Skip to main content

2006 தேர்தல் கவர்ச்சி வாக்குறுதிகள்!

அரிசி, கலர் டி.வி., தரிசு நிலம் ஆகியவைதான் 2006 சட்டசபைத் தேர்தலில் முக்கியமான கவர்ச்சி அறிவிப்புகள். ரேஷனில் ரூ. 2-க்கு ஒரு கிலோ அரிசி, ஏழைக் குடும்பங்களுக்கு இலவச கலர் டி.வி., ஏழை விவசாயத் தொழிலாளருக்கு தலா 2 ஏக்கர் தரிசு நிலம் என தேர்தல் அறிக்கையில் அறிவித்தது தி.மு.க. ‘‘இதில் எதுவுமே சாத்தியமில்லை’’ என்று முக்கிய எதிர்க்கட்சியான அ.தி.மு.க. அப்போது எதிர்ப்பு காட்டியது. ஆனால், விஜயகாந்த் மட்டும் இதைக் குறை கூறவில்லை. ‘‘ஓர் அரசு நினைத்தால் எதையும் செய்ய முடியும்’’ என்றார்.


இப்படி அவர் சொல்ல காரணம் இருந்தது. ஏனென்றால், ‘ரேஷன் பொருள்கள் வீடு தேடி வரும். ஏழைக் குடும்பங்களுக்கு 15 கிலோ இலவச அரிசி, வீட்டுக்கொரு சீமை பசு என்று அவரும் தன் பங்குக்கு 2006 தேர்தலில் ஜிகினா அறிவிப்புகளை விட்டார். தி.மு.க.வின் வாக்குறுதிகளை முறியடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்த அ.தி.மு.க., ‘ரேஷனில் 10 கிலோ அரிசி இலவசம்’ என்று சொன்னது. “அண்ணன் கலைஞர் அவர்கள் ஒரு கிலோ அரிசி ரூ. 2-க்கு எப்படித் தரப் போகிறார் என்பதைப் பார்க்க வேண்டும்’’ என்றார் வைகோ. ‘‘இலவச டி.வி.யோடு கேபிள் இணைப்பையும் இலவசமாக தருவார்களா?’’ என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பிய போது, ‘‘தேவைப்பட்டால் அதையும் தருவேன்’’ என்றார் கருணாநிதி.

தரிசு நிலம் இலவசமாகத் தருவது தொடர்பாகவும் சர்ச்சை எழுந்தது. ‘‘இலவச நிலம் தி.மு.க.வால் தர முடியாது’’ என்று பிரச்சாரத்தில் முழங்கினார் ஜெயலலிதா. ஆனால் இதை அவரது கூட்டணியில் அப்போது இடம்பெற்ற வைகோவும் திருமாவளவனும் எதிர்க்கவில்லை. காரணம் இதே போன்ற வாக்குறுதிகள் அவர்களுடைய தேர்தல் அறிக்கைகளிலும் இடம் பெற்றிருந்தன. ஏழை விவசாயத் தொழிலாளர்களுக்கு 2 ஏக்கர் நிலம் தருவதாக ம.தி.மு.க.வும், 5 ஏக்கர் நிலம் தர வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகளும் சொல்லியிருந்தன.

தேர்தலில் தி.மு.க. ஜெயிக்க காரணமாக இருந்த கதாநாயகன் கவர்ச்சி தேர்தல் அறிக்கைதான். கலர் டி.வி., காஸ் அடுப்பு, சத்துணவில் முட்டை, ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி போன்ற அறிவிப்புகள் சக்சஸ் ஆயின. இதில் இலவச நிலம் போன்ற அறிவிப்புகள் ‘புஸ்’ ஆகிப் போனது.

Comments

Popular posts from this blog

அழகிரி நாடு: மதுரையில் ஜெயலலிதா பேச்சு

ம‌துரையில் இன்று (அக்டோபர் 18) தி.மு.க. அரசை கண்டித்து நடந்த ஆர்பாட்டத்தில் ஜெயலலிதா பேசினார். வைகை நதிக்கரை இன்று ஒரு நாள் மட்டும் கடற்கரையாய் மாறுகின்ற வண்ணம் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எண்ணுக்குள் அடக்க முடியாத அளவுக்கு திரளாகக் கூடியிருக்கும் பாண்டி நாட்டு சகோதரர்களே - சகோதரிகளே! உங்கள் அனைவருக்கும் முதற்கண் எனது அன்பான வணக்கத்தை உரித்தாக்கிக் கொள்கிறேன். வைகை நதிக்கரைக்கு நான் வரக்கூடாது என்று கட்டவிழ்த்து விடப்பட்ட அச்சுறுத்தல் கடிதங்களை எல்லாம், நீங்கள் அனுப்பிய அழைப்பிதழ்களாகவே ஏற்றுக்கொண்டு நீதியுரை மதுரைக்கு நீதி கேட்க வந்திருக்கிறேன்.

ஸ்பெக்ட்ரம் பலூன் 'புஸ்" ஆகி விடும்: வீரமணி

திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி இன்று (டிசம்பர் 22) வெளியிட்ட அறிக்கை: தொலைத்தொடர்புத் துறையின் தற்போதைய அமைச்சர் கபில்சிபல் நேற்றிரவு தனியார் செய்தித் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், பல்வேறு திடுக்கிடக் கூடிய தகவல்களை ஆணித்தரமான முறையில் விளக்கியுள்ளார்.1999ம் ஆண்டில் - பாரதீய ஜனதா ஆட்சியில், வாஜ்பாய் பிரதமராக இருந்த காலகட்டத்தில் - கடைப்பிடிக்கப்பட்டதொலைத்தொடர்பு கொள்கையினால், மத்திய அரசுக்கு ஏற்பட்ட இழப்புத் தொகை ஒரு லட்சத்து 43 ஆயிரம் கோடியாகும் என்பதை சுட்டிக்காட்டியுள்ளார். 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு சம்பந்தமாக இந்த இழப்பு - இது இப்போது சொல்லப்படுவது போன்ற கற்பனையின் அடிப்படையில் சொல்லப்படும் தொகை அல்ல; நடைமுறைக் கணக்குப்படி ஏற்பட்ட இழப்புத் தொகையாகும்.

பதவியைவிட கொள்கைகளே முக்கியம்: கி.வீரமணி

கலைஞர் எடுத்த - வரலாற்றில் இடம் பெறும் முக்கிய அரசியல் முடிவை உள்ளூர் தமிழர்கள் முதல் உலகத் தமிழர்கள் வரை அனைவரும் மகிழ்ச்சியுடன் வரவேற்கின்றனர். பதவிகளை விட கொள்கையே முக்கியம் என்ற ரீதியில் தி.மு.க.வின் திட்டம் அமைய வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி வேண்டுகோள் விடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.