Skip to main content

பதவியைவிட கொள்கைகளே முக்கியம்: கி.வீரமணி

கலைஞர் எடுத்த - வரலாற்றில் இடம் பெறும் முக்கிய அரசியல் முடிவை உள்ளூர் தமிழர்கள் முதல் உலகத் தமிழர்கள் வரை அனைவரும் மகிழ்ச்சியுடன் வரவேற்கின்றனர். பதவிகளை விட கொள்கையே முக்கியம் என்ற ரீதியில் தி.மு.க.வின் திட்டம் அமைய வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி வேண்டுகோள் விடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அறிக்கை விவரம்:

வரலாற்றில் இடம் பெறும் முக்கிய அரசியல் முடிவை எடுத்த தி.மு.க. அதன் தலைவருக்கு நமது பாராட்டும் மகிழ்ச்சியும். தமிழ் மானம், தன்மானம் இவற்றை எல்லாம் காப்பதுதான் தி.மு.க.வின் அடிப்படை லட்சியம் - குறிக்கோள் என்பதை பறைசாற்றிய இந்த முடிவு உலகத் தமிழர்கள் முதல் உள்ளூர்த் தமிழர்கள்வரை அனைவரும் வரவேற்கும் முடிவாக அமைந்துவிட்டது.

இனி, தி.மு.க., கறந்தபால் முலை, புகா; கடைந்த வெண்ணெய் மோர் புகா என்ற சிந்தனைக்குரிய சித்தர்கள் வாக்கினை எண்ணிப் பார்த்து, பதவிகளைவிட, கொள்கைகளும் அவற்றைப் பரப்பிடும் இயக்கமுமே முக்கியம் என்பதை கருத்தில் கொண்டு நடந்தால் அனைவருக்கும் நல்லது. கட்சித் தோழர்கள், இனவுணர்வாளர்கள், லட்சிய வீரர்கள் மகிழ்ச்சியை நிரந்தரமாக்கும் வகையில் தி.மு.க. வின் தேர்தல் பணித் திட்டம் அமைய வேண்டும் என்பதே நமது அடக்கமான ஆசையாகும்.

Comments

ஊருக்குத்தான் உபதேசமா.....?
ஊருக்குத்தான் உபதேசமா.....?
மூன்று தொகுதிகளுக்காக கூட்டணியை முறித்த கருணாநிதி அன்று ஈழ தமிழர்களை கொல்லும் போது இதை செய்திருந்தால் இவர் உண்மையிலே தமிழர் தலைவர் என்று வரலாறு பதிந்திருக்கும்
தேர்தல் ஸ்பெஷல் வலைபூவா? நல்ல முயற்சி.

எனது வலைபூவில் இன்று:
ஆளுங்கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள்

Popular posts from this blog

அழகிரி நாடு: மதுரையில் ஜெயலலிதா பேச்சு

ம‌துரையில் இன்று (அக்டோபர் 18) தி.மு.க. அரசை கண்டித்து நடந்த ஆர்பாட்டத்தில் ஜெயலலிதா பேசினார். வைகை நதிக்கரை இன்று ஒரு நாள் மட்டும் கடற்கரையாய் மாறுகின்ற வண்ணம் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எண்ணுக்குள் அடக்க முடியாத அளவுக்கு திரளாகக் கூடியிருக்கும் பாண்டி நாட்டு சகோதரர்களே - சகோதரிகளே! உங்கள் அனைவருக்கும் முதற்கண் எனது அன்பான வணக்கத்தை உரித்தாக்கிக் கொள்கிறேன். வைகை நதிக்கரைக்கு நான் வரக்கூடாது என்று கட்டவிழ்த்து விடப்பட்ட அச்சுறுத்தல் கடிதங்களை எல்லாம், நீங்கள் அனுப்பிய அழைப்பிதழ்களாகவே ஏற்றுக்கொண்டு நீதியுரை மதுரைக்கு நீதி கேட்க வந்திருக்கிறேன்.

ஜெயலலிதாவுக்கு தண்டனையா?

  2007 ஜூலை 4 தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழில் எழுதிய கட்டுரை இது! ஜெயலலிதாவுக்கு தண்டனையா? கடந்த 2001-ம் ஆண்டு நடந்த தமிழக சட்ட சபைத் தேர்தலில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஆண்டிபட்டி, கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை மற்றும் புவனகிரி ஆகிய நான்கு தொகுதிகளில் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்தார். ஆனால் அந்த நேரத்தில், ஏற்கெனவே ஆட்சி யில் இருந்த போது விதிகளை மீறி டான்சி நிலத்தை வாங்கியதாகச் சொல்லி போடப் பட்ட வழக்கொன்றில் ஜெயலலிதாவுக்கு சிறப்பு நீதிமன்றம் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்திருந்தது. ஊழல் வழக்கில் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டால் தேர்தலில் போட்டியிட முடியாது என்பது தேர்தல் கமிஷனின் விதி. ஆகவே, ஜெயலலிதா வின் நான்கு மனுக்களும் தள்ளுபடி செய்யப் பட்டு அவர் தேர்தலில் நிற்கும் வாய்ப்பை இழந்தார். இது ஒருபுறமிருக்க, ‘மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி ஒருவர் ஒரு சமயத்தில் இரண்டு தொகுதிகளில் மட்டுமே போட்டியிட முடியும். ஆனால், நான்கு தொகுதிகளில் வேட்புமனுத் தாக்கல் செய்திருந்த ஜெயலலிதா, தான் இரண்டு தொகுதிகளுக்கு மேல் வேட்புமனுத் தாக்கல் செய்யவில்லை என...

திருவண்ணாமலை மாவட்ட தொகுதிகள் எல்லை

1. செங்கம் (தனி) தொகுதி செங்கம் தாலுக்கா (பகுதி) குப்பநத்தம், பரமனந்தல், தீத்தாண்டப்பட்டு, வளயெம்பட்டு, புதுப்பட்டு, ஆலப்புத்தூர், குயிலம், அன்வராபாத், செ.நாச்சிப்பட்டு, காயம்பட்டு, சென்னசமுத்திரம், பக்கிரிப்பாளையம், அரசன்கன்னி, மேல்செங்கம், மேல்செங்கம் (ஆர்.எப்), அந்தனூர், மேல்புலதியூர், பெரும்பட்டம், மண்மலை, கரியமங்கலம், பிஞ்சூர், வேடங்குப்பம், மேல்பள்ளிப்பட்டு, மேல்வணக்கம்பாடி, ஆனந்தவாடி (ஆர்.எப்), ஆனந்தவாடி, கட்டமடுவு, நரடாப்பட்டு, மேல்ராவந்தவாடி, கரியமலைப்பாடி, ஆண்டிப்பட்டி, தம்புநாய்க்கன்பட்டி, மண்ணாண்டிப்பட்டி, பொரசப்பட்டு, தாழையூத்து, அரட்டவாடி, அரியாகுஞ்சூர், சொரப்பனந்தல், மேல்பொஎன்னாத்தூர், உச்சிமலைக்குப்பம், விண்ணவனுர், பாய்ச்சல், நல்லூர், கண்ணக்குருக்கை, சின்னகோளப்பாடி, பாலியப்பட்டு, அஸ்வனகாசுருணை, பெரியகோளப்பாடி, பீமானந்தல், மேல்கரிப்பூர், கோழுந்தம்பட்டு, சாத்தனூர், சாத்தனூர் அணை, நீப்பத்துறை, வெள்ளாலம்பட்டி, இளங்குன்னி, குருமப்பட்டி, கல்லடாவி, மணிக்கல், புளியம்பட்டி, கருங்காலிப்பாடிபட்டி, வேப்பூர்செக்கடி, வீரணம், தரடாப்பட்டு, கணக்கந்தல், நெடுங்கவாடி, செ.அகரம், பெரும்பாக...