Skip to main content

மண்ணை கவ்விய பார்வர்டு பிளாக்!

‘அகில இந்திய பார்வர்டு பிளாக்’ கட்சி 2006 தேர்தலில் ஏக எதிர்பார்ப்புடன் களமிறங்கி ‘புஸ்’வானமானது. எந்த பெரிய கூட்டணியிலும் சேராமல் தனித்தே போட்டியிட்டது. 60 வேட்பாளர்கள் ‘அகில இந்திய பார்வர்டு பிளாக்’ சார்பில் போட்டியிட்டனர்.


2001 சட்டசபைத் தேர்தலில் பார்வர்டு பிளாக் அ.தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகித்தது. அப்போது கட்சியின் தலைவராக இருந்த எல். சந்தானம் வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனார். 2006 தேர்தல் நெருக்கத்தில் நடிகர் கார்த்திக் பார்வர்டு பிளாக் கட்சியின் தமிழகத் தலைவராக நியமிக்கப்பட்டார். சந்தானம் எதிர்ப்பு காட்ட... அவரை கட்சியில் இருந்து கட்டம் கட்டினார்கள். தி.மு.க. கூட்டணியில் சேர்வதற்காக கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் பிஸ்வாஸ், கார்த்திக் ஆகியோர் கருணாநிதியை சந்தித்தார்கள். தி.மு.க. கூட்டணியில் பார்வர்டு பிளாக் இணையும் என்ற எதிர்ப்பார்ப்பு இருந்த நிலையில் தி.மு.க. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு முடிந்து போனது. இதனால் அ.தி.மு.க.வுடன்தான் கூட்டணி வைக்க முடியும் என்கிற நிலை பார்வர்டு பிளாக்கு ஏற்பட்டது.

கூட்டணிக்காக ஜெயலலிதாவை சந்தித்தார்கள் கார்த்திக்கும் பிஸ்வாஸும் ‘கூட்டணி வேண்டும் என்றால் சந்தானத்தை மீண்டும் கட்சியில் சேர்த்துக் கொள்ள வேண்டும்’ என்று நிபந்தனை போட்டார் ஜெயலலிதா. இதனால் கூட்டணி ஏற்படவில்லை. இதற்கிடையில் சந்தானம் அகில இந்திய பார்வர்டு பிளாக் சார்பில் மதுரை மத்திய தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணியில் போட்டியிடுவார் என்ற அறிவிப்பு வெளியானது. பிறகு சந்தானத்துக்கு சோழவந்தான் தொகுதி மாற்றப்பட்டது. அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் பொதுச் செயலாளர் என்று தொகுதி உடன்பாட்டில் சந்தானம் கையெழுத்திட்டார். இதனால் கார்த்திக் தலைமையிலான கட்சி அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்துக் கொள்ளும் வாய்ப்பு முற்றிலும் துடைத்தெறியப்பட்டது.

வேறு வழியில்லாமல் பார்வர்டு பிளாக் தேர்தலில் தனித்து போட்டியிட்டது. அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களே பல இடங்களில் விலை போனார்கள். கிட்டதட்ட பெரும்பாலான தொகுதிகளில் டெப்பாசிட் இழந்தது கட்சி.

Comments

Popular posts from this blog

அழகிரி நாடு: மதுரையில் ஜெயலலிதா பேச்சு

ம‌துரையில் இன்று (அக்டோபர் 18) தி.மு.க. அரசை கண்டித்து நடந்த ஆர்பாட்டத்தில் ஜெயலலிதா பேசினார். வைகை நதிக்கரை இன்று ஒரு நாள் மட்டும் கடற்கரையாய் மாறுகின்ற வண்ணம் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எண்ணுக்குள் அடக்க முடியாத அளவுக்கு திரளாகக் கூடியிருக்கும் பாண்டி நாட்டு சகோதரர்களே - சகோதரிகளே! உங்கள் அனைவருக்கும் முதற்கண் எனது அன்பான வணக்கத்தை உரித்தாக்கிக் கொள்கிறேன். வைகை நதிக்கரைக்கு நான் வரக்கூடாது என்று கட்டவிழ்த்து விடப்பட்ட அச்சுறுத்தல் கடிதங்களை எல்லாம், நீங்கள் அனுப்பிய அழைப்பிதழ்களாகவே ஏற்றுக்கொண்டு நீதியுரை மதுரைக்கு நீதி கேட்க வந்திருக்கிறேன்.

ஸ்பெக்ட்ரம் பலூன் 'புஸ்" ஆகி விடும்: வீரமணி

திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி இன்று (டிசம்பர் 22) வெளியிட்ட அறிக்கை: தொலைத்தொடர்புத் துறையின் தற்போதைய அமைச்சர் கபில்சிபல் நேற்றிரவு தனியார் செய்தித் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், பல்வேறு திடுக்கிடக் கூடிய தகவல்களை ஆணித்தரமான முறையில் விளக்கியுள்ளார்.1999ம் ஆண்டில் - பாரதீய ஜனதா ஆட்சியில், வாஜ்பாய் பிரதமராக இருந்த காலகட்டத்தில் - கடைப்பிடிக்கப்பட்டதொலைத்தொடர்பு கொள்கையினால், மத்திய அரசுக்கு ஏற்பட்ட இழப்புத் தொகை ஒரு லட்சத்து 43 ஆயிரம் கோடியாகும் என்பதை சுட்டிக்காட்டியுள்ளார். 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு சம்பந்தமாக இந்த இழப்பு - இது இப்போது சொல்லப்படுவது போன்ற கற்பனையின் அடிப்படையில் சொல்லப்படும் தொகை அல்ல; நடைமுறைக் கணக்குப்படி ஏற்பட்ட இழப்புத் தொகையாகும்.

பதவியைவிட கொள்கைகளே முக்கியம்: கி.வீரமணி

கலைஞர் எடுத்த - வரலாற்றில் இடம் பெறும் முக்கிய அரசியல் முடிவை உள்ளூர் தமிழர்கள் முதல் உலகத் தமிழர்கள் வரை அனைவரும் மகிழ்ச்சியுடன் வரவேற்கின்றனர். பதவிகளை விட கொள்கையே முக்கியம் என்ற ரீதியில் தி.மு.க.வின் திட்டம் அமைய வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி வேண்டுகோள் விடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.