2001 சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெற்றபோதும் அந்த தேர்தலில் ஜெயலலிதா போட்டியிட முடியவில்லை. நான்கு தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்ததால் எல்லாமே தள்ளுபடி ஆனது. எம்.எல்.ஏ. ஆகாமலேயே முதல்வர் நாற்காலியில் அப்போது அமர்ந்தார் ஜெயலலிதா. அதன்பிறகு சுப்ரீம் கோர்ட் உத்தரவுக்கு பிறகு சில மாதங்களிலேயே பதவியில் இருந்து இறங்கினார் ஜெயலலிதா. அந்த சமயத்தில் முதல்வர் சான்ஸ் ஒ. பன்னீர்செல்வத்துக்கு அடித்தது. சில மாதங்கள் வரை முதல்வர் நாற்காலியில் அமர்ந்திருந்தார்.
2006 சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க. தோற்றுப் போனாலும் பிரதான எதிர்க்கட்சியானது. சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை பன்னீர் செல்வத்துக்கு வழங்கினார். ஆனால் சில நாட்களிலேயே அதையும் தட்டிப் பறித்து அந்த பதவியில் ஜெயலலிதா உட்கார்ந்தார். பன்னீருக்கு எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவியை கொடுத்தார் ஜெயலலிதா. எதிர்க்கட்சித் தலைவராக இருந்தால்தான் தனக்கு பாதுகாப்பு என்று நினைத்துதான் அப்படியொரு முடிவை எடுத்திருந்தார் ஜெயலலிதா.

Comments