தடைகள் எதுவும் இல்லை - பொதுவாக நன்றாக பயணம் அமைந்தது.


கேள்வி: கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையில் எந்த அளவுக்கு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது? காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை இடங்கள் என்று பேசப்பட்டதா?

பதில்: காங்கிரசும், திராவிட முன்னேற்றக் கழகமும் அணி சேர்ந்த இந்தத் தேர்தலில் போட்டியிடுவது என்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. எத்தனை இடங்கள், யார் யாருக்கு என்னென்ன தொகுதிகள் என்பனவற்றை தி.மு.கழகத்தின் தேர்தல் பணிக் குழுவோடு கலந்து பேசி திராவிட முன்னேற்றக் கழகமும், காங்கிரசும் அந்த விவரங்களை பிறகு அறிவிக்கும். நாளை அல்லது நாளை மறுநாள் காங்கிரஸ் கட்சியினுடைய குழுவிலே உள்ளவர்களின் பெயர்கள் அறிவிக்கப்படக் கூடும். திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரையில் நான் பொதுச் செயலாளரோடு கலந்து பேசி மற்ற கட்சிகளோடு தொகுதி பங்கீடு குறித்து பேசுகின்ற குழுவிலே யார் யார் இடம் பெறுவார்கள் என்பதை அறிவிப்பேன்.

கேள்வி: எத்தனை நாட்களுக்குள் தி.மு.கழகக் குழு அறிவிக்கப்படும்?

பதில்: இப்போதுதானே டெல்லியிலிருந்து வந்திருக்கிறேன். பொதுச் செயலாளரோடு கலந்து பேசி அறிவிப்பேன்.

கேள்வி: சட்டசபை தேர்தல் முடிவுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சிக்கு ஆட்சியிலே பங்கு கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை உங்களிடம் வைக்கப்பட்டிருப்பதாக செய்தி ஏடுகளிலே வந்து கொண்டிருக்கிறதே, அது சரியா தவறா?

பதில்: இதுவரையில் அது பற்றிய பேச்சு எதுவும் இல்லை.

கேள்வி: பா.ம.க. உங்கள் கூட்டணியில் இருப்பதாக நீங்கள் டெல்லி சென்றவுடன் சொன்னீர்கள். ஆனால் டாக்டர் ராமதாஸ் அன்றிரவே அதை மறுத்து விட்டார். அதைப் பற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

பதில்: சந்தர்ப்ப சூழ்நிலைகள் அவர்கள் சார்பில் பொறுப்பிலே உள்ளவர்கள் எங்களிடம் கொண்ட தொடர்புகள் இவற்றை வைத்து பா.ம.க. வும் தி.மு.க. கூட்டணியில் இடம் பெறக் கூடும் என்பதை டெல்லியிலே அனுமானமாகக் கூறினேன். அதை பா.ம.க. வின் தலைவர் மறுத்திருக்கிறார் என்பதை நானும் டெல்லியிலே பத்திரிகைகளிலே பார்த்தேன். அதற்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை.
சென்னை விமான நிலையத்தில் வரவேற்பு


கேள்வி: சில மாதங்களுக்கு முன்பு பா.ம.க. சார்பில் உங்கள் கூட்டணியில் இடம் பெற வேண்டுமென்று கடிதமே எழுதினார். அதற்குப் பிறகு சில பேச்சுவார்த்தையும் நடந்தது. முதலில் உங்கள் கூட்டணியில் இடம் பெற விருப்பம் தெரிவித்து விட்டு,  தற்போது மறுக்க வேண்டிய அவசியம் என்ன?

பதில்: இது இங்கே கேட்க வேண்டிய கேள்வி அல்ல.

கேள்வி: பா.ம.க. நேரடியாக காங்கிரசுடன் கூட்டணி வைக்க நீங்கள் உடன்படுவீர்களா?

பதில்: அவர்கள்தான் தி.மு.க.வுடன் கூட்டணி இல்லை என்று சொல்லிவிட்டார்கள். தி.மு.க.வுடன் அணி சேருவது பற்றி அவர்கள் உறுதியாக எதுவும் சொல்லவில்லை. அவர்கள் கட்சியிலே உள்ள பல்வேறு மட்டங்களில் பேசித்தான் முடிவெடுக்க வேண்டுமென்கிறார்கள்.

கேள்வி: தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. இடம் பெற இன்னமும் வாய்ப்பு இருக்கிறது என்று கருதுகிறீர்களா?

பதில்: நாங்கள் இருப்பதாகச் சொன்னதை அவர் இல்லை என்று மறுத்த பிறகு, இந்தக் கேள்விக்கே இடம் இல்லை.

கேள்வி: டெல்லியில் மீனவர்கள் பிரச்சினை குறித்து என்ன பேசினீர்கள்?

பதில்: மீனவர்கள் பிரச்சினை குறித்து இன்று காலையில் டெல்லியில் நடைபெற்ற முதல் அமைச்சர்கள் மாநாட்டிலே விரிவாகப் பேசி யிருக்கிறேன். அதற்கு முன்பு நேற்று பகலில் பிரதமரிடமும் அதைப் பற்றிப் பேசியிருக்கிறேன்.  இன்றைய மாநாட்டிலும் அதை வலியுறுத்தி பேசி உடனடி நடவடிக்கை வேண்டுமென்று குறிப்பிட்டிருக்கிறேன். இன்று மதியம் மத்திய வெளி உறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா வும் வெளி விவகாரத் துறை செயலாளர் நிருபமா ராவவும் என்னை தமிழ்நாடு இல்லத்திலே சந்தித்து வெளி விவகாரத் துறை செயலாளர் இலங்கை சென்று வந்த விவரங்களையெல்லாம் கூறினார்கள். வெளி விவகாரத் துறை அமைச்சரும், அந்தத் துறையின் செயலாளரும் இலங்கைப் பிரச்சினையில் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்வார்கள் என்று நம்புகிறேன்.

கேள்வி: இலங்கைக்கும் தமிழக மீனவர்களுக்கும் இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்படும் என்று நிர்பமா ராவ் சொல்லியிருக்கிறார்கள். அந்த ஒப்பந்தத்தில் கச்சத்தீவு அருகே மீன் பிடிப்பது குறித்து இடம் பெறுவதற்கான வாய்ப்பு இருக்கிறதா?

பதில்: அப்படியொரு ஒப்பந்தம் போடப்படுகின்ற சூழ்நிலை ஏற்படுமேயானால்  கச்சத்தீவு பற்றியும் அதிலே இடம் பெற வேண்டும் என்பதை நாங்கள் வலியுறுத்துவோம்.

கேள்வி: டெல்லிப் பயணம் அரசு ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும்  வெற்றிகரமாக அமைந்தது என்று கருதுகிறீர்களா?

பதில்: நிச்சயமாக.

கேள்வி: திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில் புதிய கட்சிகள் வர வாய்ப்பு இருக்கிறதா?

பதில்: தேர்தல் வந்தால் புதிய கட்சிகள் வருவது இயற்கைதானே!

கேள்வி: மீனவர்கள் இனிமேல் தாக்கப்பட மாட்டார்கள் என்று உறுதிமொழி ஏதாவது கொடுக்கப்பட்டதா?

பதில்: தாக்கப்பட்டால் அதற்கு தீவிரமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொல்லியிருக்கிறார்கள்.

கேள்வி: இதற்கு முன்பு எம்.கே. நாராயணன் ஒரு முறை இலங்கைக்குச் சென்று விட்டு வந்து இப்படித் தான் சொன்னார்கள். ஆனால் அதற்குப் பிறகும் தொடர்ந்து மீனவர்கள் மீது தாக்குதல் நடக்கிறதே?

பதில்: தாக்குதல் நடக்கும்போது நாம் கண்டிக்கிறோம். இதற்கு மேலும் நடந்தால் அது பற்றி எப்படிப்பட்ட தீவிர நடவடிக்கைகள் எடுக்கலாம் என்று யோசிப்போம்.

கேள்வி: வெளி விவகாரத் துறை செயலாளரின் இலங்கைப் பயணம் கண் துடைப்பு என்று பா.ஜ.க. தலைவர் நிதின் கட்காரி சொல்லியிருக் கிறாரே?

பதில்: இப்போதுதான் அந்தக் கட்சிக்குத் தலைவராக புதிதாக வந்திருக்கிறார். அவரைப் பற்றி நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை.

கேள்வி: கச்சத் தீவை மீட்டு விட்டால் இந்தப் பிரச்சினை முடிவுக்கு வந்துவிடும் என்று நினைக்கிறீர்களா?

பதில்: விவாதத்திற்கு உரியது.

Comments

Unknown said…
இவரு சொல்லி இருக்குறதுக்கு பேரு பதிலுங்களா இல்ல கேள்விங்களா........ஹி ஹி!!

Popular posts from this blog

ராமநாதபுரம் மாவட்ட தொகுதிகள் எல்லை

1. பரமக்குடி (தனி) தொகுதி பரமக்குடி தாலுக்கா, கழுதி தாலுக்கா (பகுதி) த.புனவாசல், வங்காருபுரம், பெரியானைக்குளம், அச்சங்குளம், அ.தரைக்குடி, வலாந்தை, எழுவனூர், கூடக்குளம், காக்குடி, நகரத்தார்குறிச்சி, அபிராமம், நத்தம், மரக்குளம் மற்றும் மண்டலமாணிக்கம் கிராமங்கள். அபிராமம் (பேரூராட்சி).

புதுக்கோட்டை மாவட்ட தொகுதிகள் எல்லை

1. கந்தர்வக்கோட்டை (தனி) தொகுதி கந்தர்வகோட்டை தாலுக்கா, குளத்தூர் தாலுக்கா (பகுதி) செட்டிபட்டி, வெள்ளைபிள்ளையார்பட்டி, கண்ணன்குடி, செங்கலூர், காட்டுக்கோட்டைபட்டி, கிள்ளுக்கோட்டை, உலகன்காத்தான்பட்டி, கிள்ளுக்குவளவாய்ப்பட்டி, ராகத்தான்பட்டி, கீழையூர், விசலூர், புலியூர், கீரனூர், நஞ்சூர், மருதூர், வலியம்பட்டி, ஒடுகம்பட்டி, உடையாளிப்பட்டி, குன்னாண்டார்கோயில், தெம்மாவூர், மின்னாத்தூர், வத்தனாக்கோட்டை, பெரம்பூர், கிள்ளனூர், வீரக்குடி, கடம்பவயல், மங்கத்தேவன்பட்டி, பிரகதாம்பாள்புரம், நார்த்தமலை, அம்மாசத்திரம், உப்பிலியக்குடி, வாழங்களம், சீமானூர், சினையக்குடி, அண்டக்குளம், சாத்தினிப்பட்டி, வைத்தூர், சிரங்கன்பட்டி, உச்சணி, தென்னங்குடி, மூட்டாம்பட்டி, நரங்கியன்பட்டி, வத்தனாக்குறிச்சி, துடையூர், சத்தியமங்கலம், இறம்பாளி, மேலூர், வெள்ளனூர், முட்டுக்காடு, வேங்கைவயல் மற்றும் பூங்குடி கிராமங்கள். கீரனூர் (பேரூராட்சி), ஆலங்குடி தாலுக்கா (பகுதி) தட்டாமணைப்பட்டி, கீரத்தூர், கிளாங்காடு, முதலிப்பட்டி, செங்கமேடு, கல்லுமடை, பாப்பாபட்டி, ரெகுநாதபுரம், புதுவிடுதி, பெயாடிப்பட்டி, திருப்பாகோவில், ஒடப்பவிடுதி, சி...

எப்படி நடந்தது தொகுதி மறுசீரமைப்பு ?

தொகுதி மறுசீரமைப்பு செய்வதற்கு முன்பும் பின்பும் தொகுதிகள் எப்படி மாறியிருக்கின்றன என்பது பற்றி, தமிழக நாடாளுமன்ற தொகுதிகளில் அடங்கியிருக்கும் சட்டசபைத் தொகுதிகள் வாரியாக, இங்கே அலசப்பட்டிருக்கிறது. ஏற்கனவே இருந்த தொகுதிகளும் இப்போது மாற்றப்பட்டிருக்கும் தொகுதிகளின் பட்டியல்.. 1. திருவள்ளூர் (தனி) நாடாளுமன்றத் தொகுதி 1. பழனி - கும்மிடிப்பூண்டி (தனி) 2. ஒட்டன்சத்திரம் - பொன்னேரி 3. வேடசந்தூர் - பூந்தமல்லி (தனி) 4. காங்கேயம் - மாதவரம் 5. நத்தம் - திருவள்ளூர் 6. வெள்ளைக்கோவில் - ஆவடி * புதிதாக திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதி உருவானது. * ஸ்ரீபெரும்புதூர் எம்.பி. தொகுதியில் இருந்த கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, பூந்தமல்லி, திருவள்ளூர், ஆகிய சட்டசபைத் தொகுதிகள் இங்கே சேர்க்கப்பட்டது. * புதிதாக உருவாக்கப்பட்ட மாதவரம், ஆவடி சட்டசபைத் தொகுதிகள் இங்கே இணைக்கப்பட்டன.