Skip to main content

ராசாத்தி, கனிமொழி, நிலவிவகாரம்: ஜெயலலிதா அறிக்கை

ஜெயலலிதா இன்று (பிப்ரவரி 27) வெளியிட்ட அறிக்கை:

சில மாதங்களுக்கு முன்பு, களங்கத்திற்கு ஆளான அரசியல்-வணிகர் தரகர்
நீரா ராடியாவுக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் கருணாநிதியின் மூன்றாவது மனைவி ராசாத்திக்கும் இடையிலான தொலைபேசி உரையாடல் குறித்து இந்திய ஊடகங்கள் விரிவாக செய்திகளை வெளியிட்டன.

இந்த உரையாடலின் போது, ராசாத்தியின் மிகுந்த நம்பிக்கைக்குரியவரும், ராசாத்தியின் தணிக்கையாளருமான ரத்னம் மொழிபெயர்ப்பாளர் என்ற வகையில் ராசாத்திக்கு உதவி புரிந்தார். இந்த உரையாடலின் சாராம்சம் என்னவென்றால், டாடா குழுமம் உறுதி அளித்த நில விவகாரம் முடிவடையாததால் ராசாத்தி வருத்தமடைந்த நிலையில் இருந்தார் என்பதுதான். இந்த உரையாடலில், சென்னையின் மையப் பகுதியில் உள்ள மிகப் பெரிய இடத்தை பயன்படுத்தி கொண்டிருக்கின்ற டாடா குழுமத்தின் நிறுவனமான வோல்டாஸ் பெயர் குறிப்பிடப்படுகிறது.

பின்னர், மேற்படி நிலம் தொடர்பாக ராசாத்தியின் கூட்டாளியான சரவணன் என்பவருக்கும் ராசாத்தியின் பினாமியாக கருதப்படும் சண்முகநாதன் என்பவருக்கும் இடையே விற்பனை ஒப்பந்தம் ஏற்பட்டு இருப்பது ஆவணங்கள் மூலம் வெளிப்படுத்தப்பட்டது. இந்த ஆவணத்தின்படி, 350 கோடி ரூபாய் மதிப்புடைய சென்னையின் பிரதானப் பகுதியான அண்ணா சாலையில் அமைந்துள்ள முக்கியத்துவம் வாய்ந்த இடத்தின் செயலுரிமை ஆவணத்தைப் பெற்ற சரவணன், சங்கல்பம் இன்டஸ்ட்ரீஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநரான சண்முகநாதன் என்பவருக்கு அடிமாட்டு விலையான 25 கோடி ரூபாய்க்கு இதனை விற்று இருக்கிறார். இந்த இடத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக வோல்டாஸ் நிறுவனம் இயங்கி வந்ததை வைத்து, இந்த இடத்தைப் பற்றிதான் ராசாத்தியும், ரத்தினமும், நீரா ராடியாவிடம் பேசினார்கள் என்பது தெள்ளத் தெளிவாகிறது.

இந்த ஆவணங்கள் ஊடகங்களில் தலைப்புச் செய்தியாக வந்தவுடன், தனக்கும், அந்த இடத்திற்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்ற அளவில் ராசாத்தி
ஓர் அறிக்கை வெளியிட்டார். சரவணன் தன்னுடைய ராயல் எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் “முன்னாள் பணியாளர்” என்றும் ராசாத்தி தெரிவித்தார். சரவணன் தற்போது தனது நிறுவனத்தின் பணியாளர் இல்லை என்றும், தற்போது அவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறார் என்பதற்காக, தன்னை இந்த விவகாரத்தில் தொடர்புபடுத்தக் கூடாது என்றும் கூறினார்.  சங்கல்பம் இன்டஸ்ட்ரீஸ் சண்முகநாதனைப் பொறுத்தவரையில், அவர் மலேசியாவை சேர்ந்த ஒரு வியாபாரி என்றும், அவருக்கும் தனக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லையென்றும் ராசாத்தி தெரிவித்தார்.

அண்மையில் கோத்தகிரியின் விண்ட்ஸர் எஸ்டேட்டை சங்கல்பம் இன்டஸ்ட்ரீஸ் இயக்குநர் சண்முகநாதன் வாங்கியிருப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இந்த எஸ்டேட் “கனிமொழி எஸ்டேட்” என்று உள்ளூர்காரர்களால் பேசப்படுகிறது. 525.98 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த எஸ்டேட் ஆவண எண் 2057/2006 மூலம் 16.12.2006 அன்று வெறும் 2.47 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டு இருக்கிறது.  ராசாத்தியின் கூற்றுப்படி, இந்த எஸ்டேட்டை வாங்கிய சண்முகநாதனுக்கும், ராசாத்திக்கும் எந்தவித தொடர்பும் இல்லை.

இதில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், சண்முகநாதனால் வாங்கப்பட்ட விண்ட்ஸர் எஸ்டேட்டின் ஆவணத்தில் சென்னை, தி.நகர், 12, சௌத் வெஸ்ட் போக் ரேரடு என்ற முகவரியில் வசிக்கும் கே. சேஷாத்ரியின் மகன் எஸ். சீனிவாச ரத்னம் என்பவர் சாட்சிக் கையெழுத்து போட்டு இருக்கிறார்.  அரசியல் தரகர் நீரா ராடியாவுடன் தொலைபேசியில் ராசாத்தி பேசும் போது அவருக்கு உதவி புரிந்த தணிக்கையாளர் ரத்தினத்திற்கும், எஸ். சீனிவாச ரத்தினற்கும் ஒரே முகவரி தான்! அவரேதான் இவர்!

சண்முகநாதனின் வோல்டாஸ் நில விற்பனையில் தொடர்புடையவர் ராசாத்தியின் முன்னாள் பணியாளர் சரவணன்.  சண்முகநாதனின் விண்ட்ஸர் எஸ்டேட் நில விற்பனையில் தொடர்புடையவர் ராசாத்தியின் தற்போதைய ஆடிட்டர் ரத்னம்.  விண்ட்ஸர் எஸ்டேட்டை உள்ளூர் மக்கள் “கனிமொழி எஸ்டேட்” என்று தான் அழைக்கிறார்கள்....

யதேச்சையாக ஏற்படும் ஒத்த நிகழ்வுகளுக்கும் ஓர் எல்லை உண்டு, அல்லவா?
இப்பொழுதாவது,  ராசாத்தியும், கனிமொழியும் உண்மையை வெளிப்படுத்துவார்களா?

Comments

Popular posts from this blog

ராமநாதபுரம் மாவட்ட தொகுதிகள் எல்லை

1. பரமக்குடி (தனி) தொகுதி பரமக்குடி தாலுக்கா, கழுதி தாலுக்கா (பகுதி) த.புனவாசல், வங்காருபுரம், பெரியானைக்குளம், அச்சங்குளம், அ.தரைக்குடி, வலாந்தை, எழுவனூர், கூடக்குளம், காக்குடி, நகரத்தார்குறிச்சி, அபிராமம், நத்தம், மரக்குளம் மற்றும் மண்டலமாணிக்கம் கிராமங்கள். அபிராமம் (பேரூராட்சி).

புதுக்கோட்டை மாவட்ட தொகுதிகள் எல்லை

1. கந்தர்வக்கோட்டை (தனி) தொகுதி கந்தர்வகோட்டை தாலுக்கா, குளத்தூர் தாலுக்கா (பகுதி) செட்டிபட்டி, வெள்ளைபிள்ளையார்பட்டி, கண்ணன்குடி, செங்கலூர், காட்டுக்கோட்டைபட்டி, கிள்ளுக்கோட்டை, உலகன்காத்தான்பட்டி, கிள்ளுக்குவளவாய்ப்பட்டி, ராகத்தான்பட்டி, கீழையூர், விசலூர், புலியூர், கீரனூர், நஞ்சூர், மருதூர், வலியம்பட்டி, ஒடுகம்பட்டி, உடையாளிப்பட்டி, குன்னாண்டார்கோயில், தெம்மாவூர், மின்னாத்தூர், வத்தனாக்கோட்டை, பெரம்பூர், கிள்ளனூர், வீரக்குடி, கடம்பவயல், மங்கத்தேவன்பட்டி, பிரகதாம்பாள்புரம், நார்த்தமலை, அம்மாசத்திரம், உப்பிலியக்குடி, வாழங்களம், சீமானூர், சினையக்குடி, அண்டக்குளம், சாத்தினிப்பட்டி, வைத்தூர், சிரங்கன்பட்டி, உச்சணி, தென்னங்குடி, மூட்டாம்பட்டி, நரங்கியன்பட்டி, வத்தனாக்குறிச்சி, துடையூர், சத்தியமங்கலம், இறம்பாளி, மேலூர், வெள்ளனூர், முட்டுக்காடு, வேங்கைவயல் மற்றும் பூங்குடி கிராமங்கள். கீரனூர் (பேரூராட்சி), ஆலங்குடி தாலுக்கா (பகுதி) தட்டாமணைப்பட்டி, கீரத்தூர், கிளாங்காடு, முதலிப்பட்டி, செங்கமேடு, கல்லுமடை, பாப்பாபட்டி, ரெகுநாதபுரம், புதுவிடுதி, பெயாடிப்பட்டி, திருப்பாகோவில், ஒடப்பவிடுதி, சி...

எப்படி நடந்தது தொகுதி மறுசீரமைப்பு ?

தொகுதி மறுசீரமைப்பு செய்வதற்கு முன்பும் பின்பும் தொகுதிகள் எப்படி மாறியிருக்கின்றன என்பது பற்றி, தமிழக நாடாளுமன்ற தொகுதிகளில் அடங்கியிருக்கும் சட்டசபைத் தொகுதிகள் வாரியாக, இங்கே அலசப்பட்டிருக்கிறது. ஏற்கனவே இருந்த தொகுதிகளும் இப்போது மாற்றப்பட்டிருக்கும் தொகுதிகளின் பட்டியல்.. 1. திருவள்ளூர் (தனி) நாடாளுமன்றத் தொகுதி 1. பழனி - கும்மிடிப்பூண்டி (தனி) 2. ஒட்டன்சத்திரம் - பொன்னேரி 3. வேடசந்தூர் - பூந்தமல்லி (தனி) 4. காங்கேயம் - மாதவரம் 5. நத்தம் - திருவள்ளூர் 6. வெள்ளைக்கோவில் - ஆவடி * புதிதாக திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதி உருவானது. * ஸ்ரீபெரும்புதூர் எம்.பி. தொகுதியில் இருந்த கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, பூந்தமல்லி, திருவள்ளூர், ஆகிய சட்டசபைத் தொகுதிகள் இங்கே சேர்க்கப்பட்டது. * புதிதாக உருவாக்கப்பட்ட மாதவரம், ஆவடி சட்டசபைத் தொகுதிகள் இங்கே இணைக்கப்பட்டன.