தமிழ்ப் பாதுகாப்பு இயக்கத்தில் பா.ம.க.வின் ராமதாஸ், விடுதலைச் சிறுத்தைகளின் திருமாவளவன், அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகத்தின் சேதுராமன் ஆகியோர் முக்கிய தூண்கள். 2006 சட்டசபைத் தேர்தலில் இந்த நட்பு தொடர முடியாமல் போனது. தி.மு.க. கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகளை சேர்க்க தேர்தல் நேரத்தில் முயற்சி எடுத்தார் ராமதாஸ். ‘‘பா.ம.க.வுக்கு ஒதுக்கப்படும் ஸீட்டில் விடுதலைச் சிறுத்தைகள் போட்டியிடலாம்’’ என்றார் கருணாநிதி. இதனை விரும்பாத திருமாவளவன், அ.தி.மு.க. கூட்டணியில் ஐக்கியமானார். தேர்தல் நெருங்கும் வரையில் தி.மு.க. கூட்டணியில் இருந்த சேதுராமன், தேர்தலில் போட்டியிடச் சொல்லி தன்னை கருணாநிதி வற்புறுத்தியதாக சொல்லி தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகினார் சேதுராமன். தமிழுக்காக கைகோர்த்தவர்கள், தேர்தலில் எதிர் முகாம்களில் களத்தில் நின்றனர்.
கடந்த 2009 நாடாளுமன்றத் தேர்தலில் அப்படியே ரிவர்ஸ் ஆனது. ராமதாஸ் போயஸ்கார்டனிலும் திருமாவளவன் கோபாலபுரத்திலும் ஐக்கியமாகி இருந்தார்கள். வரும் சட்டசபைத் தேர்தலில் ராமதாஸ் தி.மு.க. கூட்டணியில் இணைந்தால் எதிரெதிர் துருவங்க்ள் ஒரே கூட்டணிக்குள்.

Comments