கருணாநிதியை அவருடைய கோபாலபுரம் இல்லத்தில் இன்று (பிப்ரவரி 18) காலை பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சந்தித்தார். அவருடன் பா.ம.க. தலைவர் ஜி.கே.மணியும் வந்திருந்தார். சந்திப்பின் போது கருணாநிதிக்கு ராமதாஸ் பூங்கொத்து கொடுத்து சால்வை அணிவித்தார். பதிலுக்கு ராமதாஸுக்கு கருணாநிதியும் சால்வை போட்டார். அப்போது டி.ஆர். பாலுவும் துரைமுருகனும் உடன் இருந்தனர். கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளும் கொஞ்ச நேரம் அங்கே இருந்தார்.
பேரன் ராமசுகந்தன் திருமண அழைப்பிதழை கொடுப்பதற்காகதான் ராமதாஸ் கோபாலபுரம் போனார் என்று சொல்லப்பட்டாலும் கூட்டணி பற்றியும் சந்திப்பில் பேசப்பட்டிருக்கிறது. சில நாட்களுக்கு முன்பு கருணாநிதி டெல்லியில் சோனியாவை சந்திக்க சென்ற போது அங்கே, 'தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. இடம் பெறும்' என்று பேட்டி கொடுத்தார். உடனே ராமதாஸ் 'நாங்கள் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை எல்லா தரப்பில் இருந்து எங்களிடம் பேசி வருகிறார்கள்' என்று பதில் சொன்னார். இந்த நிலையில் 'அவர்கள் ஒரு முடிவு எடுத்துவிட்டால் நாங்கள் என்ன செய்ய முடியும்' என்று அதற்கு விளக்கம் கொடுத்தார் கருணாநிதி. உடனே 'நான் அப்படி சொல்லவில்லை. கருணாநிதி நல்ல முடிவு எடுப்பார்' என்று பல்டி அடித்து பேட்டி கொடுத்தார் ராமதாஸ்.
இப்படி பா.ம.க. கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருந்த சமயத்தில் தி.மு.க. பொதுக்குழுவில் ஒரு குண்டை போட்டார் கருணாநிதி. 'பா.ம.க.வை கூட்டணியில் சேர்ப்பதை சோனியா விரும்பவில்லை' என்று அந்த கூட்டத்தில் சொன்னார் கருணாநிதி. இதன்பிறகு சோனியாவை டெல்லியில் 17ம் தேதி அன்புமணி போய் பார்த்தார். இந்த நிலையில்தான் கருணாநிதியை ராமதாஸ் சந்தித்திருக்கிறார். கிட்டத்தட்ட கூட்டணியில் பா.ம.க. சேர்க்கப்பட்ட நிலையில் எத்தனை இடங்கள் என்பது பற்றியும் பேசி முடிக்கப்பட்டதாம். 26 இடங்கள் வரை பா.ம.க.வுக்கு கிடைக்கும் என்று பேச்சுகள் அடிபடுகின்றன.

Comments
பொதுவாக - காங்கிரசு, விசயகாந்த் கட்சிகளுக்கு அதிக இடங்களை உத்தேசமாக எழுதுவதும், அதுவே பாமக'வுக்கு மட்டும் எப்போதும் எல்லா பத்திரிகைகளும் குறைவான இடங்களை உத்தேசமாக குறிப்பிடுவதும் ஏன்?
ஒரு கற்பனையளவில் கூட பாமக'வுக்கு அதிக இடங்கள் ஒதுக்க முடியாமல் பத்திரிகைகளைத் தடை செய்வது எது?
வன்னியர்களுக்கு எதிரான (தன்னிச்சையான) சாதிவெறியே இதன் பின்னணி என்று நான் கருதுகிறேன்.