அ.தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் அரசியல் பிரிவான மனிதநேய மக்கள் கட்சியின் தொகுதி பங்கீடு குழு சில நாட்களுக்கு முன்பு அ.தி.மு.க. தொகுதி பங்கீடு குழுவில் இடம் பெற்றிருக்கும் ஓ. பன்னீர்செல்வம், கே.ஏ. செங்கோட்டையன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்த நிலையில் இன்று (பிப்ரவரி 5) போயஸ்கார்டனில் மனிதநேய மக்கள் கட்சியின் நிர்வாகிகள் ஜெயலலிதாவை சந்தித்து பேசினார்கள். ஜவாஹிருல்லாம் ஹைதர் அலிம் ஆரூன் ரஷீத், சமது ஆகியோர் ஜெயலலிதாவை சந்தித்தனர். அப்போது ஓ.பன்னீர் செல்வம், செங்கோட்டையன் ஆகியோர் உடன் இருந்தனர்.தொகுதி பங்கீடு பற்றி அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். தங்களுக்கு சாதகமாக உள்ள தொகுதிகளின் பட்டியலை ஜெயலலிதாவிடம் வழங்கப்பட்டுருக்கிறதாம்.

Comments