அரிசி, கலர் டி.வி., தரிசு நிலம் ஆகியவைதான் 2006 சட்டசபைத் தேர்தலில் முக்கியமான கவர்ச்சி அறிவிப்புகள். ரேஷனில் ரூ. 2-க்கு ஒரு கிலோ அரிசி, ஏழைக் குடும்பங்களுக்கு இலவச கலர் டி.வி., ஏழை விவசாயத் தொழிலாளருக்கு தலா 2 ஏக்கர் தரிசு நிலம் என தேர்தல் அறிக்கையில் அறிவித்தது தி.மு.க. ‘‘இதில் எதுவுமே சாத்தியமில்லை’’ என்று முக்கிய எதிர்க்கட்சியான அ.தி.மு.க. அப்போது எதிர்ப்பு காட்டியது. ஆனால், விஜயகாந்த் மட்டும் இதைக் குறை கூறவில்லை. ‘‘ஓர் அரசு நினைத்தால் எதையும் செய்ய முடியும்’’ என்றார்.
இப்படி அவர் சொல்ல காரணம் இருந்தது. ஏனென்றால், ‘ரேஷன் பொருள்கள் வீடு தேடி வரும். ஏழைக் குடும்பங்களுக்கு 15 கிலோ இலவச அரிசி, வீட்டுக்கொரு சீமை பசு என்று அவரும் தன் பங்குக்கு 2006 தேர்தலில் ஜிகினா அறிவிப்புகளை விட்டார். தி.மு.க.வின் வாக்குறுதிகளை முறியடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்த அ.தி.மு.க., ‘ரேஷனில் 10 கிலோ அரிசி இலவசம்’ என்று சொன்னது. “அண்ணன் கலைஞர் அவர்கள் ஒரு கிலோ அரிசி ரூ. 2-க்கு எப்படித் தரப் போகிறார் என்பதைப் பார்க்க வேண்டும்’’ என்றார் வைகோ. ‘‘இலவச டி.வி.யோடு கேபிள் இணைப்பையும் இலவசமாக தருவார்களா?’’ என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பிய போது, ‘‘தேவைப்பட்டால் அதையும் தருவேன்’’ என்றார் கருணாநிதி.
தரிசு நிலம் இலவசமாகத் தருவது தொடர்பாகவும் சர்ச்சை எழுந்தது. ‘‘இலவச நிலம் தி.மு.க.வால் தர முடியாது’’ என்று பிரச்சாரத்தில் முழங்கினார் ஜெயலலிதா. ஆனால் இதை அவரது கூட்டணியில் அப்போது இடம்பெற்ற வைகோவும் திருமாவளவனும் எதிர்க்கவில்லை. காரணம் இதே போன்ற வாக்குறுதிகள் அவர்களுடைய தேர்தல் அறிக்கைகளிலும் இடம் பெற்றிருந்தன. ஏழை விவசாயத் தொழிலாளர்களுக்கு 2 ஏக்கர் நிலம் தருவதாக ம.தி.மு.க.வும், 5 ஏக்கர் நிலம் தர வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகளும் சொல்லியிருந்தன.
தேர்தலில் தி.மு.க. ஜெயிக்க காரணமாக இருந்த கதாநாயகன் கவர்ச்சி தேர்தல் அறிக்கைதான். கலர் டி.வி., காஸ் அடுப்பு, சத்துணவில் முட்டை, ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி போன்ற அறிவிப்புகள் சக்சஸ் ஆயின. இதில் இலவச நிலம் போன்ற அறிவிப்புகள் ‘புஸ்’ ஆகிப் போனது.

Comments