Skip to main content

‘‘நயினா ஒண்டிக்கு ஒண்டி வர்றீயா...’’ !

2006 சட்டசபைத் தேர்தலில் எதிரொலித்த முக்கியமான கோஷம் இது. அந்த தேர்தலில் வழக்கம் போல சென்னையில்தான் பிரச்சாரத்தை ஆரம்பித்தார் கருணாநிதி. சென்னை புரசைவாக்கம் தானா தெருவில் நடந்த அந்த பிரச்சார கூட்டத்தில்தான் ‘‘நயினா ஒண்டிக்கு ஒண்டி வர்றீயா?’’ என்று சீறினார் தயாநிதி மாறன்.



தேர்தல் நெருக்கம் வரையில் கோபாலபுரத்தில் இருந்துவிட்டு அதிரடியாக போயஸ் கார்டனுக்கு தாவி அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார் வைகோ. ‘‘23 தொகுதிகள் கேட்டோம் தரவில்லை. அதனால் கூட்டணி மாறினோம்’’ என்று கூட்டணி தாவலுக்கு பொழிப்புரை கொடுத்தார் வைகோ. இதனால் தி.மு.க. தலைமை ஏக கொதிப்பில் இருந்தது. புரசைவாக்கம் பிரச்சார பொதுக் கூட்டத்திலும் எதிரொலித்தது. வைகோவின் பெயரை சொல்லாமலேயே ‘‘நாயைக் குளிப்பாட்டி நடு வீட்டில் வைத்துவிட்டார் தலைவர்’’ என்று சொல்லி சீறினார் தயாநிதி மாறன். அந்த மேடையில் இருந்த தா.பாண்டியன் ‘‘தயாநிதி மாறன் தடம்புரண்டு பேசக்கூடிய நிலைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்’’ என்று சொல்லி ‘‘தற்போதைய அ.தி.மு.க. ஆட்சியின் அராஜகங்களை சொல்ல தயாநிதி மாறனை கதாநாயகனாகக் கொண்டு மனோகரா திரைப்படம் எடுத்தால் தி.மு.க. கூட்டணி பிரசாரமே செய்ய வேண்டாம்’’ என்றார். தா.பாண்டியன் அப்போது தி.மு.க. கூட்டணியில் இருந்தார்.

இதற்கு அந்த கூட்டத்திலேயே பதில் சொன்ன கருணாநிதி ‘‘மனோகரா திரைப்படம் எடுத்தால் வசந்தசேனைக்கு எங்கே போவது. தா. பாண்டியன் பேசியதை தயாநிதி மாறன், பாராட்டாக எடுத்துக் கொள்ளக் கூடாது. மத்திய அமைச்சராக இருப்பவர் இப்படி பேசக் கூடாது. கோபம் வராவிட்டால் அவரது இளமைக்கு அர்த்தம் இல்லை. வாலிபத் துடிப்பு புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் பெரியார், அண்ணா பாசறையில் பயிற்சி பெற்றவர்கள் பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும்’’ என்றார்.

Comments

Popular posts from this blog

அழகிரி நாடு: மதுரையில் ஜெயலலிதா பேச்சு

ம‌துரையில் இன்று (அக்டோபர் 18) தி.மு.க. அரசை கண்டித்து நடந்த ஆர்பாட்டத்தில் ஜெயலலிதா பேசினார். வைகை நதிக்கரை இன்று ஒரு நாள் மட்டும் கடற்கரையாய் மாறுகின்ற வண்ணம் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எண்ணுக்குள் அடக்க முடியாத அளவுக்கு திரளாகக் கூடியிருக்கும் பாண்டி நாட்டு சகோதரர்களே - சகோதரிகளே! உங்கள் அனைவருக்கும் முதற்கண் எனது அன்பான வணக்கத்தை உரித்தாக்கிக் கொள்கிறேன். வைகை நதிக்கரைக்கு நான் வரக்கூடாது என்று கட்டவிழ்த்து விடப்பட்ட அச்சுறுத்தல் கடிதங்களை எல்லாம், நீங்கள் அனுப்பிய அழைப்பிதழ்களாகவே ஏற்றுக்கொண்டு நீதியுரை மதுரைக்கு நீதி கேட்க வந்திருக்கிறேன்.

ஸ்பெக்ட்ரம் பலூன் 'புஸ்" ஆகி விடும்: வீரமணி

திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி இன்று (டிசம்பர் 22) வெளியிட்ட அறிக்கை: தொலைத்தொடர்புத் துறையின் தற்போதைய அமைச்சர் கபில்சிபல் நேற்றிரவு தனியார் செய்தித் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், பல்வேறு திடுக்கிடக் கூடிய தகவல்களை ஆணித்தரமான முறையில் விளக்கியுள்ளார்.1999ம் ஆண்டில் - பாரதீய ஜனதா ஆட்சியில், வாஜ்பாய் பிரதமராக இருந்த காலகட்டத்தில் - கடைப்பிடிக்கப்பட்டதொலைத்தொடர்பு கொள்கையினால், மத்திய அரசுக்கு ஏற்பட்ட இழப்புத் தொகை ஒரு லட்சத்து 43 ஆயிரம் கோடியாகும் என்பதை சுட்டிக்காட்டியுள்ளார். 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு சம்பந்தமாக இந்த இழப்பு - இது இப்போது சொல்லப்படுவது போன்ற கற்பனையின் அடிப்படையில் சொல்லப்படும் தொகை அல்ல; நடைமுறைக் கணக்குப்படி ஏற்பட்ட இழப்புத் தொகையாகும்.

பதவியைவிட கொள்கைகளே முக்கியம்: கி.வீரமணி

கலைஞர் எடுத்த - வரலாற்றில் இடம் பெறும் முக்கிய அரசியல் முடிவை உள்ளூர் தமிழர்கள் முதல் உலகத் தமிழர்கள் வரை அனைவரும் மகிழ்ச்சியுடன் வரவேற்கின்றனர். பதவிகளை விட கொள்கையே முக்கியம் என்ற ரீதியில் தி.மு.க.வின் திட்டம் அமைய வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி வேண்டுகோள் விடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.