ஜெயலலிதா இன்று (பிப்ரவரி 4) வெளியிட்ட் அறிக்கை:
கேரள மாநிலம் வல்லார்படத்தில் சர்வதேச பெட்டக மாற்று முனையத்தை அமைக்க அனுமதி கொடுத்ததன் மூலம் தென் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போட்டுவிட்டார் கருணாநிதி.
தூத்துக்குடி துறைமுகம் வளர்ந்து வரும் துறைமுகமாகும். திருப்பூர், அவினாசி, ஈரோடு, கரூர், சிவகாசி, கோவை பகுதிகளிலிருந்து வெளி நாடுகளுக்கு செல்லும் சரக்குகள் தூத்துக்குடியில் இருக்கும் சிறிய கப்பல் மூலம் கொழும்பில் உள்ள சர்வதேச பெட்டக மாற்று முனையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்குள்ள தாய் கப்பலில் அனைத்துச் சரக்குகளும் ஏற்றப்படும். இதன் காரணமாக தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து மாதந்தோறும் 16,000 பெட்டக ஏற்றுமதியும், 14,000 பெட்டக இறக்குமதியும் நடைபெற்று வருகிறது.
தி.மு.க.வைச் சேர்ந்த டி.ஆர். பாலு மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த போது, கேரள மாநிலம், கொச்சிக்கு அருகில் உள்ள வல்லார்படம் என்ற இடத்தில் முதன் முதலாக சர்வதேச பெட்டக மாற்று முனையம் அமைக்க மத்திய அரசால் அனுமதி கொடுக்கப்பட்டது. தற்போது இந்த முனையம் விரைவில் செயல்பாட்டிற்கு வர உள்ளது.
இந்த முனையம் செயல்பாட்டிற்கு வந்துவிட்டால், திருப்பூர், அவினாசி, கரூர், ஈரோடு, கோவை பகுதிகளில் உள்ள ஏற்றுமதியாளர்கள் தங்கள் சரக்குகளை தூத்துக்குடி துறைமுகத்திற்கு கொண்டு வருவதற்குப் பதிலாக, நேரடியாக கேரள மாநிலம், வல்லார்படத்தில் உள்ள சர்வதேச பெட்டக மாற்று முனையத்திற்கு அனுப்பி விடுவார்கள். இதனையடுத்து, தூத்துக்குடி துறைமுகத்தில் உள்ள தற்போதைய ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகம் வெகுவாக குறைந்து, தென் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கும் நிலை ஏற்படும். தூத்துக்குடி துறைமுகத்தின் முக்கியத்துவம் வெகுவாக குறைவதோடு மட்டுமல்லாமல், இதை நம்பியுள்ள தொழிலாளர்கள், வியாபாரிகள், சுங்க முகவர்கள், மற்றும் இதர பணியாளர்கள் வெகுவாக பாதிக்கப்படுவார்கள்.
மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இருந்து கொண்டு தமிழக மக்களுக்கு “நன்மை” செய்கின்ற கருணாநிதியின் லட்சணம் இது தான்! கருணாநிதியின் இந்தச் செயலுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். தூத்துக்குடி துறைமுகத்தின் வளர்ச்சியை தடுத்து, தென் தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கியுள்ள கருணாநிதியின் ஆட்சி விரைவில் வீழ்ச்சியடையும்.

Comments