Skip to main content

2006 தேர்தல்: அதிகபட்ச வாக்குப் பதிவு!


கடந்த 2006 சட்டசபைத் தேர்தலில் 65 சதவீத வாக்குகள் பதிவாகின. அதிகபட்சமாக மதுரை மற்றும் ஈரோடு மாவட்டங்களில் தலா 73 சதவீத வாக்குகள் வரை பதிவாகின. ஜெயலலிதா போட்டியிட்ட ஆண்டிப்பட்டியை
உள்ளடக்கிய தேனி மாவட்டத்தில்தான் குறைந்தபட்சமாக 57 சதவீத வாக்குகள் பதிவாகின.

ஆண்டிப்பட்டி தொகுதியில் 65 சதவீத வாக்குகளும் கருணாநிதி போட்டியிட்ட சேப்பாக்கம் தொகுதியில் 62 சதவீத வாக்குகளும் பதிவானது. நடிகர் விஜயகாந்த் போட்டியிட்ட விருத்தாச்சலம் தொகுதியில் 71 சதவீத வாக்குகள் பதிவானது. ஸ்டாலின் தொகுதியான ஆயிரம் விளக்கில் 60 சதவீதமும், ஓ. பன்னீர் செல்வத்தின் பெரியகுளத்தில் 63 சதவீதமும் பேராசிரியர் அன்பழகனின் துறைமுகம் தொகுதியில் 57 சதவீதமும், ஆற்காடு வீராசாமியின் அண்ணாநகர் தொகுதியில் 58 சதவீத வாக்குகளும் பதிவாகின.

சென்னையின் பிற தொகுதிகளான ராயபுரத்தில் 69 சதவீதமும், ஆர்.கே. நகரில் 65 சதவீதமும், பூங்கா நகரில் 62 சதவீதமும், பெரம்பூரில் 59 சதவீதமும், எழும்பூரில் 58 சதவீதமும், தி.நகரில் 55 சதவீதமும் திருவல்லிக்கேணியில் 55 சதவீதமும், மைலாப்பூரில் 63 சதவீதமும், சைதாப்பேட்டையில் 65 சதவீதமும் வாக்குகள் பதிவாகின. சென்னையைப் பொறுத்தவரை புரசைவாக்கம் தொகுதியில்தான் அதிகபட்சமாக 71 சதவீத வாக்குகள் பதிவாகின.

தமிழகத்தின் மிகப் பெரிய தொகுதியான வில்லிவாக்கத்தில் 61 சதவீத வாக்குகள் பதிவாகின. கடந்த 2001 தேர்தலைவிட இது 20 சதவீதம் கூடுதலாகும். இந்தத் தொகுதியில் 9.5 லட்சம் வாக்காளர்கள் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டாவது பெரிய தொகுதியான தாம்பரத்தில் 65 சதவீத வாக்குகள் பதிவாகின.

Comments

தேர்தல் ஜீரம் பற்றிக் கொள்ளூம் போலும் உங்கள் இடுமையை படிக்கும் போது.. வாழ்த்துக்கள்
தோழர் வருகைக்கு நன்றி. பின்னுட்டங்களுக்கு பதில் சொல்ல நேரம் கிடைக்கவில்லை. கிட்டதட்ட தேர்தல் மேகங்கள் சூழ ஆரம்பித்துவிட்டன. பிப்ரவரி மத்தியில் தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாகலாம். தேர்தல் தொடர்பான எல்லா விஷயங்களையும் எவ்வளவு முடியுமோ அதற்குள் அடக்கிவிட முயன்று கொண்டிருக்கிறேன்.

Popular posts from this blog

அழகிரி நாடு: மதுரையில் ஜெயலலிதா பேச்சு

ம‌துரையில் இன்று (அக்டோபர் 18) தி.மு.க. அரசை கண்டித்து நடந்த ஆர்பாட்டத்தில் ஜெயலலிதா பேசினார். வைகை நதிக்கரை இன்று ஒரு நாள் மட்டும் கடற்கரையாய் மாறுகின்ற வண்ணம் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எண்ணுக்குள் அடக்க முடியாத அளவுக்கு திரளாகக் கூடியிருக்கும் பாண்டி நாட்டு சகோதரர்களே - சகோதரிகளே! உங்கள் அனைவருக்கும் முதற்கண் எனது அன்பான வணக்கத்தை உரித்தாக்கிக் கொள்கிறேன். வைகை நதிக்கரைக்கு நான் வரக்கூடாது என்று கட்டவிழ்த்து விடப்பட்ட அச்சுறுத்தல் கடிதங்களை எல்லாம், நீங்கள் அனுப்பிய அழைப்பிதழ்களாகவே ஏற்றுக்கொண்டு நீதியுரை மதுரைக்கு நீதி கேட்க வந்திருக்கிறேன்.

ராமநாதபுரம் மாவட்ட தொகுதிகள் எல்லை

1. பரமக்குடி (தனி) தொகுதி பரமக்குடி தாலுக்கா, கழுதி தாலுக்கா (பகுதி) த.புனவாசல், வங்காருபுரம், பெரியானைக்குளம், அச்சங்குளம், அ.தரைக்குடி, வலாந்தை, எழுவனூர், கூடக்குளம், காக்குடி, நகரத்தார்குறிச்சி, அபிராமம், நத்தம், மரக்குளம் மற்றும் மண்டலமாணிக்கம் கிராமங்கள். அபிராமம் (பேரூராட்சி).

ஜெயலலிதாவுக்கு தண்டனையா?

  2007 ஜூலை 4 தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழில் எழுதிய கட்டுரை இது! ஜெயலலிதாவுக்கு தண்டனையா? கடந்த 2001-ம் ஆண்டு நடந்த தமிழக சட்ட சபைத் தேர்தலில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஆண்டிபட்டி, கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை மற்றும் புவனகிரி ஆகிய நான்கு தொகுதிகளில் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்தார். ஆனால் அந்த நேரத்தில், ஏற்கெனவே ஆட்சி யில் இருந்த போது விதிகளை மீறி டான்சி நிலத்தை வாங்கியதாகச் சொல்லி போடப் பட்ட வழக்கொன்றில் ஜெயலலிதாவுக்கு சிறப்பு நீதிமன்றம் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்திருந்தது. ஊழல் வழக்கில் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டால் தேர்தலில் போட்டியிட முடியாது என்பது தேர்தல் கமிஷனின் விதி. ஆகவே, ஜெயலலிதா வின் நான்கு மனுக்களும் தள்ளுபடி செய்யப் பட்டு அவர் தேர்தலில் நிற்கும் வாய்ப்பை இழந்தார். இது ஒருபுறமிருக்க, ‘மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி ஒருவர் ஒரு சமயத்தில் இரண்டு தொகுதிகளில் மட்டுமே போட்டியிட முடியும். ஆனால், நான்கு தொகுதிகளில் வேட்புமனுத் தாக்கல் செய்திருந்த ஜெயலலிதா, தான் இரண்டு தொகுதிகளுக்கு மேல் வேட்புமனுத் தாக்கல் செய்யவில்லை என...