2006 சட்டசபைத் தேர்தலில் வாக்குப்பதிவின் போது நடைபெற்ற ஹைலைட்ஸ் விஷயங்கள் இங்கே அணிவகுக்கின்றன.
* ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் 70.22 சதவீதம் வாக்குகள் பதிவானது.
* 49 சதவீதம் பெண்களும் 51 சதவீத ஆண்களும் ஓட்டுப் போட்டனர்.
* கொங்கு மண்டலத்துக்கு உட்பட்ட மாவட்டங்களில் சராசரியாக 70 சதவீத வாக்குகள் பதிவானது.
* மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக 18 வாக்குச் சாவடிகளில் மறு வாக்குப் பதிவு நடைபெற்றது.
* அண்ணாநகரில் ஒரு வாக்குச் சாவடியிலும் ஸ்ரீபெரும்புதூர், திருத்தணியில் 5 வாக்குச் சாவடிகளிலும் முகையூர், பாலக்கோடு தொகுதிகளில் 3 வாக்குச் சாவடிகளிலும் திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர், வேடசந்தூர், புதுக்கோட்டை மாவட்டம் கொளத்தூர், ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை, பரமக்குடி, விருதுநகர், திருநெல்வேலி மாவட்டம் வாசுதேவநல்லூர் ஆகிய தொகுதிகளிலும் மறுவாக்குப்பதிவு நடைபெற்றன.
* கோவை மாவட்டத்தில் 85 சதவீதத்துக்கும் அதிகமாக வாக்குகள் பதிவான 72 வாக்குச் சாவடிகளில் மறுபரிசீலனை செய்யப்பட்டன.
* திருப்பூரில் இருந்து 10 கி.மீ. தூரத்தில் உள்ள பொல்லிகாளிபாளையம் கிராமம் திருப்பூர், பல்லடம், பொங்கலூர் ஆகிய 3 சட்டசபைத் தொகுதிகளின் எல்லையில் அமைந்திருந்தன. அதனால் இந்த கிராமத்தை சேர்ந்த 1,400 வாக்காளர்கள் மூன்று தொகுதிகளுக்கும் ஓட்டுப் போட்டனர்.
* திருநெல்வேலி மாநகராட்சிக்கு உட்பட்ட திருநெல்வேலி, பாளையங்கோட்டை ஆகிய இரண்டு 2 தொகுதிகளில் பெண் வாக்காளர்களைவிட ஆண் வாக்காளர்களே அதிகமாக வாக்களித்தனர்.
* கன்னியாகுமரி மாவட்டத்தில் பெண்களைவிட அதிக அளவில் ஆண்கள் வாக்களித்தனர். மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிகளிலும் சேர்த்து மொத்தமாக 12 லட்சத்து 10 ஆயிரத்து 54 வாக்காளர்கள் இருந்தனர். இதில் 6 லட்சத்து 10 ஆயிரத்து 449 ஆண்கள், 5 லட்சத்து 99 ஆயிரத்து 605 பெண்கள். இவர்களில் 3 லட்சத்து 86 ஆயிரத்து 62 ஆண்களும், 3 லட்சத்து 84 ஆயிரத்து 355 பெண்களும் வாக்களித்தனர்.

Comments