2009 மார்ச் 4 தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழில் எழுதிய கட்டுரை இது! ''பா ரதிராஜாவின் 'சிகப்பு ரோஜாக்கள்' படத்தின் படப்பிடிப்பு, நான் சிறையில் இருந்தபோதுதான் நடந்தது. அப்போது சிறையில் இரண்டு கறுப்புப் பூனைகள் இருக்கும். ஒன்றை நாங்கள் வளர்த்தோம். மற்றொன்றை சிறைக் கண்காணிப்பாளர் விஜய நாராயணன் வளர்த்து வந்தார். அவர் அறையில் இருக்கும் போன் பெல் அடித்தாலே, அவரை அழைத்து வரும் அளவுக்குத் திறமையானது அந்தக் கறுப்புப் பூனை. இதைப் பார்த்த பாரதிராஜா, அந்தப் பூனையைப் படத்தில் நடிக்க வைத்தார்...'' பொதுமக்களின் திடீர் பிக்னிக் ஸ்பாட்டாக தற்போது மாறியிருக்கும் இடம் சென்னை சென்ட்ரல் ஜெயில். மத்திய சிறை புழலுக்கு மாற்றப்பட்டு விட்டதால், பழைய சிறையை இடிக்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.அப்படி இடிப்பதற்கு முன்பு, அதை பொதுமக்களின் காட்சிக்காகக் காவல் துறை திறந்து வைத்திருக்கிறது. நாமும் நம் பங்குக்கு 'தமிழ்த் தேசிய விடுதலை இயக்க'த்தின் பொதுச்செயலாளர் தியாகுவுடன் சிறைவலம் வந்தோம். அப்போதுதான் மேற்கண்ட 'பாரதிராஜ...
பத்திரிகைகளில் எழுதிய படைப்புகள்