இதையடுத்து கடந்த 26-ம் தேதி டெல்லி தலைமை தேர்தல் கமிஷன், ஜெயலலிதா மீது வழக்குப் பதிவு செய்யச் சொல்லி தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு கடிதம் அனுப்பியிருக்கிறதாம். அதோடு, புதுக்கோட்டை, புவனகிரி தேர்தல் அதிகாரிகளாக இருந்த ஆர்.டி.ஓ-வான கந்தசாமி மற்றும் சந்தானம் ஆகிய இருவரிடமும், ‘ஏன் உங்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது’ என்று விளக்கம் கேட்டிருக்கிறதாம் தேர்தல் கமிஷன். மேலும் அந்தக் கடிதத்தில், ‘நான்கு தொகுதிகளில் வேட்புமனுத் தாக்கல் செய்த குற்றத்துக்காக ஜெயலலிதா மீது புதுக்கோட்டை மற்றும் புவனகிரி தொகுதிகளின் மாஜிஸ் திரேட்டிடம் வழக்குப் பதிவு செய்ய வேண் டும். இந்த நடவடிக்கையை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா மேற் கொள்ள வேண்டும். கந்தசாமியும் சந்தானமும் அளிக்கும் விளக்கத்தின் மீது என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது பற்றி நரேஷ் குப்தா தெரி விக்கவேண்டும்’ என்றும் குறிப்பிட்டி ருக்கிறது. இந்நிலையில், ஜெயலலிதா மீது வழக்குத் தொடர்ந்த எம்.பி-யான குப்புசாமியிடம் பேசினோம். ‘‘நான்கு தொகுதிகளில் ஜெயலலிதா வேட்புமனுத் தாக்கல் செய்ததை எதிர்த்து 2001-ம் ஆண்டு செப்டம்பர் 29-ம் தேதி டெல்லி தலைமைத் தேர்தல் கமிஷனிடம் புகார் கொடுத்தேன். அதன்மீது நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. ஆகவே, நாங்கள் நீதிமன்றத்துக்குப் போனோம். இப்போது இரண்டு தேர்தல் அதிகாரிகளுக்கு மட்டுமே நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்கள். வேட்பு மனுவை தாக்கல் செய்யும்போது இரண்டு தொகுதிகளுக்கு மேல் போட்டியிட மாட்டேன் என்று உறுதிமொழி கொடுக்க வேண்டும். அந்த உறுதிமொழியை, ஜெயலலிதா தான் போட்டியிட எண்ணி வேட்பு மனுத் தாக்கல் செய்த நான்கு இடங்களிலும் கொடுத்திருக்கிறார். நான்கு இடங்களிலும் வேட்புமனு பரிசீலனை நடந்தபோது, ‘ஏற்கெனவே கொடுத்த உறுதிமொழியை ஜெயலலிதா மீறிவிட்டார். அதனால், வேட்புமனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்...’ என்று சொல்லி எங்கள் தரப்பு ஆட்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் சொன் னார்கள். ஆனால், ஜெயலலிதாவின் வேட்பு மனு டான்சி வழக்குத் தீர்ப்பை மையமாக வைத்து தள்ளுபடி செய்யப்பட்டு விட்டதால், இந்த பிரச்னை அப்போதைக்குப் பெரிதாக எடுத்துக் கொள்ளப்படவில்லை. இருந்தாலும், நான் கோர்ட்டுக்குப் போனபிறகு இப்போது இரண்டு அதிகாரிகளுக்கு மட்டுமே தலைமைத் தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. ஆண்டி பட்டி மற்றும் கிருஷ்ணகிரி தொகுதிகளின் தேர்தல் அதிகாரிகளுக்கும் ஜெயலலிதா நான்கு இடங்களில் போட்டியிட்ட விஷயம் தெரியும் என்பதால் அவர்களுக்கும் சேர்த்துத்தான் நோட்டீஸ் அனுப்ப வேண்டும்’’ என்றார் குப்புசாமி. இந்த விஷயத்தில் எந்த மாதிரி நட வடிக்கை இருக்கும் என்பது பற்றி வக்கீல் சங்கரிடம் பேசினோம். ‘‘மக்கள் பிரதி நிதித்துவ சட்டப்பிரிவு 33(7)-ன்படி இரண்டு தொகுதிகளுக்கு மேல் ஒருவர் போட்டி யிட முடியாது. பொது ஊழியரிடம் பொய்யான தகவல்களை அளித்திருந்தால், அது இந்த சட்டப்படி குற்றமாகும். அதே சமயம், பொது ஊழியரிடம் பொய்யான தகவல் அளித்திருப்பது குறித்து இந்திய தண்டனைச் சட்டம் 177-வது பிரிவின் கீழ் வழக்குத் தொடர முடியும். அதில் குற் றம் நிரூபிக்கப்பட்டால் ஆறு மாதம் சிறை அல்லது ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக் கப்படலாம். இப்போது எழுந்திருக்கும் விவகாரத்தில் தேர்தல் கமிஷன் எந்த சட்டப் பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கும் என்பது தெரியவில்லை. தேர்தல் கமிஷன் வலியுறுத்த லின்படி புவனகிரி, புதுக்கோட்டை தேர்தல் அதிகாரிகள், சம் பந்தப்பட்ட மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இது தொடர்பாக ஜெயலலிதா மீது வழக்குத் தொடர்வார்கள்’’ என்றார். இது தொடர்பாக அ.தி.மு.க. தரப்பை அறிவதற்காக அ.தி.மு.க-வின் ராஜ்யசபா உறுப்பினரான வழக்கறிஞர் ந.ஜோதியிடம் கேட்டபோது, ‘‘இது சாதாரண விஷயம். இதுபற்றியெல்லாம் நான் என்ன கமென்ட் சொல்வது?’’ என்று சொல்லி ஒதுங்கிக் கொண்டார். தள்ளிப்போகுமா நடவடிக்கை ? ‘ஜெயலலிதா மீது ஆறு வார காலத்துக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும்...’ என்று சொல்லி, கடந்த சில நாட்களுக்கு முன்னால் சென்னை உயர் நீதிமன்றம் உத்தர விட்டிருப்பதைத் தொடர்ந்து, தலைமைத் தேர்தல் கமிஷன் நடவடிக்கையில் இறங்கி இருக்கிறது. இதற்கிடையில், கடந்த 27-ம் தேதி சென்னை உயர் நீதிமன்றத் தில் தலைமைத் தேர்தல் கமிஷன் ஒரு மனுவைத் தாக்கல் செய்தது. ‘‘ ‘ஜெயலலிதா மீது 2001-ம் ஆண்டு நடந்த குற்றத்துக்காக கோர்ட் நடவடிக்கைக்கு உத்தரவிட்டிருக்கிறது. ஆனால், மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 125 ஏ பிரிவு 2002-ம் ஆண்டில்தான் கொண்டு வரப்பட்டது. எனவே, இந்த சட்டப்படி தான் ஜெயலலிதா மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமா? அல்லது இந்திய தண்டனைச் சட்டம் 177-ன் படி நடவடிக்கை எடுக்க வேண்டுமா?’ என தெரிவிக்க வேண்டும்’’ என்று அந்த மனுவில் கோரியிருந்தது கமிஷன். இந்த மனுவும், வழக்கை ஏற்கெனவே விசாரித்த நீதிபதிகளிடம் 28-ம் தேதி விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் ஜெயலலிதா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜோதி, ‘‘ஏற்கெனவே வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்திருக் கிறோம். அதனால், இந்த மனுவை விசாரிக்கக்கூடாது...’’ என்று சொன்னார். அடுத்து குப்புசாமி சார்பில் ஆஜரான சண்முக சுந்தரம், ‘‘ஜெயலலிதாவுக்கு உதவும் வகை யில் தேர்தல் கமிஷன் புதிய மனுவை தாக்கல் செய்திருக்கிறது. இது வழக்கை கால தாமதப்படுத்தும் முயற்சி...’’ என்று வாதாடினார். இறுதியில் நீதிபதிகள், ‘‘வழக்கின் மேல்முறையீடு உச்ச நீதிமன்றத்தில் இருக்கிறது. அதனால், தேர்தல் கமிஷனின் மனுவை ஏற்க முடியாது’’ என்று சொல்லி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்கள். |
- எம்.பரக்கத் அலி படம்: வி.செந்தில்குமார்
கட்டுரை லிங்க்: https://www.vikatan.com/government-and-politics/politics/stalin-govt-open-the-kodanadu-fileseps-team-on-trouble-elangovan-explaining-it?pfrom=latest-infinite |
|
Comments