Skip to main content

Posts

Showing posts with the label 2010

விறுவிறு புதிய சட்டப் பேரவை விழா... 'ஆடு பாம்பே விளையாடு பாம்பே!'

இ ந்திய பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவி சோனியா, தமிழக முதல்வர் கருணாநிதி என்று மேடையில் முப் பெரும் அரசியல் தலைகள் சேர்ந்திருக்க... தமிழகத்தின் புதிய தலைமைச் செயலகம் மற்றும் சட்டசபை வளாகத் திறப்பு விழா, ஜம்மென்று நடந்து முடிந் திருக்கிறது..! மொத்தம் இரண்டு பிளாக்கு கள் கொண்டது இந்த வளாகம். சட்டசபைக்கு ஒன்று... தலைமைச் செயலகத்துக்கு ஒன்று! இதில் சட்டசபை கட்டட வளாகத்தில்தான் விழா. வெளியே நீட்டியபடி இருந்த கம்பிகளும், சிமென்ட் பூச்சு இல்லாத சுவர்களும் 'இன்னும் வேலை முடியவில்லை' என்பதை சொல்லிக் கொண்டே இருந்தன. சில இடங்களில் துணி களைக் கட்டி மறைத்திருந்தார்கள். 'புதிய சட்டசபை திறப்பு விழாவுக்குப் புறப்பட்டு வா...' என்று உடன்பிறப்புக்கு கருணாநிதி கடிதம் எழுதி அழைத்திருக்க... ஏராளமான தொண்டர்கள் குவிந்துவிட்டனர். ஆனால், பிரதமர் வருகையால் அவர்களை போலீஸ் உள்ளே விடாமல் விரட்டியது. உடன் பிறப்புகள் உஷ்ணம் காட்டியும், காக்கிகள் அசரவில்லை! மேடையே பிரமாண்ட செட் போல போடப்பட்டிருக்க... மேடைக்கு முன்பு நீதிபதிகள், மாநில அமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள், அதிகாரிகள், எம்.எல்.ஏ-...

அரசியல் தீ பற்ற வைத்த படம் !

ம காத்மா காந்தி, ராஜாஜி, திருவள்ளுவர், அண்ணா, காமராஜர், பெரியார், அம்பேத்கர், பசும்பொன் முத்துராமலிங்க தேவர், காயிதேமில்லத் முகம்மது இஸ்மாயில், எம்.ஜி.ஆர் ஆகிய 10 பேர் படங் களுக்கு மட்டும் தமிழக சட்டசபையில் நிரந்தர இடம் உண்டு. இந்த வரிசையில் முதல்வர் கருணாநிதியின் உருவப்படத்தையும் வைக்க, தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதைக் கண்டித்து, 'கருணாநிதியின் படத்தை வைக்கக் கூடாது' என்று காட்டமாக அறிக்கை விட்டிருக்கும் ஜெயலலிதா, ''அடுத்து அதி.மு.க. ஆட்சிக்கு வரும்போது இந்த மரபுமீறிய செயல்கள் மாற்றி அமைக்கப்படும்!'' என்றும் காரம் வீசியிருக் கிறார். இதுபற்றி சட்டசபை செயலக வட்டாரத்தில் விசாரித்தோம். ''சட்டசபையில் முதன்முதலாக காந்தி உருவப்படத்தை, ராஜாஜி கவர்னர் ஜெனரலாக இருந்தபோது 24.7.1948-ல் திறந்து வைத்தார். 'வாழ்க நீ எம்மான்' என்கிற பாடலை எம்.எஸ்.சுப்பு லட்சுமி பாட... சர்.முத்தையா செட்டியார் வழங்கிய காந்தி படம் திறக்கப்பட்டது. பிறகு ராஜாஜியின் படத்தை பிரதமராக இருந்த நேரு திறந்தார். அதைத்தொடர்ந்து, திருவள்ளுவ...