கடந்த 2006 சட்டசபைத் தேர்தலில் 65 சதவீத வாக்குகள் பதிவாகின. அதிகபட்சமாக மதுரை மற்றும் ஈரோடு மாவட்டங்களில் தலா 73 சதவீத வாக்குகள் வரை பதிவாகின. ஜெயலலிதா போட்டியிட்ட ஆண்டிப்பட்டியை
உள்ளடக்கிய தேனி மாவட்டத்தில்தான் குறைந்தபட்சமாக 57 சதவீத வாக்குகள் பதிவாகின.
ஆண்டிப்பட்டி தொகுதியில் 65 சதவீத வாக்குகளும் கருணாநிதி போட்டியிட்ட சேப்பாக்கம் தொகுதியில் 62 சதவீத வாக்குகளும் பதிவானது. நடிகர் விஜயகாந்த் போட்டியிட்ட விருத்தாச்சலம் தொகுதியில் 71 சதவீத வாக்குகள் பதிவானது. ஸ்டாலின் தொகுதியான ஆயிரம் விளக்கில் 60 சதவீதமும், ஓ. பன்னீர் செல்வத்தின் பெரியகுளத்தில் 63 சதவீதமும் பேராசிரியர் அன்பழகனின் துறைமுகம் தொகுதியில் 57 சதவீதமும், ஆற்காடு வீராசாமியின் அண்ணாநகர் தொகுதியில் 58 சதவீத வாக்குகளும் பதிவாகின.
சென்னையின் பிற தொகுதிகளான ராயபுரத்தில் 69 சதவீதமும், ஆர்.கே. நகரில் 65 சதவீதமும், பூங்கா நகரில் 62 சதவீதமும், பெரம்பூரில் 59 சதவீதமும், எழும்பூரில் 58 சதவீதமும், தி.நகரில் 55 சதவீதமும் திருவல்லிக்கேணியில் 55 சதவீதமும், மைலாப்பூரில் 63 சதவீதமும், சைதாப்பேட்டையில் 65 சதவீதமும் வாக்குகள் பதிவாகின. சென்னையைப் பொறுத்தவரை புரசைவாக்கம் தொகுதியில்தான் அதிகபட்சமாக 71 சதவீத வாக்குகள் பதிவாகின.
தமிழகத்தின் மிகப் பெரிய தொகுதியான வில்லிவாக்கத்தில் 61 சதவீத வாக்குகள் பதிவாகின. கடந்த 2001 தேர்தலைவிட இது 20 சதவீதம் கூடுதலாகும். இந்தத் தொகுதியில் 9.5 லட்சம் வாக்காளர்கள் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டாவது பெரிய தொகுதியான தாம்பரத்தில் 65 சதவீத வாக்குகள் பதிவாகின.
Comments