Skip to main content

Posts

Showing posts with the label செய்திகள்

பா.ம.க., முஸ்லிம் லீக் கட்சிகள் தொகுதிகளை விட்டு கொடுத்திருக்கிறது: கருணாநிதி

காங்கிரஸ் கேட்ட 63 தொகுதிகளை தர முடியாது என்று மத்திய அரசில் இருந்து விலகுவதாக சொன்னது தி.மு.க. இந்த நிலையில் டெல்லியில் ஏற்பட்ட சமாதானத்திற்கு பிறகு 63 தொகுதிகளை தர சம்மதித்திருக்கிறது தி.மு.க. அறிவாலயத்தில் இன்று (மார்ச் 8) தே.மு.தி.க.வில் இருந்து தி.மு.க.வில் இணைந்த தொண்டர்கள் நிகழ்ச்சியில் கருணாநிதி கலத்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது.

கூட்டணிக்குள் புது கட்சிகள் வரும்: கருணாநிதி பேட்டி

மத்திய அரசில் இருந்து தி.மு.க. விலகல் என்கிற அறிவிப்பு வந்த பிறகு இன்று (மார்ச் 6) இரவு 7 மணிக்கு அண்ணா அறிவாலயத்திற்கு மத்திய தி.மு.க. அமைச்சர்கள் அழகிரி, தயாநிதி மாறன், நெப்போலியன் ஆகியோர் வந்தார்கள். அதன்பிறகு முதல்வர் கருணாநிதி வந்தார். ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆலோசனை நடந்தது. வெளியே வந்த கருணாநிதி நிருபர்களுக்கு அளித்தார் பேட்டி விவரம்:

பதவியைவிட கொள்கைகளே முக்கியம்: கி.வீரமணி

கலைஞர் எடுத்த - வரலாற்றில் இடம் பெறும் முக்கிய அரசியல் முடிவை உள்ளூர் தமிழர்கள் முதல் உலகத் தமிழர்கள் வரை அனைவரும் மகிழ்ச்சியுடன் வரவேற்கின்றனர். பதவிகளை விட கொள்கையே முக்கியம் என்ற ரீதியில் தி.மு.க.வின் திட்டம் அமைய வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி வேண்டுகோள் விடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

மத்திய அரசில் இருந்து விலகல். தி.மு.க. தீர்மான விவரம்

காங்கிரஸ் கூட்டணி தொடர்பாக இறுதி முடிவு எடுப்பதற்காக அண்ணா அறிவாலயத்தில் நடந்த தி.மு.க. உயர்மட்ட செயல் திட்டக் குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்:

மத்திய அரசில் இருந்து விலகல் ஏன்? கருணாநிதி அறிக்கை

காங்கிரஸ் கூட்டணி தொடர்பாக இன்று (மார்ச் 5) சென்னை அறிவாலயத்தில் நடந்த தி.மு.க. உயர்மட்ட செயல்திட்ட குழு கூட்டத்தில் முதல்வர் கருணாநிதி படித்த அறிக்கை விவரம்: இந்திய திருநாட்டின் இறையாண்மை, ஒற்றுமையும், ஒருமைப்பாடு, மதசார்பற்ற தன்மை இவற்றை கட்டிக்காக்கும் வகையில் செயல்பட்டு வருகின்ற தி.மு.க., தான் மேற்கொண்டுள்ள இந்த கொள்கையின் அடிப்படையில்தான் எந்த ஒரு கட்சியும் அணி சேர்த்து பாடுபட்டு பணியாற்றி வருகிறது.

காங்கிரஸ் நிபந்தனைக்கு தி.மு.க. கட்டுப்பட வேண்டாம்!: வீரமணி

திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி தஞ்சையில் இன்று (மார்ச் 5) வெளியிட்ட அறிக்கை: இன்று காலை தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்களது அறிக்கை - நியாய உணர்வும் சுயமரியாதை உணர்வும் உடைய அனைவரையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியிருப்பதை போன்றே நமக்கும் அதே எண்ணம் ஓடியது.

ஜெய‌ல‌லிதா, விஜ‌ய‌காந்த் ச‌ந்திப்பு ப‌ட‌ங்க‌ள்

அ.தி.மு.க. கூட்டணியில். விஜயகாந்தின் தே.மு.தி.க. கடந்த பிப்ரவரி 24ம் தேதி சேர்ந்தது. அ.தி.மு.க. அலுவலகத்திற்கு அப்பொது பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அ.தி.மு.க. சார்பில் சார்பில், தொகுதி பங்கீட்டுக் குழு உறுப்பினர்களான, பொருளாளர் ஓ. பன்னீர்செல்வம், தலைமை நிலையச் செயலாளர் கே.ஏ. செங்கோட்டையன், தேர்தல் பிரிவுச் செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன், ஆகியோர் கலந்து கொண்டனர். தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில், அக்கட்சியின் அவைத் தலைவர் பண்ருட்டி எஸ். ராமச்சந்திரன், பொருளாளர் ஆர். சுந்தர்ராஜன், இளைஞர் அணிச் செயலாளரும் விஜயகாந்தின் மச்சானுமான எல்.கே. சுதீஷ் ஆகியோர் பங்கு பெற்றனர். ஆனால் விஜ‌ய‌காந்த் வ‌ர‌வில்லை. இந்த‌ நிலையில் இன்று (மார்ச் 4) போய‌ஸ் கார்ட‌னில் ஜெய‌ல‌லிதாவை விஜ‌ய‌காந்த் ச‌ந்தித்தார். மொத்த‌ம் 25 நிமிட‌ங்க‌ள் இந்த‌ ச‌ந்திப்பு ந‌டந்த‌து.

காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணி உடைகிறது. இன்று முடிவு எடுப்போம்: கருணாநிதி அறிவிப்பு

சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணி தொடர்ந்து இழுபறியில் இருந்து வருகிறது. காங்கிரஸ் தொகுதி பங்கீட்டு குழுவை சேர்ந்த வாசன், ப.சிதம்பரம், ஜெயந்தி நடராஜன், தங்கபாலு, ஜெயகுமார் ஆகியோர் தி.மு.க. தொகுதி பங்கீடு குழுவை சேர்ந்த ஸ்டாலின், பொன்முடி, ஆற்காட்டார், துரைமுருகன், டி.ஆர்.பாலு ஆகியோருடன் இரண்டு சுற்று பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனாலும் முடிவு எட்டப்படவில்லை. காங்கிரஸ் ஆரம்பத்தில் 80 தொகுதிகள் வரை கேட்டது. கடைசியில் 65 தொகுதிகளுக்கு இறங்கி வந்தது. தி.மு.க.வோ. 54 தொகுதிகளுக்கு மேல் தர முடியாது என்று கையை விரித்தது. தொகுதி ஒதுக்கீடு தவிர ஆட்சியில் பங்கு, அமைச்சரைவையில் சரி பங்கு இடம், குறைந்தபட்ச செயல்திட்டம் என்று சில கோரிக்கைகளையும் காங்கிரஸ் வைத்தது.

தே.மு.தி.க.வுக்கு 41 தொகுதிகள்: ஜெயலலிதா அறிவிப்பு

தே.மு.தி.க.வுக்கு 41 தொகுதிகள்: ஜெயலலிதா அறிவிப்பு கடந்த பிப்ரவரி 24ம் தேதி அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இணைந்தது. ஜெயலலிதாவின் பிறந்த தினத்தில் அ.தி.மு.க. அலுவலகத்திற்கு பண்ருட்டி ராமசந்திரன், சுதிஷ் ஆகியோர் வந்து அ.தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதன்பிறகு இன்று (மார்ச் 4 ) போயஸ்கார்டனுக்கு வந்தார் விஜயகாந்த். ஜெயலலிதாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதன்பிறகு தே.மு.தி.க.வுக்கு 41 தொகுதிகளை ஜெயலலிதா அறிவித்தார். இதற்கான ஒப்பந்தத்தில் ஜெயலலிதாவும் விஜயகாந்தும் கையெழுத்திட்டனர்.

தமிழ்நாடு, புதுச்சேரிக்கு ஏப்ரல் 13ம் தேதி தேர்தல்

தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்கு வங்காளம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் சட்டசபை தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளன. புது டெல்லியில் இன்று (மார்ச் 1) தலைமை தேர்தல் ஆணையர் டாக்டர் எஸ் ஓய் குரேஷி பேட்டி அளித்த அளித்தார். பேட்டி விவரம்:

10 தொகுதிகளை பெற்றது ஏன்?: திருமாவளவன் விளக்கம்

தி.மு.க. கூட்டணியில் 10 இடங்களை பெற்றது ஏன் என்று திருமாவளவன் விளக்கம் கொடுத்திருக்கிறார். இது தொடர்பாக அவர் இன்று (மார்ச் 1) வெளியிட்ட அறிக்கை: தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தமிழகத்தில் 10 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடுவதென 28.02.2011 அன்று கூட்டணியின் தலைவர் முதல்வர் கலைஞருடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தைப் பெறத்தக்க அளவிலான தொகுதிகளைப் பெற்று போட்டியிட வேண்டுமென்பது விடுதலைச் சிறுத்தைகளின் எதிர்பார்ப்பாக இருந்தது.

விடுதலைச் சிறுத்தைகளுக்கு 10 இடங்கள்: தி.மு.க. அறிவிப்பு

தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் திருமாவளவனின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 10 தொகுதிகள் வழங்கப்பட்டிருக்கிறது. இன்று (பிப்ரவரி 28) அறிவாலயத்திற்கு வந்த திருமவளவன் கருணாநிதியோடு தொகுதி ஒப்பந்தம் போட்டார். தொகுதி பங்கீடு ஒப்பந்தத்தில் திருமாவளனும் கருணாநிதியும் கையெழுத்திட்டார்கள். அப்போது தி.மு.க. தொகுதி பங்கீடு குழுவை சேர்ந்த ஸ்டாலின், துரைமுருகன், பொன்முடி ஆகியோர் உடன் இருந்தனர்.

ராசாத்தி, கனிமொழி, நிலவிவகாரம்: ஜெயலலிதா அறிக்கை

ஜெயலலிதா இன்று (பிப்ரவரி 27) வெளியிட்ட அறிக்கை: சில மாதங்களுக்கு முன்பு, களங்கத்திற்கு ஆளான அரசியல்-வணிகர் தரகர் நீரா ராடியாவுக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் கருணாநிதியின் மூன்றாவது மனைவி ராசாத்திக்கும் இடையிலான தொலைபேசி உரையாடல் குறித்து இந்திய ஊடகங்கள் விரிவாக செய்திகளை வெளியிட்டன.

காங்கிர‌ஸ் 234 தொகுதிக‌ள் கேட்கிற‌து: க‌ருணாநிதி பேட்டி

அறிவாலயத்தில் இன்று (பிப்ரவரி 26) காங்கிரஸ் தொகுதி பங்கீட்டு குழுவை சேர்ந்த தங்கபாலு, வாசன், சிதம்பரம், ஜெயந்தி நடராஜன், ஜெயக்குமார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். தி.மு.க. குழுவில் ஸ்டாலின் டி.ஆர். பாலு, பொன்முடி ஆகியோர் கலந்து கொண்டனர். காங்கிரஸ் 70 தொகுதிகளுக்கு மேல் கேட்டு வரும் நிலையில் முதல் கட்ட பேச்சுவார்த்தை கடந்த ஞாயிற்றுக் கிழமை நடந்தது. இன்று இரண்டாவது கட்ட பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் எட்டப்படவில்லை.

உழவர் கட்சியுடன் தி.மு.க. பேச்சுவார்த்தை

அ.தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடுகள் ஜெட் வேகத்தில் போய்க் கொண்டிருக்கிறது. மனிதநேய மக்கள் கட்சி, பார்வர்டு பிளாக், இந்திய குடியரசு கட்சி, புதிய தமிழகம் ஆகிய கட்சிகளுக்கு தொகுதி பங்கீட்டை ஜெயலலிதா முடித்துவிட்டார். தே.மு.தி.க. இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள், ம.தி.மு.க. மட்டுமே பாக்கி.

அ.தி.மு.க. தே.மு.தி.க. கூட்டணி வைபவ படங்கள்

அ.தி.மு.க. கூட்டணியில் விஜய்காந்தின் தே.மு.தி.க. ஒருவழியாக இணைந்துவிட்டது. அ.தி.மு.க. அலுவலகத்தில் நடந்த பேச்சுவார்த்தை தொடர்பான படங்கள் இங்கே...

அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்தது தே.மு.தி.க.

அ.தி.மு.க. கூட்டணியில். விஜயகாந்தின் தே.மு.தி.க. சேருமா? என்று கடந்த சில மாதங்களாக நிலவி வந்த செய்திக்கு இன்று முற்றுப்புள்ளி விழுந்திருக்கிறது. ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24ம் தேதி அ.தி.மு.க. தலைமை அலுவலகத்திற்கு தே.மு.தி.க. நிர்வாகிகள் வந்து கூட்டணி உறுதி செய்தனர்.

பார்வர்டு பிளாக் கட்சிக்கு 1 சீட்: ஜெயலலிதா அறிவிப்பு

ஜெயலலிதாவை அவரது போயஸ் கார்டன் இல்லத்தில் இன்று (பிப்ரவரி 23) அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் தேசிய செயலாளரும், மேற்கு வங்க மாநிலத்தின் வேளாண்மைத் துறை அமைச்சருமான ந‌ரேந்திரநாத் டே, தேசிய செயலாளரும், மாநில தேர்தல் பார்வையாளருமான ஜி. தேவராஜன், தமிழ் மாநில பொதுச் செயலாளர் ஞ.ஏ. கதிரவன், மத்தியக் குழு உறுப்பினர்கள் பி.எஸ். ஜெயராமன், எம். ராஜசேகர், தமிழ் மாநில நிதிச் செயலாளர் ஆர். மாயத்தேவர் ஆகியோர் நேரில் சந்தித்தனர்.

அ.தி.மு.க. விருப்ப மனு: 12.14 கோடி வசூல்

தமிழக சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புகிறவர்கள் தங்களது விருப்ப மனுக்களை பிப்ரவரி 5 முதல் 23ம் தேதி வரை அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் தாக்கல் செய்யலாம் என்று ஜெயலலிதா அறிவித்திருந்தார். அதன்படி 23ம் தேதி வரை 12,268 விருப்ப மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதில் ஜெயலலிதா தங்களது தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்று விருப்பம் தெரிவித்து, தமிழ்நாட்டில் 1,503 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. கட்சிக்காரர்கள் போட்டியிடுவதற்காக தமிழகத்தில் 10,553 மனுக்களும் புதுச்சேரியில் 181 மனுக்களும் கேரள மாநிலத்தில் 31 மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.

எரிக்கப்பட்ட கலைஞர் டி.வி. ஆவணங்கள்: ஜெயலலிதா அறிக்கை

ஜெயலலிதா இன்று (பிப்ரவரி 20) வெளியிட்ட அறிக்கை: கிரிமினல் புத்தியோடு செயல்படுவதில் வல்லவரான கருணாநிதியை எதிர்கொள்வதில் எந்த அளவுக்கு சாமார்த்தியமாக, விவேகத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்ற உண்மையை ஒரு லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய் ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழல் குறித்து ஆய்வு நடத்திக் கொண்டு இருக்கும் மத்திய புலனாய்வுத் துறை அதிகாரிகள் உணராதது துரதிர்ஷ்டவசமானது.