Skip to main content

Posts

Showing posts with the label 2008

முறிந்த கூட்டணி...: பரபரப்பான சர்வே முடிவுகள்!

2008 ஜூன் 25 தேதியிட்ட ஜூனிய விகடன் இதழில் எழுதிய கட்டுரை ! நா ளரு குத்தலும், மணிக்கொரு முணுமுணுப்புமாக 'கூட்டணி தாம்பத்யம்' நடத்திக்கொண்டிருந்த பா.ம.க-வை ஒருவழியாக தி.மு.க. 'விவாகரத்து' செய்துவிட்டது. இந்த முறிவு, அரசியல் அரங்கில் கொஞ்சங்காலமாகவே எதிர்பார்க்கப்பட்டு வந்ததுதான் என்பதால், அதிர்ச்சி அலைகள் பெரிதாக இல்லை. ஆனால், 'அடுத்து என்ன?' என்பது சுவாரஸ்யத்தை ரொம்பவே கூட்டுகிற கேள்வி. இந்த நிலையில், மக்களின் மனநிலை குறித்து அறிய, மின்னல் வேக சர்வே மேற்கொண்டோம். ஜூ.வி. சர்வே டீம் நேரில் சந்தித்தது 961 பேரை. விகடன் டாட்காம் இணையதளம் மூலம் கருத்துப் பதிவு செய்தவர்கள் 1,698. ஆக மொத்தம் 2,659 பேர் கலந்து கொண்டார்கள். நேரிலும், இணையதளத்திலுமாக 'பா.ம.க-வை தி.மு.க கூட்டணியை விட்டு அனுப்பியதே சரி' என்பது பெருவாரியான மனநிலை. அதிலும், 'விகடன் டாட்காம்' இணையதள வாசகர்களுக்கு, பா.ம.க. மீது அப்படியொரு கோபம். பத்துக் கேள்விகளுக்கும் 'டிக்' அடித்ததோடு, படு காரமாக விமர்சனங்களும் வைத்திருக்கிறார்கள்...

ம.தி.மு.க. மாநாடும் தீவு ஆராய்ச்சியும்!

இ து 'மாநாடு சீஸன்'... கடலூரில் தி.மு.க-வின் மகளிர் அணி மாநில மாநாடு முடிந்த நிலையில், சென்னை மண்டல மாநாட்டை நிறைய நெருக்கடிகளைத் தாண்டி, ஜூன் 18-ம் தேதி சென்னைத் தீவுத் திடலில் நடத்தி முடித்திருக்கிறது ம.தி.மு.க. சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை யிலிருந்து தீவுத் திடல் நோக்கிப் புறப்பட்ட தொண்டரணிப் படையை தனிமேடையில் நின்று சல்யூட் வைத்து ரசித்தார் வைகோ. ம.தி.மு.க. கொடிகளுடன் நடந்த தொண்டர் கள், 'லெஃப்ட் ரைட்'டுக்குப் பதிலாக 'இடம் வலம்' என்று தமிழில் சொல்லிக்கொண்டு மிடுக்கு நடை போட்டதைப் பொதுமக்கள் ஆச்சர்யத்தோடு பார்த்தார்கள். அணிவகுப்பு, தீவுத் திடல் வந்து சேர்ந்ததும் மாநாடு களை கட்ட ஆரம்பித்தது. தலைமைச் செயலகம் மாடலில் சீரியல் விளக்குகள் மின்னிய பந்தலில், காக்கிச் சட்டைகளுக்கு வேலை வைக்காமல் கட்டுக்கோப்பாக இருந்தனர் தொண்டர்கள். கொள்கை விளக்க அணி செயலாளர் நாஞ்சில் சம்பத் வழக்கம் போலவே வெளுத்துக் கட்ட ஆரம்பித்தார். ''பதினான்கு வருஷ வனவாசத்துக்குப் பிறகு ராமருக்கு பட்டாபிஷேகம் நடந்தது இதிகாச வரலாறு. ம.தி.மு.க. 14 ஆண்டுகள் கடந்து 15-ம் ஆண்டில் அடியெடு...

கடலூர் தி.மு.க. மாநாடு... கனிமொழியின் உயர்ந்த கைகள்!

ஏ ற்கெனவே இரண்டுமுறை தள்ளிப்போன தி.மு.க. மகளிர் அணி மாநாடு ஒருவழியாக கோலாகலமாக கடலூரில் நடந்து முடிந்துவிட்டது. 'கனிமொழியை அரசியலில் முன்னிலைப்படுத்துவதற்காக நடத்தப் படுகிறது' என்று பேசப்பட்ட இந்த மாநாடு மு.க.ஸ்டாலின் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் கலந்துகொள்ளாததை அடுத்து பல யூகங்களை கட்சித் தொண்டர்கள் மனதில் விதைத்துவிட்டு முடிந்திருக்கிறது. இந்நிலையில், மகளிர் அணி மாநாடு ஜூ.வி-யின் பார்வையில்... கண்ணீர்விட்ட வசந்தி கணேசன்... மாநாட்டு முகப்பில் இருக்கும் கொடியை கருணாநிதி தொட்டுக் கொடுத்த பிறகு வசந்தி கணேசன் அதை ஏற்றுவதாகத் திட்டம். கருணாநிதி வருவதற்கு முன்பே கொடியை ஏற்றி இறக்கி ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்த போது... அது வானில்  பறந்து கொண்டிருந்த நிலையில்... மாநாட்டுக்கு வந்துவிட்டார் கருணாநிதி! 'தலைவர் எடுத்து கயிற்றைத் தராமலே தன்னிச்சையாக கொடியேற்றியிருக்கிறீர்கள். இதற்காக நான் வருத்தப் படவில்லை. பெண்கள் எப்போதுமே தன்னிச்சையாக செயல்படவேண்டும். அந்தத் துணிவு வந்திருக்கிறது என்பதற்காகப் பெருமைபடுகிறேன்' என்று தன் பேச்சில் கருணாநிதி தனக்கே உரிய பாணியில் இதுபற்றி சொல்...