Skip to main content

2006 தேர்தல்: வாக்குப் பதிவு ஹைலைட்ஸ்!

2006 சட்டசபைத் தேர்தலில் வாக்குப்பதிவின் போது நடைபெற்ற ஹைலைட்ஸ் விஷயங்கள் இங்கே அணிவகுக்கின்றன.

* ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் 70.22 சதவீதம் வாக்குகள் பதிவானது.

* 49 சதவீதம் பெண்களும் 51 சதவீத ஆண்களும் ஓட்டுப் போட்டனர்.

* கொங்கு மண்டலத்துக்கு உட்பட்ட மாவட்டங்களில் சராசரியாக 70 சதவீத வாக்குகள் பதிவானது.


* மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக 18 வாக்குச் சாவடிகளில் மறு வாக்குப் பதிவு நடைபெற்றது.

* அண்ணாநகரில் ஒரு வாக்குச் சாவடியிலும் ஸ்ரீபெரும்புதூர், திருத்தணியில் 5 வாக்குச் சாவடிகளிலும் முகையூர், பாலக்கோடு தொகுதிகளில் 3 வாக்குச் சாவடிகளிலும் திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர், வேடசந்தூர், புதுக்கோட்டை மாவட்டம் கொளத்தூர், ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை, பரமக்குடி, விருதுநகர், திருநெல்வேலி மாவட்டம் வாசுதேவநல்லூர் ஆகிய தொகுதிகளிலும் மறுவாக்குப்பதிவு நடைபெற்றன.

* கோவை மாவட்டத்தில் 85 சதவீதத்துக்கும் அதிகமாக வாக்குகள் பதிவான 72 வாக்குச் சாவடிகளில் மறுபரிசீலனை செய்யப்பட்டன.

* திருப்பூரில் இருந்து 10 கி.மீ. தூரத்தில் உள்ள பொல்லிகாளிபாளையம் கிராமம் திருப்பூர், பல்லடம், பொங்கலூர் ஆகிய 3 சட்டசபைத் தொகுதிகளின் எல்லையில் அமைந்திருந்தன. அதனால் இந்த கிராமத்தை சேர்ந்த 1,400 வாக்காளர்கள் மூன்று தொகுதிகளுக்கும் ஓட்டுப் போட்டனர்.

* திருநெல்வேலி மாநகராட்சிக்கு உட்பட்ட திருநெல்வேலி, பாளையங்கோட்டை ஆகிய இரண்டு 2 தொகுதிகளில் பெண் வாக்காளர்களைவிட ஆண் வாக்காளர்களே அதிகமாக வாக்களித்தனர்.

* கன்னியாகுமரி மாவட்டத்தில் பெண்களைவிட அதிக அளவில் ஆண்கள் வாக்களித்தனர். மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிகளிலும் சேர்த்து மொத்தமாக 12 லட்சத்து 10 ஆயிரத்து 54 வாக்காளர்கள் இருந்தனர். இதில் 6 லட்சத்து 10 ஆயிரத்து 449 ஆண்கள், 5 லட்சத்து 99 ஆயிரத்து 605 பெண்கள். இவர்களில் 3 லட்சத்து 86 ஆயிரத்து 62 ஆண்களும், 3 லட்சத்து 84 ஆயிரத்து 355 பெண்களும் வாக்களித்தனர்.

Comments

Popular posts from this blog

அழகிரி நாடு: மதுரையில் ஜெயலலிதா பேச்சு

ம‌துரையில் இன்று (அக்டோபர் 18) தி.மு.க. அரசை கண்டித்து நடந்த ஆர்பாட்டத்தில் ஜெயலலிதா பேசினார். வைகை நதிக்கரை இன்று ஒரு நாள் மட்டும் கடற்கரையாய் மாறுகின்ற வண்ணம் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எண்ணுக்குள் அடக்க முடியாத அளவுக்கு திரளாகக் கூடியிருக்கும் பாண்டி நாட்டு சகோதரர்களே - சகோதரிகளே! உங்கள் அனைவருக்கும் முதற்கண் எனது அன்பான வணக்கத்தை உரித்தாக்கிக் கொள்கிறேன். வைகை நதிக்கரைக்கு நான் வரக்கூடாது என்று கட்டவிழ்த்து விடப்பட்ட அச்சுறுத்தல் கடிதங்களை எல்லாம், நீங்கள் அனுப்பிய அழைப்பிதழ்களாகவே ஏற்றுக்கொண்டு நீதியுரை மதுரைக்கு நீதி கேட்க வந்திருக்கிறேன்.

ராமநாதபுரம் மாவட்ட தொகுதிகள் எல்லை

1. பரமக்குடி (தனி) தொகுதி பரமக்குடி தாலுக்கா, கழுதி தாலுக்கா (பகுதி) த.புனவாசல், வங்காருபுரம், பெரியானைக்குளம், அச்சங்குளம், அ.தரைக்குடி, வலாந்தை, எழுவனூர், கூடக்குளம், காக்குடி, நகரத்தார்குறிச்சி, அபிராமம், நத்தம், மரக்குளம் மற்றும் மண்டலமாணிக்கம் கிராமங்கள். அபிராமம் (பேரூராட்சி).

ஜெயலலிதாவுக்கு தண்டனையா?

  2007 ஜூலை 4 தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழில் எழுதிய கட்டுரை இது! ஜெயலலிதாவுக்கு தண்டனையா? கடந்த 2001-ம் ஆண்டு நடந்த தமிழக சட்ட சபைத் தேர்தலில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஆண்டிபட்டி, கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை மற்றும் புவனகிரி ஆகிய நான்கு தொகுதிகளில் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்தார். ஆனால் அந்த நேரத்தில், ஏற்கெனவே ஆட்சி யில் இருந்த போது விதிகளை மீறி டான்சி நிலத்தை வாங்கியதாகச் சொல்லி போடப் பட்ட வழக்கொன்றில் ஜெயலலிதாவுக்கு சிறப்பு நீதிமன்றம் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்திருந்தது. ஊழல் வழக்கில் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டால் தேர்தலில் போட்டியிட முடியாது என்பது தேர்தல் கமிஷனின் விதி. ஆகவே, ஜெயலலிதா வின் நான்கு மனுக்களும் தள்ளுபடி செய்யப் பட்டு அவர் தேர்தலில் நிற்கும் வாய்ப்பை இழந்தார். இது ஒருபுறமிருக்க, ‘மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி ஒருவர் ஒரு சமயத்தில் இரண்டு தொகுதிகளில் மட்டுமே போட்டியிட முடியும். ஆனால், நான்கு தொகுதிகளில் வேட்புமனுத் தாக்கல் செய்திருந்த ஜெயலலிதா, தான் இரண்டு தொகுதிகளுக்கு மேல் வேட்புமனுத் தாக்கல் செய்யவில்லை என...