ஜெயலலிதா... டாஸ்மாக்... மதுவிலக்கு... படிப்படியாக! 2015 ஏப்ரல் 20 தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழில் எழுதிய கட்டுரை இது! ‘‘பூ ரண மதுவிலக்குதான் . எப்பொழுதும் நான் கொண்டுள்ள கொள்கை. தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைத்தவுடன், மதுவிலக்குப் படிப்படியாக அமல்படுத்தப்பட்டு பூரண மதுவிலக்கு என்ற நிலை எய்தப்படும்.’’ - சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தில் ஜெயலலிதாவின் புதிய முழக்கம் இது. மதுவிலக்கு திகில்தான் இப்படி வார்த்தைகளாக வந்துவிழுந்திருக்கின்றன. ‘‘டாஸ்மாக் கடைகளின் நேரம் முதலில் குறைக்கப்படும். பிறகு கடைகளின் எண்ணிக்கை குறைக்கப்படும். பின்னர் பார்கள் மூடப்படும். குடிகாரர்களை மீட்பதற்கு மீட்பு நிலையங்கள் ஏற்படுத்தப்படும்’’ என்றெல்லாம் கலர் மத்தாப்புகளைக் கொளுத்திப் போட்டிருக்கிறார் ஜெயலலிதா. ஐந்தாண்டுகள் சும்மா இருந்த அம்மாவின் தேர்தல் வாக்குறுதி பலிக்குமா? பல் இளிக்குமா? ‘‘கேளுங்கள் வாக்காளப் பெருமக்களே, உண்மையைக் கேளுங்கள். வரலாறு மக்களுக்குத் தெரியாது என்று கருணாநிதி நினைக்கிறாரா? நடந்த பழைய வரலாறுகளை மக்கள் மறந்துவிட்டார்கள் என்று நினைக்கிறார்களா?’’ - இதுவும் தீ...
பத்திரிகைகளில் எழுதிய படைப்புகள்