Skip to main content

பிரச்சாரம் செய்யாமலேயே வென்ற‌ செங்கோட்டையன்!

அரசியல் கட்சிகளின் பெரிய தலைவர்களே தாங்கள் போட்டியிடும் தொகுதியில் பிரசாரம் செய்வதற்கு சில நாட்களை ஒதுக்குவது வழக்கம். ஆனால், சொந்தத் தொகுதியில் பிரசாரமே செய்யாமல், வெற்றி பெற்றுவிடும் நம்பிக்கையில் தன்னுடைய கட்சித் தலைவியின் பிரசாரப் பயணத்தில் ஓடினார் ஒருவர். அவர் யாருமல்ல செங்கோட்டையன்தான். கடந்த சட்டசபைத் தேர்தலில் நடந்த விஷயம் இது.

2006 சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க.வின் முன்னணித் தலைவர்களில் ஒருவரான கே.ஏ. செங்கோட்டையன் கோபிசெட்டிபாளையத்தில் போட்டியிட்டார். ஆனால் பிரசாரத்துக்காக செல்லவில்லை. அவர் சார்பாக கட்சித் தொண்டர்களும் நிர்வாகிகளும்தான் பிரசாரம் செய்தனர். தலைவி ஜெயலலிதாவின் தேர்தல் பிரச்சார டூரை பிளான் போட்டு அதில் வெற்றியும் பதிப்பவர் செங்கோட்டையன். 2006 தேர்தலில் ஜெயலலிதா தமிழகம் முழுவதும் சுமார் 5 ஆயிரம் கி.மீ. தூரம் சுற்றி வந்தார். அந்த பயணத் திட்டத்தை வகுத்துக் கொடுத்து, அவருடனே மாநிலம் முழுவதும் சுற்றி வந்தார் செங்கோட்டையன்.
சட்டசபையில் எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்ற போது...

எம்.ஜி.ஆரின் தீவிர விசுவாசியான செங்கோட்டையன் மற்ற கட்சிகளில் இருந்து முக்கிய பிரமுகர்களை அ.தி.மு.க.வுக்கு இழுத்து வரும் வேலையை கனகச்சிதமாக அந்த தேர்தலில் செய்து கொண்டிருந்தார். 1977ம் ஆண்டு முதல் அ.தி.மு.க.வின் வேட்பாளராக இருக்கிறார். முதல் தேர்தலில் சத்தியமங்கலத்தில் வென்ற இவர், 1980, 1984, 1989, 1991 தேர்தல்களில் சொந்தத் தொகுதியான கோபிசெட்டிபாளையத்தில் வெற்றி பெற்றார். ஜானகி மற்றும் ஜெயலலிதா என்று அ.தி.மு.க. பிரிந்த சமயத்தில், ஜெ அணியின் வேட்பாளராக கோபியில் 1989ல் போட்டியிட்டு வென்றார். 1991ல் அ.தி.மு.க. ஆட்சியில் அமைச்சர் ஆனார். 1996 தேர்தலில் தோற்றுப் போனார். 1996, 2001 தி.மு.க. ஆட்சியில் இவர் மீது வழக்குத் தொடரப்பட்டது. இதையடுத்து, 2001 தேர்தலில் போட்டியிட கட்சி ஸீட் தரவில்லை. 2006 தேர்தலில் சொற்ப நாட்களே பிரச்சாரத்திற்கு போய் கோபிச்செட்டிபாளையத்தில் 4,019 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

2006 தேர்தல் முடிவு
மொத்த வாக்காளர்கள்: 1,57,445 
பதிவானவை: 1,21,516
வேட்பாளர்கள்: 7
வாக்குப்பதிவு சதவீதம்: 77.18
வாக்கு வித்தியாசம்: 4,019
செங்கோட்டையன் (அ.தி.மு.க.): 55,181
மணிமாறன் (தி.மு.க.): 51,162
நடராஜன் (தே.மு.தி.க.): 10,875
ரங்கசாமி (சுயேட்சை): 1,518
வெள்ளியங்கிரி (பி.ஜே.பி.): 1,399
பெரியசாமி (பகுஜன் சமாஜ்): 903
மினியன் (சுயேட்சை): 478

Comments

Popular posts from this blog

அழகிரி நாடு: மதுரையில் ஜெயலலிதா பேச்சு

ம‌துரையில் இன்று (அக்டோபர் 18) தி.மு.க. அரசை கண்டித்து நடந்த ஆர்பாட்டத்தில் ஜெயலலிதா பேசினார். வைகை நதிக்கரை இன்று ஒரு நாள் மட்டும் கடற்கரையாய் மாறுகின்ற வண்ணம் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எண்ணுக்குள் அடக்க முடியாத அளவுக்கு திரளாகக் கூடியிருக்கும் பாண்டி நாட்டு சகோதரர்களே - சகோதரிகளே! உங்கள் அனைவருக்கும் முதற்கண் எனது அன்பான வணக்கத்தை உரித்தாக்கிக் கொள்கிறேன். வைகை நதிக்கரைக்கு நான் வரக்கூடாது என்று கட்டவிழ்த்து விடப்பட்ட அச்சுறுத்தல் கடிதங்களை எல்லாம், நீங்கள் அனுப்பிய அழைப்பிதழ்களாகவே ஏற்றுக்கொண்டு நீதியுரை மதுரைக்கு நீதி கேட்க வந்திருக்கிறேன்.

ராமநாதபுரம் மாவட்ட தொகுதிகள் எல்லை

1. பரமக்குடி (தனி) தொகுதி பரமக்குடி தாலுக்கா, கழுதி தாலுக்கா (பகுதி) த.புனவாசல், வங்காருபுரம், பெரியானைக்குளம், அச்சங்குளம், அ.தரைக்குடி, வலாந்தை, எழுவனூர், கூடக்குளம், காக்குடி, நகரத்தார்குறிச்சி, அபிராமம், நத்தம், மரக்குளம் மற்றும் மண்டலமாணிக்கம் கிராமங்கள். அபிராமம் (பேரூராட்சி).

ஜெயலலிதாவுக்கு தண்டனையா?

  2007 ஜூலை 4 தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழில் எழுதிய கட்டுரை இது! ஜெயலலிதாவுக்கு தண்டனையா? கடந்த 2001-ம் ஆண்டு நடந்த தமிழக சட்ட சபைத் தேர்தலில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஆண்டிபட்டி, கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை மற்றும் புவனகிரி ஆகிய நான்கு தொகுதிகளில் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்தார். ஆனால் அந்த நேரத்தில், ஏற்கெனவே ஆட்சி யில் இருந்த போது விதிகளை மீறி டான்சி நிலத்தை வாங்கியதாகச் சொல்லி போடப் பட்ட வழக்கொன்றில் ஜெயலலிதாவுக்கு சிறப்பு நீதிமன்றம் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்திருந்தது. ஊழல் வழக்கில் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டால் தேர்தலில் போட்டியிட முடியாது என்பது தேர்தல் கமிஷனின் விதி. ஆகவே, ஜெயலலிதா வின் நான்கு மனுக்களும் தள்ளுபடி செய்யப் பட்டு அவர் தேர்தலில் நிற்கும் வாய்ப்பை இழந்தார். இது ஒருபுறமிருக்க, ‘மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி ஒருவர் ஒரு சமயத்தில் இரண்டு தொகுதிகளில் மட்டுமே போட்டியிட முடியும். ஆனால், நான்கு தொகுதிகளில் வேட்புமனுத் தாக்கல் செய்திருந்த ஜெயலலிதா, தான் இரண்டு தொகுதிகளுக்கு மேல் வேட்புமனுத் தாக்கல் செய்யவில்லை என...