கனிமொழிக்கு இன்று (ஜனவரி 5)பிறந்தநாள். சி.ஐ.டி. காலனியில் உள்ள ராஜாத்தி அம்மாள் வீட்டுக்கு போன முதல்வர் கருணாநிதி மகள் கனிமொழிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி ஆசி வழங்கினார். ஸ்பெக்ட்ரம் விவகாரம், நீரா ராடியாவுடன் ராஜாத்தி அம்மாள், கனிமொழி ஆகியோர் பேசிய டேப் உரையாடல்கள் என்று அரசியல் பரபரப்பு பற்றிக்கொண்டிருக்கும் சமயத்தில் பிறந்தநாள் வாழ்த்து சொல்ல கருணாநிதி போயிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
அமைச்சர் பூங்கோதை அழகிரி பற்றி நீரா ராடியாவிடம் பேசிய பேச்சுகளும் புகைச்சலை கிளப்பி இருக்கும் நிலையில் அழகிரியும் ஸ்டாலினும் கனிமொழிக்கு எதிராக குரல் கொடுத்து வருவதாக பேச்சுகள் கிளம்பின. கனிமொழியை இருவரும் எதிர்த்து வரும் நிலையில் கருணாநிதி கனிமொழிக்கு வாழ்த்து சொல்லி இருக்கிறார். இதற்கிடையே அழகிரி தனது கட்சி பதவியையும் அமைச்சர் பதவியும் ராஜினாமா செய்துவிட்டார் என்று பரபரப்பு செய்திகள் பற்றி எரிந்து கொண்டிருக்கும் நேரத்தில் இந்த வைபவம் நடந்திருக்கிறது.
பிறந்தநாள் கொண்டாட்ட படங்கள்

Comments