Skip to main content

கருணாநிதி டெல்லி பேட்டி முழு விவரம்


உள் நாட்டு பாதுகாப்பு தொடர்பாக டெல்லியில் நடைபெறும் முதல்வர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக முதல்வர் கருணாநிதி இன்று (ஜனவரி 30) டெல்லி சென்றார். அங்கே பத்திரிகையாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி:

கேள்வி: டெல்லிக்கு வந்திருக்கிறீர்கள். யார் யாரைச் சந்திக்க இருக்கிறீர்கள்?

பதில்: காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியையும், பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கையும் சந்திக்கவிருக்கிறேன்.

கேள்வி: என்ன பேசவிருக்கிறீர்கள்? தேர்தல் உடன்படிக்கை செய்ய விருக்கிறீர்களா?

பதில்: நாளைக்கு பேசிய பிறகுதானே விவரங்கள் தெரியும். நாளைக்குச் சொல்கிறேன்.

கேள்வி: எத்தனை தொகுதிகள், எந்தெந்த தொகுதிகள் என்பதெல்லாம் இரண்டு நாட்களுக்குள் உறுதியாகிவிடுமா?

பதில்: இப்போதே சொல்ல முடியாது. பேசிய பிறகு சொல்கிறேன்.

கேள்வி: தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் தவிர வேறு எந்தெந்த கட்சிகள் இடம் பெறுவதாக உள்ளன?

பதில்: மற்றக் கட்சிகளோடு இன்னும் பேசவில்லை. தற்போதுள்ள நிலையில் விடுதலை சிறுத்தைகள், பாட்டாளி மக்கள் கட்சி,  முஸ்லீம் லீக்,  புரட்சி பாரதம் போன்ற கட்சிகள் எங்கள் அணியிலே உள்ளன.

கேள்வி: மீனவர்கள் பிரச்சினை பற்றி பிரதமரிடம் பேசும்போது குறிப்பிடுவீர்களா?

பதில்: தமிழக மீனவர்கள் படும் துன்பங்கள் பற்றி தொடர்ந்து பிரதமரிடம்  பேசிக் கொண்டே இருக்கிறேன். இப்போதும் பேசுவேன்.

Comments

Popular posts from this blog

அழகிரி நாடு: மதுரையில் ஜெயலலிதா பேச்சு

ம‌துரையில் இன்று (அக்டோபர் 18) தி.மு.க. அரசை கண்டித்து நடந்த ஆர்பாட்டத்தில் ஜெயலலிதா பேசினார். வைகை நதிக்கரை இன்று ஒரு நாள் மட்டும் கடற்கரையாய் மாறுகின்ற வண்ணம் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எண்ணுக்குள் அடக்க முடியாத அளவுக்கு திரளாகக் கூடியிருக்கும் பாண்டி நாட்டு சகோதரர்களே - சகோதரிகளே! உங்கள் அனைவருக்கும் முதற்கண் எனது அன்பான வணக்கத்தை உரித்தாக்கிக் கொள்கிறேன். வைகை நதிக்கரைக்கு நான் வரக்கூடாது என்று கட்டவிழ்த்து விடப்பட்ட அச்சுறுத்தல் கடிதங்களை எல்லாம், நீங்கள் அனுப்பிய அழைப்பிதழ்களாகவே ஏற்றுக்கொண்டு நீதியுரை மதுரைக்கு நீதி கேட்க வந்திருக்கிறேன்.

ஸ்பெக்ட்ரம் பலூன் 'புஸ்" ஆகி விடும்: வீரமணி

திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி இன்று (டிசம்பர் 22) வெளியிட்ட அறிக்கை: தொலைத்தொடர்புத் துறையின் தற்போதைய அமைச்சர் கபில்சிபல் நேற்றிரவு தனியார் செய்தித் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், பல்வேறு திடுக்கிடக் கூடிய தகவல்களை ஆணித்தரமான முறையில் விளக்கியுள்ளார்.1999ம் ஆண்டில் - பாரதீய ஜனதா ஆட்சியில், வாஜ்பாய் பிரதமராக இருந்த காலகட்டத்தில் - கடைப்பிடிக்கப்பட்டதொலைத்தொடர்பு கொள்கையினால், மத்திய அரசுக்கு ஏற்பட்ட இழப்புத் தொகை ஒரு லட்சத்து 43 ஆயிரம் கோடியாகும் என்பதை சுட்டிக்காட்டியுள்ளார். 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு சம்பந்தமாக இந்த இழப்பு - இது இப்போது சொல்லப்படுவது போன்ற கற்பனையின் அடிப்படையில் சொல்லப்படும் தொகை அல்ல; நடைமுறைக் கணக்குப்படி ஏற்பட்ட இழப்புத் தொகையாகும்.

பதவியைவிட கொள்கைகளே முக்கியம்: கி.வீரமணி

கலைஞர் எடுத்த - வரலாற்றில் இடம் பெறும் முக்கிய அரசியல் முடிவை உள்ளூர் தமிழர்கள் முதல் உலகத் தமிழர்கள் வரை அனைவரும் மகிழ்ச்சியுடன் வரவேற்கின்றனர். பதவிகளை விட கொள்கையே முக்கியம் என்ற ரீதியில் தி.மு.க.வின் திட்டம் அமைய வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி வேண்டுகோள் விடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.