Skip to main content

ஜெயலலிதாவுடன் சோ சந்திப்பு

ஜெய‌ல‌லிதாவை இன்று (ஜ‌ன‌வ‌ரி 1)மாலை போய‌ஸ் கார்ட‌ன் இல்ல‌த்தில் துக்ளக் பத்திரிகையின் ஆசிரியர் சோ சந்தித்து பேசினார்.கடந்த வியாழக் கிழமை அ.தி.மு.க.வின் பொதுக்குழு கூட்டம் நடந்து முடிந்திருக்கும் நிலையில் இந்த சந்திப்பு நடந்திருக்கிறது. "சில கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறேன். ஒரு சில நாட்களில் கூட்டணி பற்றிய அறிவிப்பு வெளியிடுவேன்" என்று பொதுக்குழுவில் ஜெயலலிதா அறிவித்தார். இந்த நிலையில் ஜெயலலிதாவை சோ சந்தித்தது முக்கியத்துவம் பெறுகிறது. தேர்தல் மூவ், கூட்டணி பற்றிதான் சோவுடன் ஜெயலலிதா ஆலோசனை நடத்தியிருக்கலாம் அல்லது பி.ஜே.பி.யை கூட்டணிக்குள் சேர்த்துக் கொள்ள சொல்லி சோ கேட்டிருக்கலாம் என்று இந்த சந்திப்புக்கு காரணங்கள் சொல்லப்படுகின்றன. துக்ளக் பத்திரிகையின் ஆண்டு விழா பொங்கல் தினத்தில் நடைபெறுவது வழக்கம். அந்த விழாவிற்கு ஜெயலலிதாவை சோ அழைத்திருக்கலாம் என்றும் சொல்கிறார்கள்.
சோ சந்திப்புக்கு பிறகு தமிழக சட்டசபைத் தேர்தல் தொடர்பாக போயஸ் கார்டனில் ஜெயலலிதா தலைமையில் அ.தி.மு.க. நிர்வாகிகளின் ஆலோச‌னை கூட்ட‌ம் நடைபெற்ற‌து. இந்த கூட்டத்தில், பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம், தலைமை நிலையச் செயலாளர் கே.ஏ. செங்கோட்டையன், கொள்கை பரப்புச் செயலாளர் தம்பிதுரை, தேர்தல் பிரிவுச் செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன், அமைப்புச் செயலாளர் செம்மலை, தேர்தல் பிரிவு இணைச் செயலாளர் பாலகங்கா, மருத்துவ அணித் தலைவர் மைத்ரேயன், ஆகியோர் கலந்து கொண்டனர்.

Comments

Popular posts from this blog

அழகிரி நாடு: மதுரையில் ஜெயலலிதா பேச்சு

ம‌துரையில் இன்று (அக்டோபர் 18) தி.மு.க. அரசை கண்டித்து நடந்த ஆர்பாட்டத்தில் ஜெயலலிதா பேசினார். வைகை நதிக்கரை இன்று ஒரு நாள் மட்டும் கடற்கரையாய் மாறுகின்ற வண்ணம் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எண்ணுக்குள் அடக்க முடியாத அளவுக்கு திரளாகக் கூடியிருக்கும் பாண்டி நாட்டு சகோதரர்களே - சகோதரிகளே! உங்கள் அனைவருக்கும் முதற்கண் எனது அன்பான வணக்கத்தை உரித்தாக்கிக் கொள்கிறேன். வைகை நதிக்கரைக்கு நான் வரக்கூடாது என்று கட்டவிழ்த்து விடப்பட்ட அச்சுறுத்தல் கடிதங்களை எல்லாம், நீங்கள் அனுப்பிய அழைப்பிதழ்களாகவே ஏற்றுக்கொண்டு நீதியுரை மதுரைக்கு நீதி கேட்க வந்திருக்கிறேன்.

ஸ்பெக்ட்ரம் பலூன் 'புஸ்" ஆகி விடும்: வீரமணி

திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி இன்று (டிசம்பர் 22) வெளியிட்ட அறிக்கை: தொலைத்தொடர்புத் துறையின் தற்போதைய அமைச்சர் கபில்சிபல் நேற்றிரவு தனியார் செய்தித் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், பல்வேறு திடுக்கிடக் கூடிய தகவல்களை ஆணித்தரமான முறையில் விளக்கியுள்ளார்.1999ம் ஆண்டில் - பாரதீய ஜனதா ஆட்சியில், வாஜ்பாய் பிரதமராக இருந்த காலகட்டத்தில் - கடைப்பிடிக்கப்பட்டதொலைத்தொடர்பு கொள்கையினால், மத்திய அரசுக்கு ஏற்பட்ட இழப்புத் தொகை ஒரு லட்சத்து 43 ஆயிரம் கோடியாகும் என்பதை சுட்டிக்காட்டியுள்ளார். 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு சம்பந்தமாக இந்த இழப்பு - இது இப்போது சொல்லப்படுவது போன்ற கற்பனையின் அடிப்படையில் சொல்லப்படும் தொகை அல்ல; நடைமுறைக் கணக்குப்படி ஏற்பட்ட இழப்புத் தொகையாகும்.

பதவியைவிட கொள்கைகளே முக்கியம்: கி.வீரமணி

கலைஞர் எடுத்த - வரலாற்றில் இடம் பெறும் முக்கிய அரசியல் முடிவை உள்ளூர் தமிழர்கள் முதல் உலகத் தமிழர்கள் வரை அனைவரும் மகிழ்ச்சியுடன் வரவேற்கின்றனர். பதவிகளை விட கொள்கையே முக்கியம் என்ற ரீதியில் தி.மு.க.வின் திட்டம் அமைய வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி வேண்டுகோள் விடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.