2006 தேர்தலில் நடந்த இன்னொரு அதிசயம் விஜயகாந்த் என்ட்ரிதான். கட்சி தொடங்கிய சில மாதங்களிலேயே 2006 சட்டசபைத் தேர்தல் வர தன்னந்தனியாக களமிறங்கினார் விஜயகாந்த். அந்த தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிட்ட ஒரே கட்சி ‘தேசிய முற்போக்கு திராவிட கழகம்‘தான். கட்சிகள் எல்லாம் கூட்டணிக்கு ஆள் பிடிக்க அலைந்து கொண்டிருந்த நேரத்தில் தனியாக போட்டியிட்டார் கேப்டன்.
2006 தேர்தல் பிரச்சாரத்தில் விஜயகாந்த் சென்ற இடம் எல்லாம் மக்கள் வெள்ளம். பெண்கள், இளைஞர்களிடையே நல்ல வரவேற்பு. அப்போது ஆளும் கட்சியாக இருந்த அ.தி.மு.க.வை பெயருக்கு எதிர்த்துவிட்டு எதிர்கட்சியாக இருந்த தி.மு.க.வைதான் ஒரு பிடி பிடித்தார். அவருடைய கல்யாண மண்டப இடிப்பு விவகாரத்தில் தி.மு.க. மீது அவருக்கு கடுமையான கோபம் இருந்ததும் பிரச்சாரத்தில் எதிரொலித்தது.
விஜயகாந்துக்கு அடுத்தபடியாக ஓரளவு பரிச்சயமான முகம் முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன்தான். அதோடு அவருடைய மைத்துனர் சுதிஷ் குடியாத்தம் தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் தேர்தலில் விஜயகாந்த் மட்டுமே வெற்றி பெற்றார். ஆனாலும் தேர்தலில் விஜயகாந்த் கட்சி வாங்கி வாக்கு சதவீதம் எல்லோரையும் திரும்பி பார்க்க வைத்தது.

Comments