Skip to main content

Posts

Showing posts with the label பல்டி

அது போன தேர்தல்... நாங்க சொல்லுறது இந்த தேர்தல்: விஜயகாந்த்

''இதுவரை 31,000 கிலோமீட்டர் தொலைவுக்கு பயணம் செய்து விட்டேன். எங்கும் மக்கள் மனதில் நிம்மதி இல்லை, யாருமே சந்தோஷமாக இல்லை. கஷ்டப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். கடந்த காலங்களில் ஏற்பட்டு வந்த ஆட்சியாளர்கள் ஏற்படுத்திய கஷ்டங்கள் இவை. எங்குமே நல்ல சாலை இல்லை, குடிநீர் வசதி இல்லை, மின் வசதி இல்லை, இப்படி பல அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் பூர்த்தியாகத கிராமங்கள நூற்றுக்கணக்கில் உள்ளன. அந்த மக்களின் கஷ்டத்தை கடந்த காலங்களில் ஆண்டவர்கள் போக்கவில்லை. நான்அதை சரி செய்யப் போகிறேன். எனக்கு இந்த ஒரு முறை மட்டும் வாய்ப்பு கொடுத்துப் பாருங்கள். நான் ஒரே ஒரு தேர்தல் அறிக்கையைத்தான் வெளியிட்டேன். அதில் எந்த மாற்றமும் இல்லை. இலவச அரிசியை நான்தான் முதலில் அறிவித்தேன். ஆனால் எனது தேர்தல் அறிக்கை காப்பி அடித்து இப்போது மற்ற கட்சிகள் தினசரி ஒரு தேர்தல் அறிக்கையை வெளியிட்டு வருகின்றன.

அது போன தேர்தல்... நாங்க சொல்லுறது இந்த தேர்தல்: செங்கோட்டையன்

''அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா பெயரைக் குறிப்பிடாமல் பொதுவாக சொன்னதை, தன்னைத்தான் சொன்னார் என்று ஒப்புதல் வாக்குமூலம் அளிப்பது போல அறிக்கை வெளியிட்டுள்ளார் விஜயகாந்த். அ.தி.மு.க.வை தனது அரசின் சாதனைகளால் உலகம் முழுவதும் அறியும் வகையில், அடையாளம் காட்டிஎம்.ஜி.ஆருக்குப் புகழ் சேர்த்தவர் ஜெயலலிதா. இவையெல்லாம் நேற்று கட்சி தொடங்கிய விஜயகாந்த்துக்குதெரியாமல் இருப்பதில் வியப்பே இல்லை. எம்.ஜி.ஆரின் ரசிகன் என கூறிக் கொள்ளும் விஜயகாந்த், சோதனைக் கட்டத்தின் போது எங்கிருந்தார்?அ.தி.மு.க.வின் வரலாறு தெரியாமல் அவர் பேசுவது வேடிக்கையாக உள்ளது. ஜெயலலிதாவைக் குறை சொல்ல விஜயகாந்த்துக்கு எந்த தகுதியும் இல்லை. வரலாறுகளை எல்லாம் இனிமேலாவது அவர் தெரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும்''  ‍ -  குடிக்காரன் அறிக்கை தொடர்பாக விஜயகாந்துக்கு செங்கோட்டையன் கொடுத்த பதிலடி அறிக்கை (2006 அக்டோபர் 25)

அது போன தேர்தல்... நாங்க சொல்லுறது இந்த தேர்தல்: ராமதாஸ்

''உள்ளாட்சித் தேர்தலில் பா.ம.க. வேட்பாளர்கள் பல இடங்களில் தோற்கடிக்கப்பட்டுள்ளனர். கூட்டணி தர்மத்தை தி.மு.க.வினர் கடைப்பிடிக்கவே இல்லை. இதை நாங்கள் சுட்டிக் காட்டி அறிக்கை வெளியிட்டால், நான்கு சுவர்களுக்குள் நடந்ததை வெளியில் சொல்லக்கூடாது என்கிறார் கலைஞர். வெளியில் சொல்லாவிட்டால் எங்கே போய்ச் சொல்வது? இத்தனை தவறுகள் நடந்துள்ளன என்று நாங்கள் கூறியபோதிலும் கூட அதை ஏற்றுக் கொள்ளாமல், த‌வறுகளையெல்லாம் அவர்கள் செய்து விட்டு, பச்சை துரோகம் செய்து விட்டு, எங்கள் மீதே குற்றம் சாட்டுகிறார் கலைஞர். இதை வெளியில் வேறு சொல்லக் கூடாது என்றும் கூறுகிறார்.

அது போன தேர்தல்... நாங்க சொல்லுறது இந்த தேர்தல்: விஜயகாந்த்

''பெண்கள் மீதும், தாய்மார்கள் மீதும் நான் மிகுந்த மதிப்பும், மரியாதையும் வைத்திருப்பவன். என்னைப் பற்றி அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா பழி சொல்லி அறிக்கை விட்டிருப்பதை நான் ச‌ற்றும் எதிர்பார்க்கவில்லை. இரவு பகல் பாராமல் கடந்த ஓராண்டு காலமாக பொதுமக்களையும், தொண்டர்களையும் தமிழ்நாடு முழுவதும் தேர்தலில் நான் சந்தித்துள்ளேன். நான் எப்படிப்பட்டவன் என்பதை பொது மக்கள் நேரிலேயே பார்த்து வருகின்றனர்.

அது போன தேர்தல்... நாங்க சொல்லுறது இந்த தேர்தல்: ஜெயலலிதா

''தே.மு.தி.க. சாதித்து விட்டது என்கிறார்கள். அந்தக் கட்சி வெறும் 3 சதவீத இடங்களில்தான் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றிருக்கிறது. இதே 3 சதவீத இடங்களை நமது தோழமைக் கட்சியான ம.தி.மு.க. கூட பெற்றிருக்கிறது. ஊழலை ஒழிப்பேன், வீட்டுக்கு வீடு ரேஷன் பொருட்களை வழங்குவேன் என்று கூறுவதெல்லாம் குடிகாரன் பேச்சைப் போன்றதுதான். நான் யாரைச் சொல்கிறேன் என்பது சம்பந்தப்பட்டவர்களுக்குத் தெரியும்.

அது போன தேர்தல்... நாங்க சொல்லுறது இந்த தேர்தல்:அன்புமணி

''மக்கள் பல ஆண்டுகளாக விவசாயம் செய்து வந்த நிலங்களை சிறப்பு பொருளாதர மண்டலம் என்ற பெயரில் பறித்து, தொழிற்சாலைகள் அமைத்துள்ளனர். ஆனால், நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படவில்லை. மின்வெட்டு பிரச்னையால் தமிழ்நாட்டில் உள்ள 80 சதவிகிதம் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. மின் வெட்டால் தொழிற்சாலைகளில் உற்பத்தி பாதிப்படைந்திருக்கிறது.'' - 2009 நாடாளுமன்றத் தேர்தலில் அன்புமணி முழக்கம். (2009 மே 6 இருங்காட்டுக்கோட்டை மேவலூர்குப்பம் பிரச்சாரம்).

அது போன தேர்தல்... நாங்க சொல்லுறது இந்த தேர்தல்: ராமதாஸ்

''இன்னும் ஒரே தடவை ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாடே இருண்டு போய்விடும். அவர் ஒரு நடிகைதான், ஆனால் அரசியலில் நடிக்கக் கூடாது. ஜெயலலிதாவின் ஒரே சாதனை ஆண்டுக்கு ரூ. 24,000 கோடிக்கு மது விற்றதும் பல லட்சம்பேரை குடிக்கு அடிமையாக்கியதும்தான். சசிகலாவின் பினாமிகள் பிழைப்பதற்காக அரசே மதுக் கடைகளை எடுத்து நடத்தி, மக்களை குடிக்கு அடிமையாக்கியுள்ளது. தன்னை சேது சமுத்திரத் திட்ட நாயகன் என்று சொல்லிக் கொள்ளும் வைகோ, இப்போது அந்தத் திட்டத்தைஎதிர்க்கும் ஜெயலலிதாவுடன் கூட்டு சேர்ந்திருக்கிறார். இதற்குப் பெயர் தான் பச்சை சந்தர்ப்பவாதம்.''    -  2006 தேர்தலில் ராமதாஸ் முழக்கம். (2006 ஏப்ரல் 7 கும்மிடிப்பூண்டி) .

அது போன தேர்தல்... நாங்க சொல்லுறது இந்த தேர்தல்: கருணாநிதி

''ஜெயலலிதாவின் உயிர்த்தோழி சகிகலாவின் உற்றார், உறவினர் , நெருங்கிய சொந்தக்காரர்கள் நடத்தும் மிடாஸ் மதுபான ஆலையில் என்ன நடக்கிறது?. குறைந்த விலைக்கு மட்டமான சரக்குகளை வைத்து, உயர்ந்த சரக்கின் லேபிள் ஒட்டிஆயிரக்கணக்கான கோடிகளை கொள்ளையடிக்கின்றனர். மது விற்பனையில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் இன்று மன்னார்குடி கும்பலுக்கு போய்க் கொண்டிருக்கிறது. அந்த ஆயிரக்கணக்கான கோடி ரூபாயை தடுத்தாலே இலவச கலர் டிவி பெட்டிகளை வாங்குவதற்கு நிச்சயமாக பணம் கிடைக்கும்.

அது போன தேர்தல்... நாங்க சொல்லுறது இந்த தேர்தல்: சீதாராம் யெச்சூரி

''கடந்த 5 வருடமாக தமிழகத்தில் என்ன நடந்தது? சட்டசபையில் ஜனநாயகத்துக்கே இடமில்லாமல் போனது. அரசு ஊழியர்களை கூண்டோடு சிறையில் போட்டார்கள். கல்வியையும் சுகாதாரத்தையும் தனியாரிடம் தாரை வார்த்துவிட்டார்கள். 500க்கும் மேற்பட்ட ஆரம்பப் பள்ளிகளை மூடிவிட்டார் ஜெயலலிதா. பிக்பாக்கெட் அடிப்பது மாதிரி மக்களுக்குத் தரப்பட்ட பல சலுகைளைப் பறித்துக் கொண்டார் ஜெயலலிதா. அந்த பிக்பாக்கெட்டுக்கு கூட்டாளியாக சேர்ந்திருக்கிறார் வைகோ. ஜெயலலிதா அரசை பாஸிஸ ஆட்சி என்று சொன்னவர் வைகோ. நாங்கள் கூட அப்படிச் சொல்லவில்லை. ஜெயலலிதாவைத் தோற்கடிப்பது ஏதேச்சதிகாரத்தை தோற்கடிப்பது மாதிரி. அதைச் செய்து காட்டுங்கள்'' -  ‍கடந்த 2006 தேர்தலில் ஏப்ரல் 5, 2006 அன்று சென்னை சைதாப்பேட்டை பிரச்சார கூட்டத்தில் மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி பேசியது.

அது போன தேர்தல்... நாங்க சொல்லுறது இந்த தேர்தல்: அன்புமணி

''2001ம் ஆண்டில் ஜெயலலிதாவிடம் 27 தொகுதிகளைக் கேட்டோம். ஆனால், நாம் கேட்டதில் 8 மட்டுமே தந்த ஜெயலலிதா மிச்ச தொகுதிகளை தன் மனம் போல கொடுத்தார். ஆனால், இந்த முறை கருணாநிதிடம் 31 கேட்டோம். அதில் 29யை நாம் கேட்ட தொகுதிகளாகவே தந்தார்.கேட்டதைத் தந்தவர் கலைஞர். சொல்வதைச் செய்பவரும் அவரே.