Skip to main content

Posts

Showing posts with the label ஃபிளாஷ்பேக்

2006 தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்களின் நிலை!

2006 சட்டசபைத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் 48 இடங்களில் போட்டியிட்டது காங்கிரஸ். 34 இடங்களில் வெற்றி பெற்றது. இந்த தேர்தலில் காங்கிரஸ் 63 தொகுதிகளில் போட்டியிடுகிறது. நிலைமை எப்படி போகும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.கடந்த தேர்தல் நிலவரம் இங்கே..

2006 தேர்தலில் களத்தில் நின்ற கட்சிகள்!

கடந்த 2006 தமிழக சட்டசபைத் தேர்தலில் தேசியக் கட்சிகளின் சார்பில் 472 வேட்பாளர்களும் மாநிலக் கட்சிகள் சார்பில் 386 வேட்பாளர்களும் பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத கட்சிகள் சார்பில் 307 வேட்பாளர்களும் சுயேட்சைகள் 1,222 பேரும் போட்டியிட்டனர். மொத்தமாக 2,586 வேட்பாளர்கள் களத்தில் நின்றார்கள்.

2006 தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளர்கள்!

2006 சட்டசபைத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகித்த காங்கிரஸ் கட்சிக்கு 48 தொகுதிகள் வழங்கப்பட்டன. இந்த 48 பேரில் ஏற்கனவே எம்.எல்.ஏ.களாக இருந்த 18 பேருக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டது. தேர்தலில் 34 பேர் மட்டுமே வெற்றி பெற்றார்கள். எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன், வள்ளல் பெருமான், பாரமலை போன்றவர்கள் தோல்வி அடைந்தார்கள். காங்கிரஸ் சட்டமன்ற் கட்சித் தலைவர் சுதர்சனம், போளூர் வரதன் ஆகிய இரண்டு எம்.எல்.ஏ.களும் இறந்துவிட்டனர். இடைத் தேர்தல்களில் கிடைத்த வெற்றியையும் சேர்த்து தற்போது காங்கிரஸ் கட்சிக்கு 34 எம்.எல்.ஏ.கள் இருக்கிறார்கள்.

2006 தேர்தல்: சி.பி.ஐ. வேட்பாளர்கள்!

2006 சட்டசபைத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றிருந்தது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி. அந்த கட்சிக்கு 9 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. வேட்பாளர்கள் விவரம்: 1. திருத்துறைப்பூண்டி:  உலகநாதன் 2. நன்னிலம்: பத்மாவதி 3. மன்னார்குடி: சிவபுண்ணியம் 4. கோவில்பட்டி: ராஜேந்திரன் 5. அவிநாசி (தனி): ஆறுமுகம் 6. ஆலங்குடி: ராஜசேகரன் 7. தளி: நாகராஜன் 8. பெருந்துறை: பெரியசாமி 9. ஸ்ரீவில்லிபுத்தூர்: ராமசாமி

2006 தேர்தல்: அ.தி.மு.க. பிரச்சாரத்தில் சிவனாண்டி!

இப்போது உளவுத்துறையில் இருக்கும் ஜாபர் சேட் மீது விமர்சனங்கள் எழுந்திருப்பது போல கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் உளவுத்துறை டி.ஐ.ஜி.யாக இருந்த சிவனாண்டி மீது ஏகப்பட்ட புகார்கள். 2006 சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணிக்கு கட்சிகளை இழுத்து வர ரொம்பவே உழைத்தார். அதோடு தேர்தல் பிரச்சாரத்திலும் பங்கெடுத்துக் கொண்டார். ஜெயலலிதா பிரச்சாரம் போன இடங்களில் எல்லாம் சிவனாண்டியும் தவறாமல் ஆஜர் ஆனார்.

2006 தேர்தல்: விடுதலைச் சிறுத்தைகள் வேட்பாளர்கள்!

2006 சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்ற விடுதலைச் சிறுத்தைகளுக்கு 9 தொகுதிகள் வழங்கப்பட்டன. அதேபோல புதுவையில் 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.

2006 தேர்தல்: வி.சி. போட்டியிட்ட தொகுதிகள்!

 2006 தமிழக சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 9 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதில் 7 தனித் தொகுதிகள். 2 பொதுத் தொகுதிகள். அந்த தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கோவில் மணி சின்னத்தில் போட்டியிட்டது. 2001 தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் வேட்பாளர்கள் தி.மு.க.வின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டனர். 2006ல் கட்சிக்கு தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெற வேண்டும் என்று விரும்பி தனியாக ‘கோவில் மணி’ சின்னத்தில் போட்டியிட்டது.

2006 தேர்தல்: தி.மு.க. அதிருப்தியாளர்கள்

தேர்தலில் எப்படியாவது போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆகிவிட வேண்டும் கனவில் கரை வேட்டி கட்டியவர்கள்தான் அதிகம். 2006 சட்டசபைத் தேர்தலில் தி.மு.க.வில் எதிர்பார்த்த பலருக்கு ஸீட் கிடைக்கவில்லை. சில தொகுதிகள் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டதால் பலர் அதிருப்தி அடைந்தனர்.

2006 தேர்தல்: திண்டிவனத்தாரை கழற்றிவிட்ட போயஸ் கார்டன்!

2006 சட்டசபைத் தேர்தல் நெருங்குவதற்கு சில காலம் வரையில் காங்கிரஸில் செல்வாக்கான தலைவராக இருந்தார் திண்டிவனம் ராமமூர்த்தி. அப்போது காங்கிரஸுக்குள்ளேயே இருந்து கொண்டு ஜெயா புகழாராம் பாடிக் கொண்டிருந்தார். வன்னியர்களுக்கு காங்கிரஸில் மரியாதை இல்லை என்று புது குண்டு போட்டு சத்தியமூர்த்தி பவனில் இருந்து விலகினார் ராமமூர்த்தி. பிறகு போயஸ் கார்டனில் ஐக்கியமானார். அங்கே அவருக்கு ஆரம்பத்தில் நல்ல மரியாதை கிடைத்தது. ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள் அந்த தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணிக்கு வந்தால் திண்டிவனத்தாரின் செல்வாக்கு சரிய ஆரம்பித்தது.

2006 தேர்தல்: கடலோர மாவட்டங்களில் வென்ற தி.மு.க.!

2006 தமிழக சட்டசபைத் தேர்தலில் கடலோர மாவட்டங்களில் தி.மு.க. அதிக இடங்களில் வெற்றி பெற்றது. சேது சமுத்திர திட்டம் துவக்கப்பட்ட சமயத்தில் மீனவர்கள் மத்தியில் தி.மு.க.வுக்கு எதிர்ப்பு இருந்ததாக பேச்சு எழுந்தது. கடலோர மாவட்டங்களில் தி.மு.க. கூட்டணி வெற்றியை குவித்ததால் அந்த எதிர்ப்பு வலுவிழந்தது.

2006 தேர்தல்: கட்சிவாரியாக வென்ற பெண் எம்.எல்.ஏ.கள்!

தி.மு.க. எம்.எல்.ஏ.கள்: 1. அச்சரப்பாக்கம்:& சங்கரி நாராயணன் 2. சங்கராபுரம்: அங்கயற்கண்ணி 3. தாராபுரம்: பிரபாவதி 4. சமயநல்லூர்: தமிழரசி 5. தூத்துக்குடி: கீதா ஜீவன் 6. ஆலங்குளம்: பூங்கோதை 7. உப்பிலியாபுரம்: ராணி

2006 தேர்தல்: பேராசிரியர் அன்பழகன் ‘பரிதாப’ வெற்றி!

2006 சட்டசபைத் தேர்தலில் துறைமுகம் தொகுதியில் போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் அன்பழகன் வெறும் 410 ஓட்டுகள் வித்தியாசத்தில் ‘பரிதாப வெற்றி’ பெற்றார். அன்பழகன் வாங்கிய ஓட்டுகள் 26 ஆயிரத்து 545. அன்பழகனை எதிர்த்துப் போட்டியிட்ட ம.தி.மு.க.வேட்பாளர் சீமா பஷீர் 26 ஆயிரத்து 135 ஓட்டுகள் பெற்றார்.

2006 தேர்தல்: 163 இடங்களில் வென்ற தி.மு.க. கூட்டணி!

2006 சட்டசபைத் தேர்தலில் தி.மு.க. கூட்டணி 163 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. தி.மு.க. 96 தொகுதிகளிலும் காங்கிரஸ் 34 தொகுதிகளிலும் பா.ம.க. 18 தொகுதிகளிலும் மார்க்சிஸ்ட் கட்சி 9 தொகுதிகளிலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 6 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. தி.மு.க.வுக்கு மெஜாரிட்டி கிடைக்காவிட்டாலும் 96 தொகுதிகளில் வெற்றி பெற்று, தனிப் பெரும் கட்சியாக விளங்கியது.

2006 தேர்தல்: வாக்குப் பதிவு ஹைலைட்ஸ்!

2006 சட்டசபைத் தேர்தலில் வாக்குப்பதிவின் போது நடைபெற்ற ஹைலைட்ஸ் விஷயங்கள் இங்கே அணிவகுக்கின்றன. * ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் 70.22 சதவீதம் வாக்குகள் பதிவானது. * 49 சதவீதம் பெண்களும் 51 சதவீத ஆண்களும் ஓட்டுப் போட்டனர். * கொங்கு மண்டலத்துக்கு உட்பட்ட மாவட்டங்களில் சராசரியாக 70 சதவீத வாக்குகள் பதிவானது.

2006 தேர்தல்: அதிகபட்ச வாக்குப் பதிவு!

கடந்த 2006 சட்டசபைத் தேர்தலில் 65 சதவீத வாக்குகள் பதிவாகின. அதிகபட்சமாக மதுரை மற்றும் ஈரோடு மாவட்டங்களில் தலா 73 சதவீத வாக்குகள் வரை பதிவாகின. ஜெயலலிதா போட்டியிட்ட ஆண்டிப்பட்டியை உள்ளடக்கிய தேனி மாவட்டத்தில்தான் குறைந்தபட்சமாக 57 சதவீத வாக்குகள் பதிவாகின. ஆண்டிப்பட்டி தொகுதியில் 65 சதவீத வாக்குகளும் கருணாநிதி போட்டியிட்ட சேப்பாக்கம் தொகுதியில் 62 சதவீத வாக்குகளும் பதிவானது. நடிகர் விஜயகாந்த் போட்டியிட்ட விருத்தாச்சலம் தொகுதியில் 71 சதவீத வாக்குகள் பதிவானது. ஸ்டாலின் தொகுதியான ஆயிரம் விளக்கில் 60 சதவீதமும், ஓ. பன்னீர் செல்வத்தின் பெரியகுளத்தில் 63 சதவீதமும் பேராசிரியர் அன்பழகனின் துறைமுகம் தொகுதியில் 57 சதவீதமும், ஆற்காடு வீராசாமியின் அண்ணாநகர் தொகுதியில் 58 சதவீத வாக்குகளும் பதிவாகின. சென்னையின் பிற தொகுதிகளான ராயபுரத்தில் 69 சதவீதமும், ஆர்.கே. நகரில் 65 சதவீதமும், பூங்கா நகரில் 62 சதவீதமும், பெரம்பூரில் 59 சதவீதமும், எழும்பூரில் 58 சதவீதமும், தி.நகரில் 55 சதவீதமும் திருவல்லிக்கேணியில் 55 சதவீதமும், மைலாப்பூரில் 63 சதவீதமும், சைதாப்பேட்டையில் 65 சதவீதமும் வாக்குகள் பதிவாகின. சென்...

2006 தேர்தல்: மாவட்ட வாரியாக வாக்குப்பதிவு சதவீதம்!

2006 சட்டசபைத் தேர்தலில் தமிழகத்தில் மாவட்டவாரியாக பதிவான வாக்கு சதவீதம் 1. சென்னை 58.28 சதவீதம் 2. திருவள்ளூர் 68.57 சதவீதம் 3. காஞ்சிபுரம் 68.14 சதவீதம் 4. வேலூர் 71.17 சதவீதம் 5. திருவண்ணாமலை 73.71 சதவீதம்

2006 தேர்தல்: எத்தனை போட்டி? எத்தனை வெற்றி?

தி.மு.க.கூட்டணி: கட்சி - போட்டி - வெற்றி தி.மு.க. -  130  -  96 காங்கிரஸ் - 48 -  34 பா.ம.க.  -  31  -  18 சி.பி.எம்.  -  13  -  9 சி.பி.ஐ.  -  10  -  6 முஸ்லிம் லீக் -  2  -  2 மொத்தம் -  234  -  163

2006 தேர்தல் முடிவு!

தி.மு.க.கூட்டணி: 163 தி.மு.க.: 95 காங்கிரஸ்: 35 பா.ம.க.: 18 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்: 9 இந்திய கம்யூனிஸ்ட்: 6 * தி.மு.க. வெற்றி பெற்ற 95 இடங்களில் முஸ்லிம் லீக்கு இரண்டு இடமும் புரட்சி பாரத்திற்கு ஒரு இடமும் அடங்கும். இந்த கட்சிகள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டதால் தேர்தல் கமிஷனின் கணக்குப்படி தி.மு.க.வுக்கு 95 இடங்கள்தான்.

தனித் தொகுதிகளில் அதிகம் போட்டியிட்ட அ.தி.மு.க.!

2006 சட்டசபைத் தேர்தலில் தமிழகத்தில் மொத்தம் 45 தனித் தொகுதிகள் இருந்தன. இதில் அ.தி.மு.க.தான் அதிகபட்சமாக 34 தொகுதிகளில் களமிறங்கியது. தி.மு.க. 28 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியது. இந்த இரண்டு திராவிட கட்சிகளுமே 24 தனித்தொகுதிகளில் நேரடியாக மோதின.

பன்னீர்செல்வத்துக்கு கிடைத்த கௌரவம்!

2001 சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெற்றபோதும் அந்த தேர்தலில் ஜெயலலிதா போட்டியிட முடியவில்லை. நான்கு தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்ததால் எல்லாமே தள்ளுபடி ஆனது. எம்.எல்.ஏ. ஆகாமலேயே முதல்வர் நாற்காலியில் அப்போது அமர்ந்தார் ஜெயலலிதா. அதன்பிறகு சுப்ரீம் கோர்ட் உத்தரவுக்கு பிறகு சில மாதங்களிலேயே பதவியில் இருந்து இறங்கினார் ஜெயலலிதா. அந்த சமயத்தில் முதல்வர் சான்ஸ் ஒ. பன்னீர்செல்வத்துக்கு அடித்தது. சில மாதங்கள் வரை முதல்வர் நாற்காலியில் அமர்ந்திருந்தார்.