Skip to main content

கூட்டணி கட்சிகளுக்கு தி.மு.க.வின் விருது உற்சவம்!

தமிழ் மொழி வளர்ச்சிக்கும், தமிழ்ப் பண்பாட்டு மேன்மைக்கும் தொண்டாற்றிடும் தமிழறிஞர்கள், கவிஞர்கள், சமூக நீதிக்கு உழைத்திடும் பெருமக்கள் ஆகியோரில் சிறந்தோரைத் தேர்வு செய்து சான்றோர்கள் பெயரில் ஆண்டுதோறும் தமிழக அரசின் சார்பில் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி 2011ம் ஆண்டுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கிறது. சில மாதங்களில் தமிழக சட்டசபைக்கு தேர்தல் வருவதால் கூட்டணிக் கட்சிகளை குளிர்விக்கும் வகையில் விருதுகள் தரப்பட்டிருக்கின்றன.
   

விருது பெறுபவர்கள் பட்டியல்:
1. திருவள்ளுவர் விருது: முனைவர் பா. வளன் அரசு 
2. பெரியார் விருது: கோ. சாமிதுரை 
3. அறிஞர் அண்ணா விருது: ரவிக்குமார் எம்.எல்.ஏ.
4. அம்பேத்கர் விருது: டி.யசோதா எம்.எல்.ஏ.
5. காமராசர் விருது: ஜெயந்தி நடராஜன் எம்.பி.
6. பாரதியார் விருது: நா. மம்மது
7. திரு.வி.க. விருது: பேராசிரியர் அ.அய்யாசாமி
8. பாரதிதாசன் விருது: முனைவர் இரா. இளவரசு
9. கி.ஆ.பெ. விசுவநாதம் விருது: முனைவர் இரா. மதிவாணன்

விருது பெறுவோர் ஒவ்வொருவருக்கும் தலா ஒரு லட்சம் ரூபாய் பொற்கிழியுடன், தங்கப்பதக்கமும், தமிழக அரசின் சார்பில் அணிவிக்கப்படும். வரும் 16ம் தேதி திருவள்ளுவர் தினத்தன்று  முதல்வர் கருணாநிதி இந்த விருதுகளை வழங்குகிறார்.

தி.மு.க‌. கூட்ட‌ணியில் அங்க‌ம் வ‌கிக்கும் விடுத‌லைச் சிறுத்தைக‌ள் க‌ட்சியின் எம்.எல்.ஏ. ர‌விக்குமாருக்கு அண்ணா விருது வ‌ழ‌ங்க‌ப்ப‌ட்டிருக்கிற‌து. இவ‌ர் தொட‌ர்ந்து க‌ருணாநிதியை பாராட்டி க‌ட்டுரைக‌ள் எழுதி வ‌ருகிறார். காங்கிர‌ஸ் எம்.எல்.ஏ. ய‌சோதா, காங்கிர‌ஸ் எம்.பி. ஜெய‌ந்தி ந‌ட‌ராஜ‌ன் ஆகியோருக்கு முறையே அம்பேத்க‌ர் விருதும் காம‌ராஜ‌ர் விருதும் வ‌ழ‌ங்க‌ப்ப‌ட்டிருக்கிற‌து. க‌ட‌ந்த‌ வார‌ம் ப‌ல்லாவ‌ர‌த்தில் ச‌ர்க்க‌ரை பொங்க‌ல் பொருட்க‌ள் வ‌ழ‌ங்கும் விழாவில் ய‌சோதா ப‌ங்கேற்று பேசும் போது தி.மு.க. ஆட்சியில் ஒரு நாளைக்கு எத்தகைய நன்மைகளை சாமான்ய மக்கள், அனுபவிக்கிறார்கள் என்பதை வரிசையாக பட்டியல் போட்டு பேசினார். "கர்பம் அடைந்த பெண்களுக்கு 6 ஆயிரம் ரூபாய், அவர்கள் குழந்தைகளை வளர்க்க ஆகும் செலவு இவைகளையெல்லாம் இந்த அரசு தாயாக இருந்து கொடுத்து, பாதுகாக்கிறது" என்று கருணாநிதி ரொம்பவே ஐஸ் மழை கொட்டி பேசினார். அப்படிப்பட்ட யசோதாவுக்கு இந்த விருது வழங்கப்பட்டிருக்கிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இதே யசோதாவுக்கு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் இருந்து சமூக சேவகர் என்ற பிரிவில் வீடும் வழங்கப்பட்டிருக்கிறது.

பல்லாவரம் விழாவில் பேசிய கருணாநிதிகூட ய‌சோதாவை சேலை கட்டிய துரைமுருகன் என்று வர்ணித்தார். "யசோதா தி.மு.க. ஆட்சியின் திட்டங்களை அருமையாக சொன்னார். எதிர்காலத்திலும் அதைச் சொல்வார்கள்" என்று பொடி வைத்து பேசினார். இப்போது அந்த யசோதாவுக்கு க‌ருணாநிதி பதில் ம‌ரியாதை செய்திருக்கிறார்.
ப‌ல்லாவ‌ர‌ம் விழாவில் க‌ருணாநிதியோடு ய‌சோதா

காங்கிர‌ஸ் க‌ட்சியின் செய்தித் தொட‌ர்பாள‌ர் ஜெய‌ந்தி ந‌ட‌ராஜ‌னையும் விருது வ‌ழ‌ங்கி குளிர்வித்திருக்கிறார்க‌ள். பிர‌த‌ம‌ர் சென்னை வ‌ந்த‌ போது முத‌ல்நாள் ஏர்போர்ட்டிற்கும் க‌வ‌ர்ன‌ர் மாளிகைக்கும் போகாம‌ல் வைர‌முத்து விழாவில் க‌ல‌ந்து கொண்டார் க‌ருணாநிதி. இதுப‌ற்றி விம‌ர்ச‌ன‌ம் எழுந்ததும் அடுத்த‌ நாள் க‌வ‌ர்ன‌ர் மாளிகைக்கு போய் பிர‌த‌ம‌ரை ச்ந்தித்தார். காங்கிர‌ஸ் தி.மு.க‌. கூட்ட‌ணியை த‌க்க‌ வைக்க‌ க‌ருணாநிதி இன்னும் என்னென்ன‌ முய‌ற்சி‌க‌ள் எடுப்பாரோ தெரிய‌வில்லை.

Comments

Yoga.s.FR said…
ஒன்றும் அப்பன் வீட்டுக் காசோ,திருக்குவளையிலிருந்து கொண்டு வந்த காசோ அல்லவே?வெற்றூ மஞ்சள் பையுடன் மெட்ராஸ் வந்தவர்,பொற்கிழியும்,விருதும் வழங்குகிறார்!
butterfly Surya said…
அகில உலக ஐஸ் மன்னன் ஜெகத்ரட்சகனுக்கு எந்த விருதும் இல்லையா..? அய்யகோ...
sathish said…
இதையும் படிச்சி பாருங்க

இந்திய மூளை வெங்காயமா?
bodhi said…
ரவிக்குமார் ச ம உறுப்பினர் ஆனதிலிருந்து
பல ஆக்கபூர்வமான பணி செய்திருக்கிறார்
இதை விட பெரிய விருது அவருக்கு வழங்கி இருக்கவேண்டு

Popular posts from this blog

ராமநாதபுரம் மாவட்ட தொகுதிகள் எல்லை

1. பரமக்குடி (தனி) தொகுதி பரமக்குடி தாலுக்கா, கழுதி தாலுக்கா (பகுதி) த.புனவாசல், வங்காருபுரம், பெரியானைக்குளம், அச்சங்குளம், அ.தரைக்குடி, வலாந்தை, எழுவனூர், கூடக்குளம், காக்குடி, நகரத்தார்குறிச்சி, அபிராமம், நத்தம், மரக்குளம் மற்றும் மண்டலமாணிக்கம் கிராமங்கள். அபிராமம் (பேரூராட்சி).

புதுக்கோட்டை மாவட்ட தொகுதிகள் எல்லை

1. கந்தர்வக்கோட்டை (தனி) தொகுதி கந்தர்வகோட்டை தாலுக்கா, குளத்தூர் தாலுக்கா (பகுதி) செட்டிபட்டி, வெள்ளைபிள்ளையார்பட்டி, கண்ணன்குடி, செங்கலூர், காட்டுக்கோட்டைபட்டி, கிள்ளுக்கோட்டை, உலகன்காத்தான்பட்டி, கிள்ளுக்குவளவாய்ப்பட்டி, ராகத்தான்பட்டி, கீழையூர், விசலூர், புலியூர், கீரனூர், நஞ்சூர், மருதூர், வலியம்பட்டி, ஒடுகம்பட்டி, உடையாளிப்பட்டி, குன்னாண்டார்கோயில், தெம்மாவூர், மின்னாத்தூர், வத்தனாக்கோட்டை, பெரம்பூர், கிள்ளனூர், வீரக்குடி, கடம்பவயல், மங்கத்தேவன்பட்டி, பிரகதாம்பாள்புரம், நார்த்தமலை, அம்மாசத்திரம், உப்பிலியக்குடி, வாழங்களம், சீமானூர், சினையக்குடி, அண்டக்குளம், சாத்தினிப்பட்டி, வைத்தூர், சிரங்கன்பட்டி, உச்சணி, தென்னங்குடி, மூட்டாம்பட்டி, நரங்கியன்பட்டி, வத்தனாக்குறிச்சி, துடையூர், சத்தியமங்கலம், இறம்பாளி, மேலூர், வெள்ளனூர், முட்டுக்காடு, வேங்கைவயல் மற்றும் பூங்குடி கிராமங்கள். கீரனூர் (பேரூராட்சி), ஆலங்குடி தாலுக்கா (பகுதி) தட்டாமணைப்பட்டி, கீரத்தூர், கிளாங்காடு, முதலிப்பட்டி, செங்கமேடு, கல்லுமடை, பாப்பாபட்டி, ரெகுநாதபுரம், புதுவிடுதி, பெயாடிப்பட்டி, திருப்பாகோவில், ஒடப்பவிடுதி, சி...

எப்படி நடந்தது தொகுதி மறுசீரமைப்பு ?

தொகுதி மறுசீரமைப்பு செய்வதற்கு முன்பும் பின்பும் தொகுதிகள் எப்படி மாறியிருக்கின்றன என்பது பற்றி, தமிழக நாடாளுமன்ற தொகுதிகளில் அடங்கியிருக்கும் சட்டசபைத் தொகுதிகள் வாரியாக, இங்கே அலசப்பட்டிருக்கிறது. ஏற்கனவே இருந்த தொகுதிகளும் இப்போது மாற்றப்பட்டிருக்கும் தொகுதிகளின் பட்டியல்.. 1. திருவள்ளூர் (தனி) நாடாளுமன்றத் தொகுதி 1. பழனி - கும்மிடிப்பூண்டி (தனி) 2. ஒட்டன்சத்திரம் - பொன்னேரி 3. வேடசந்தூர் - பூந்தமல்லி (தனி) 4. காங்கேயம் - மாதவரம் 5. நத்தம் - திருவள்ளூர் 6. வெள்ளைக்கோவில் - ஆவடி * புதிதாக திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதி உருவானது. * ஸ்ரீபெரும்புதூர் எம்.பி. தொகுதியில் இருந்த கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, பூந்தமல்லி, திருவள்ளூர், ஆகிய சட்டசபைத் தொகுதிகள் இங்கே சேர்க்கப்பட்டது. * புதிதாக உருவாக்கப்பட்ட மாதவரம், ஆவடி சட்டசபைத் தொகுதிகள் இங்கே இணைக்கப்பட்டன.