ஜெயலலிதாவை இன்று (ஜனவரி 1)மாலை போயஸ் கார்டன் இல்லத்தில் துக்ளக் பத்திரிகையின் ஆசிரியர் சோ சந்தித்து பேசினார்.கடந்த வியாழக் கிழமை அ.தி.மு.க.வின் பொதுக்குழு கூட்டம் நடந்து முடிந்திருக்கும் நிலையில் இந்த சந்திப்பு நடந்திருக்கிறது. "சில கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறேன். ஒரு சில நாட்களில் கூட்டணி பற்றிய அறிவிப்பு வெளியிடுவேன்" என்று பொதுக்குழுவில் ஜெயலலிதா அறிவித்தார். இந்த நிலையில் ஜெயலலிதாவை சோ சந்தித்தது முக்கியத்துவம் பெறுகிறது. தேர்தல் மூவ், கூட்டணி பற்றிதான் சோவுடன் ஜெயலலிதா ஆலோசனை நடத்தியிருக்கலாம் அல்லது பி.ஜே.பி.யை கூட்டணிக்குள் சேர்த்துக் கொள்ள சொல்லி சோ கேட்டிருக்கலாம் என்று இந்த சந்திப்புக்கு காரணங்கள் சொல்லப்படுகின்றன. துக்ளக் பத்திரிகையின் ஆண்டு விழா பொங்கல் தினத்தில் நடைபெறுவது வழக்கம். அந்த விழாவிற்கு ஜெயலலிதாவை சோ அழைத்திருக்கலாம் என்றும் சொல்கிறார்கள்.
சோ சந்திப்புக்கு பிறகு தமிழக சட்டசபைத் தேர்தல் தொடர்பாக போயஸ் கார்டனில் ஜெயலலிதா தலைமையில் அ.தி.மு.க. நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம், தலைமை நிலையச் செயலாளர் கே.ஏ. செங்கோட்டையன், கொள்கை பரப்புச் செயலாளர் தம்பிதுரை, தேர்தல் பிரிவுச் செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன், அமைப்புச் செயலாளர் செம்மலை, தேர்தல் பிரிவு இணைச் செயலாளர் பாலகங்கா, மருத்துவ அணித் தலைவர் மைத்ரேயன், ஆகியோர் கலந்து கொண்டனர்.

Comments