2006 சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்ற வைகோ, தி.மு.க., கருணாநிதி, அவரது குடும்பம், சன் டி.வி, மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் ஆகியோர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை அள்ளி வீசி அனல் பிரச்சாரம் செய்தார். ஆனால் ஜெயலலிதாவோ அவருக்கு எதிர்மறையாக இருந்தது. தனது 5 ஆண்டு கால ஆட்சியின் சாதனைகளை பிரச்சாரத்தில் அடுக்கினார். நடிகர்கள் எஸ்.எஸ். சந்திரன், ராதாரவி, முரளி, ஆனந்தராஜ், சிம்ரன், விந்தியா எனத் திரையுலகமே அ.தி.மு.க. கூட்டணியை ஆதரித்துப் பிரசாரம் செய்தது.
2001 2006 ஐந்தாண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகத்தில் நடைபெற்ற மோசமான சம்பவங்கள், அ.தி.மு.க கூட்டணியில் சேருவதற்கு முன்னர், ஜெயலலிதா குறித்தும், அ.தி.மு.க. குறித்தும் வைகோ பேசிய பேச்சுகளை சி.டி.களாக போட்டு பிரச்சாரம் செய்தது தி.மு.க. சாலைப் பணியாளர்கள் வேலை நீக்கம், அரசுப் பணியாளர்கள் ஒட்டுமொத்தமாகப் பணிநீக்கம், நள்ளிரவில் நடந்த கருணாநிதி கைது சம்பவம், சென்னை எம்.ஜி.ஆர்.நகர் கூட்ட நெரிசல் மரணங்கள் போன்ற பல காட்சிகளை உள்ளடக்கி சி.டி.களை வெளியிட்டு பரபரப்பை பற்ற வைத்தது தி.மு.க.

Comments