தமிழ்நாடு சட்டசபையில் இன்று (ஜனவரி 7) கவர்னர் உரையாற்றினார். ஸ்பெக்ட்ரம், விலைவாசி உயர்வு ஆகியவற்றை கண்டித்து அ.தி.மு.க. ம.தி.மு.க. கட்சி எம்.எல்.ஏ.கள் கருப்பு சட்டை அணிந்து வந்தனர். இரண்டு கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ.கள் கருப்பு துண்டு அணிந்து வந்தார்கள்.
காய்கறி தட்டுகளை ஏந்தியும் காய்கறிகளையும் மாலையாக கழுத்தில் போட்டும் அவர்கள் அவைக்கு வந்தார்கள். கவர்னர் பர்னாலா உரையாற்ற தொடங்கியதுமே கோஷம் எழுப்பினார்கள். தொடர்ந்து தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினார்கள். உடனே சபாநாயகர் ஆவுடையப்பன் அவர்களை வெளியேற்ற உத்தரவிட்டார். இதனால் அவையில் கலாட்டா உருவானது. சபை காவலர்கள் எதிர்க்கட்சியினரை குண்டுக்கட்டாக தூக்கி உறுப்பினர்களை வெளியேற்றினர். அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பொள்ளாச்சி ஜெயராமன் வெளியேற்ற முற்பட்ட போது அவருக்கு சபை காவலர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. சபை காவலர்களை அவர் அடிக்க பாய்ந்தார்.
பொள்ளாச்சி ஜெயாராமனை சபை காவலர்கள் வெளியேற்றும் காட்சிகள்

Comments
நல்ல முயற்சி பாராட்டுக்கள்.