Skip to main content

Posts

Showing posts from January, 2011

கருணாநிதி டெல்லி பேட்டி முழு விவரம்

உள் நாட்டு பாதுகாப்பு தொடர்பாக டெல்லியில் நடைபெறும் முதல்வர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக முதல்வர் கருணாநிதி இன்று (ஜனவரி 30) டெல்லி சென்றார். அங்கே பத்திரிகையாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி: கேள்வி: டெல்லிக்கு வந்திருக்கிறீர்கள். யார் யாரைச் சந்திக்க இருக்கிறீர்கள்? பதில்: காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியையும், பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கையும் சந்திக்கவிருக்கிறேன்.

தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.: கருணாநிதி பேட்டி

உள் நாட்டு பாதுகாப்பு தொடர்பாக டெல்லியில் நடைபெறும் முதல்வர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக முதல்வர் கருணாநிதி இன்று (ஜனவரி 30) டெல்லி சென்றார். அங்கே பத்திரிகையாளர்களுக்கு கருணாநிதி பேட்டி அளித்தார். வரும் சட்டசபைத் தேர்தலில் தி.மு.க. அணியில் பா.ம.க. இடம் பெறும் என்று கருணாநிதி தெரிவித்தார். தி.மு.க. கூட்டணி கட்சிகள் விவரம்: 1. தி.மு.க. 2. காங்கிரஸ் 3. பா.ம.க. 4. விடுதலைச் சிறுத்தைகள் 5. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 6. புரட்சி பாரதம்

மனிதநேய மக்கள் கட்சி பொதுக்குழு தீர்மானங்கள்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் அரசியல் பிரிவான மனித நேய மக்கள் கட்சியின் பொதுக் குழு இன்று (ஜனவரி 30) சென்னையில் கூடியது. ஜவாஹிருல்லாஹ் தலைமையில் தாம்பரத்தில் நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்தில் தலைமை நிர்வாகிகள் எஸ்.ஹைதர் அலி, ப. அப்துல் சமது, ஒ.யு. ரஹ்மதுல்லாஹ், ஹாரூன் ரஷீத், ஜே.எஸ். ரிபாயி, எம். தமிமுன் அன்சாரி, குணங்குடி அனிபா உட்பட 4000க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் தமிழகம் மற்றும் புதுவையில் இருந்து வந்து பங்குக் கொண்டார்கள்.

2006 தேர்தல்: வாக்குப் பதிவு ஹைலைட்ஸ்!

2006 சட்டசபைத் தேர்தலில் வாக்குப்பதிவின் போது நடைபெற்ற ஹைலைட்ஸ் விஷயங்கள் இங்கே அணிவகுக்கின்றன. * ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் 70.22 சதவீதம் வாக்குகள் பதிவானது. * 49 சதவீதம் பெண்களும் 51 சதவீத ஆண்களும் ஓட்டுப் போட்டனர். * கொங்கு மண்டலத்துக்கு உட்பட்ட மாவட்டங்களில் சராசரியாக 70 சதவீத வாக்குகள் பதிவானது.

2006 தேர்தல்: அதிகபட்ச வாக்குப் பதிவு!

கடந்த 2006 சட்டசபைத் தேர்தலில் 65 சதவீத வாக்குகள் பதிவாகின. அதிகபட்சமாக மதுரை மற்றும் ஈரோடு மாவட்டங்களில் தலா 73 சதவீத வாக்குகள் வரை பதிவாகின. ஜெயலலிதா போட்டியிட்ட ஆண்டிப்பட்டியை உள்ளடக்கிய தேனி மாவட்டத்தில்தான் குறைந்தபட்சமாக 57 சதவீத வாக்குகள் பதிவாகின. ஆண்டிப்பட்டி தொகுதியில் 65 சதவீத வாக்குகளும் கருணாநிதி போட்டியிட்ட சேப்பாக்கம் தொகுதியில் 62 சதவீத வாக்குகளும் பதிவானது. நடிகர் விஜயகாந்த் போட்டியிட்ட விருத்தாச்சலம் தொகுதியில் 71 சதவீத வாக்குகள் பதிவானது. ஸ்டாலின் தொகுதியான ஆயிரம் விளக்கில் 60 சதவீதமும், ஓ. பன்னீர் செல்வத்தின் பெரியகுளத்தில் 63 சதவீதமும் பேராசிரியர் அன்பழகனின் துறைமுகம் தொகுதியில் 57 சதவீதமும், ஆற்காடு வீராசாமியின் அண்ணாநகர் தொகுதியில் 58 சதவீத வாக்குகளும் பதிவாகின. சென்னையின் பிற தொகுதிகளான ராயபுரத்தில் 69 சதவீதமும், ஆர்.கே. நகரில் 65 சதவீதமும், பூங்கா நகரில் 62 சதவீதமும், பெரம்பூரில் 59 சதவீதமும், எழும்பூரில் 58 சதவீதமும், தி.நகரில் 55 சதவீதமும் திருவல்லிக்கேணியில் 55 சதவீதமும், மைலாப்பூரில் 63 சதவீதமும், சைதாப்பேட்டையில் 65 சதவீதமும் வாக்குகள் பதிவாகின. சென்...

2006 தேர்தல்: மாவட்ட வாரியாக வாக்குப்பதிவு சதவீதம்!

2006 சட்டசபைத் தேர்தலில் தமிழகத்தில் மாவட்டவாரியாக பதிவான வாக்கு சதவீதம் 1. சென்னை 58.28 சதவீதம் 2. திருவள்ளூர் 68.57 சதவீதம் 3. காஞ்சிபுரம் 68.14 சதவீதம் 4. வேலூர் 71.17 சதவீதம் 5. திருவண்ணாமலை 73.71 சதவீதம்

2006 தேர்தல்: எத்தனை போட்டி? எத்தனை வெற்றி?

தி.மு.க.கூட்டணி: கட்சி - போட்டி - வெற்றி தி.மு.க. -  130  -  96 காங்கிரஸ் - 48 -  34 பா.ம.க.  -  31  -  18 சி.பி.எம்.  -  13  -  9 சி.பி.ஐ.  -  10  -  6 முஸ்லிம் லீக் -  2  -  2 மொத்தம் -  234  -  163

2006 தேர்தல் முடிவு!

தி.மு.க.கூட்டணி: 163 தி.மு.க.: 95 காங்கிரஸ்: 35 பா.ம.க.: 18 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்: 9 இந்திய கம்யூனிஸ்ட்: 6 * தி.மு.க. வெற்றி பெற்ற 95 இடங்களில் முஸ்லிம் லீக்கு இரண்டு இடமும் புரட்சி பாரத்திற்கு ஒரு இடமும் அடங்கும். இந்த கட்சிகள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டதால் தேர்தல் கமிஷனின் கணக்குப்படி தி.மு.க.வுக்கு 95 இடங்கள்தான்.

ஸ்பெக்ட்ரம் தாவூத் இப்ராஹிம் தொடர்பு: ஜெயலலிதா அறிக்கை

ஸ்பெக்ட்ரம் தொடர்பாக ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை: கடந்த சில மாதங்களாக 2ஜி ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழல் ஊடகங்களை முழுவதுமாக ஆக்கிரமித்துக் கொண்டுவிட்டது.  இருப்பினும், ஒரு லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய்க்கு எத்தனை பூஜ்யங்கள் என்ற அளவில்தான் இந்த ஊழல் ஒவ்வொருவரையும் ஈர்த்ததே தவிர, இதில் உள்ள மிக ஆபத்தான பிரச்சினைகள் கவனிக்கப்படவில்லை. மரங்களை கண்டு வனத்தை கவனிக்காதது போல், அற்பமானவற்றில் அக்கறை செலுத்தி, முக்கியமானவற்றை தவறவிட்டுவிட்டதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்!

தி.மு.க. கூட்டணி கட்சிகள்!

1. தி.மு.க. 2.   பா.ம.க. 3. விடுதலைச் சிறுத்தைகள் 4.  கொங்குநாடு முன்னேற்ற கழகம் 5. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 6. புரட்சி பாரதம்

அ.தி.மு.க. கூட்டணி கட்சிகள்!

1. அ.தி.மு.க. 2. தே.மு.தி.க. 3. ம.தி.மு.க. 4. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (சி.பி.எம்) 5. இந்திய கம்யூனிஸ்ட் (சி.பி.எம்) 6. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் மனிதநேய மக்கள் கட்சி

தனித் தொகுதிகளில் அதிகம் போட்டியிட்ட அ.தி.மு.க.!

2006 சட்டசபைத் தேர்தலில் தமிழகத்தில் மொத்தம் 45 தனித் தொகுதிகள் இருந்தன. இதில் அ.தி.மு.க.தான் அதிகபட்சமாக 34 தொகுதிகளில் களமிறங்கியது. தி.மு.க. 28 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியது. இந்த இரண்டு திராவிட கட்சிகளுமே 24 தனித்தொகுதிகளில் நேரடியாக மோதின.

பன்னீர்செல்வத்துக்கு கிடைத்த கௌரவம்!

2001 சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெற்றபோதும் அந்த தேர்தலில் ஜெயலலிதா போட்டியிட முடியவில்லை. நான்கு தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்ததால் எல்லாமே தள்ளுபடி ஆனது. எம்.எல்.ஏ. ஆகாமலேயே முதல்வர் நாற்காலியில் அப்போது அமர்ந்தார் ஜெயலலிதா. அதன்பிறகு சுப்ரீம் கோர்ட் உத்தரவுக்கு பிறகு சில மாதங்களிலேயே பதவியில் இருந்து இறங்கினார் ஜெயலலிதா. அந்த சமயத்தில் முதல்வர் சான்ஸ் ஒ. பன்னீர்செல்வத்துக்கு அடித்தது. சில மாதங்கள் வரை முதல்வர் நாற்காலியில் அமர்ந்திருந்தார்.

களைக்கட்டிய 2006 தேர்தல் பிரச்சாரம்!

2006 சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்ற வைகோ, தி.மு.க., கருணாநிதி, அவரது குடும்பம், சன் டி.வி, மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் ஆகியோர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை அள்ளி வீசி அனல் பிரச்சாரம் செய்தார். ஆனால் ஜெயலலிதாவோ அவருக்கு எதிர்மறையாக இருந்தது. தனது 5 ஆண்டு கால ஆட்சியின் சாதனைகளை பிரச்சாரத்தில் அடுக்கினார். நடிகர்கள் எஸ்.எஸ். சந்திரன், ராதாரவி, முரளி, ஆனந்தராஜ், சிம்ரன், விந்தியா எனத் திரையுலகமே அ.தி.மு.க. கூட்டணியை ஆதரித்துப் பிரசாரம் செய்தது.

தொண்டர்களுக்கு ஜெயலலிதா கடிதம்!

ஜெயலலிதா, தொண்டர்களுக்கு இன்று (ஜனவரி 16) கடிதம் எழுதியிருக்கிறார். கடித விவரம்: இதய தெய்வம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் ரத்தத்தின் ரத்தமான, என் உயிரினும் மேலான எனதருமைக் கழக உடன்பிறப்புகளே!

மகளிர் இடஒதுக்கீடு. 2016ல்தான் சாத்தியம்!

நாடாளுமன்றம் மாநில சட்டமன்றங்களில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்கிற கோரிக்கை இன்னும் எத்தனை காலங்களுக்குதான் பேசிக் கொண்டிருக்க போகிறார்களோ தெரியவில்லை. நீண்ட வருடங்களாக சொல்லி வந்த மகளிர் இடஒதுக்கீடு மசோதா கடந்த 2010 மார்ச் 9ம் தேதி நாடாளுமன்ற ராஜ்ய சபாவில் நிறைவேறியது. இன்னும் மக்களவையில் இந்த மசோதா நிறைவேறவில்லை.

2006 தேர்தல்: விஜயகாந்த் தனியே...தன்னந் தனியே!

2006 தேர்தலில் நடந்த இன்னொரு அதிசயம் விஜயகாந்த் என்ட்ரிதான். கட்சி தொடங்கிய சில மாதங்களிலேயே 2006 சட்டசபைத் தேர்தல் வர தன்னந்தனியாக களமிறங்கினார் விஜயகாந்த். அந்த தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிட்ட ஒரே கட்சி ‘தேசிய முற்போக்கு திராவிட கழகம்‘தான். கட்சிகள் எல்லாம் கூட்டணிக்கு ஆள் பிடிக்க அலைந்து கொண்டிருந்த நேரத்தில் தனியாக போட்டியிட்டார் கேப்டன்.

மண்ணை கவ்விய பார்வர்டு பிளாக்!

‘அகில இந்திய பார்வர்டு பிளாக்’ கட்சி 2006 தேர்தலில் ஏக எதிர்பார்ப்புடன் களமிறங்கி ‘புஸ்’வானமானது. எந்த பெரிய கூட்டணியிலும் சேராமல் தனித்தே போட்டியிட்டது. 60 வேட்பாளர்கள் ‘அகில இந்திய பார்வர்டு பிளாக்’ சார்பில் போட்டியிட்டனர்.

இளைஞன் படத்தை பார்த்தார் கருணாநிதி

ஸ்பெக்ட்ரம், அழகிரி முறுக்கல், சென்னை சங்கமம், சட்டசபை, என்று 1.70 லட்சம் கோடிகள் பிரச்சனை இருந்தாலும் சினிமா பார்க்கவும் கருணாநிதிக்கு நேரம் எப்படிதான் கிடைக்கிறதோ தெரியவில்லை. கலைஞரின் வசனத்தில் வெற்றிகரமாக தியேட்டரை விட்டு போடப்போகும் இளைஞன் படம் ரிலீஸ் ஆகியிருக்கிறது.

தி.மு.க. ‍காங்கிரஸ் கூட்டணிக்கு பாடம் புகட்டுங்கள்: ஜெயலலிதா

ஜெயலலிதா இன்று (ஜனவரி 13) வெளியிட்ட அறிக்கை: ஒரு லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய் ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழல் குறித்த விசாரணை இரண்டு வாரங்களுக்கு முன்பு சரியான பாதையில் செல்வது போல் தோற்றமளித்தது. இந்த ஊழல் குறித்த கடுமையான அறிக்கையை இந்திய நாடாளுமன்றத்தின் முன்பு இந்தியாவின் உயரிய தணிக்கை அமைப்பான, இந்திய கணக்கு மற்றும் தணிக்கைத் துறைத் தலைவர் சமர்ப்பித்தார். இந்த அறிக்கையில் கைபேசி சேவைகளுக்கான 2ஜி ஸ்பெக்ட்ரம் உரிமம் வழங்கியதில் தவறான கொள்கையை கடைபிடித்ததன் காரணமாக இந்திய நாட்டிற்கு ஏற்பட்ட இழப்பு குறித்து தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்தலில் வென்ற கட்சிகள், முதல்வர்கள்!

தமிழக சட்டசபைத் தேர்தல் வரலாற்றில் இதுவரை 13 பொதுத் தேர்தல்கள் நடந்திருக்கின்றன. அ.தி.மு.க.வும் தி.மு.க.வும் தலா ஐந்து முறை வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் மூன்று முறை மட்டுமே ஆட்சியை பிடித்திருக்கிறது. ஒவ்வொரு தேர்தலிலும் வென்ற கட்சிகள், முதல்வர்கள் விவரம் இங்கே... ஆண்டு - வென்ற கட்சி - முதல்வர் 1952 - காங்கிரஸ் - ராஜாஜி, காமராஜர் 1957 - காங்கிரஸ் - காமராஜர் 1962 - காங்கிரஸ் - காமராஜர், பக்தவத்சலம் 1967 - தி.மு.க. - அண்ணாதுரை, கருணாநிதி 1971 - தி.மு.க. - கருணாநிதி 1977 - அ.தி.மு.க. - எம். ஜி.ஆர். 1980 - அ.தி.மு.க. - எம். ஜி.ஆர். 1984 - அ.தி.மு.க. - எம். ஜி.ஆர்., ஜானகி ராமச்சந்திரன் 1989 - தி.மு.க. - கருணாநிதி 1991 - அ.தி.மு.க. - ஜெயலலிதா 1996 - தி.மு.க. - கருணாநிதி 2001 - அ.தி.மு.க. - ஜெயலலிதா, ஓ. பன்னீர்செல்வம், ஜெயலலிதா 2006 - தி.மு.க. - கருணாநிதி

வாக்குகள் வசப்படுமா?: கருணாநிதி பேச்சு

“சென்னை சங்கமம்” தொடக்க விழா இன்று (ஜனவரி 12) சென்னையில் நடைபெற்றது. தீவுத்திடல் சுற்றுலா பொருட்காட்சியில் நடந்த இந்த விழாவில் முதலில் “வானம் வசப்படும்” என்று இசை நாடக நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில் கனிமொழி, ஜெகத் கஸ்பர் உட்பட பலர் கலந்து கொண்டார்கள். முதல்வர் கருணாநிதி பேசியதாவது:

தேர்தல் பட்டிமன்ற படங்கள்!

தமிழ் புத்தாண்டு முதல் நாள். பொங்கல் திருநாளில் சிறப்பு பட்டி மன்றத்தை ஒளிபரப்ப போகிறது கலைஞர் டி.வி. பட்டிமன்றத்தின் தலைப்பு. தி.மு.க.வின் செல்வாக்கும் புகழும் வளரக் காரணம் கலைஞரின் சமூக தொண்டே! கலை இலக்கிய பணியே! ஆட்சித் திறனே! கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன், அமைச்சர்கள் பொன்முடி, துரைமுருகன், சுப.வீரபாண்டியன், கி.வீரமணி, ஜெகத்ரட்சகன், பீட்டர் அல்போன்ஸ், என்று அறிவாலயத்தின் ஆஸ்தான வித்துவான்கள்தான் பேசுகிறார்கள். பட்டிமன்றத்தின் நடுவர் இனமான பேராசிரியர் அன்பழகன்தான்

எதிரெதிர் முகாம்களில் நண்பர்கள்!

தமிழ்ப் பாதுகாப்பு இயக்கத்தில் பா.ம.க.வின் ராமதாஸ், விடுதலைச் சிறுத்தைகளின் திருமாவளவன், அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகத்தின் சேதுராமன் ஆகியோர் முக்கிய தூண்கள். 2006 சட்டசபைத் தேர்தலில் இந்த நட்பு தொடர முடியாமல் போனது. தி.மு.க. கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகளை சேர்க்க தேர்தல் நேரத்தில் முயற்சி எடுத்தார் ராமதாஸ். ‘‘பா.ம.க.வுக்கு ஒதுக்கப்படும் ஸீட்டில் விடுதலைச் சிறுத்தைகள் போட்டியிடலாம்’’ என்றார் கருணாநிதி. இதனை விரும்பாத திருமாவளவன், அ.தி.மு.க. கூட்டணியில் ஐக்கியமானார். தேர்தல் நெருங்கும் வரையில் தி.மு.க. கூட்டணியில் இருந்த சேதுராமன், தேர்தலில் போட்டியிடச் சொல்லி தன்னை கருணாநிதி வற்புறுத்தியதாக சொல்லி தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகினார் சேதுராமன். தமிழுக்காக கைகோர்த்தவர்கள், தேர்தலில் எதிர் முகாம்களில் களத்தில் நின்றனர்.

49 ஓ - அப்படின்னா என்னங்க?

போட்டியிடும் வேட்பாளர்கள் எவரையும் பிடிக்காமல், யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை எனில், அதையும் பதிவு செய்யும் வசதிதான் 49 ஓ. மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் இதற்கென ஒரு பட்டனை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை தேர்தலுக்கு தேர்தல் கோரிக்கையாகவே இருந்து வருகிறது. இதுகுறித்த வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன.

தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் இடையே நடக்கும் தேர்தல்: ஜெயலலிதா பேச்சு

கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரம் ஒன்றியம், சுவாமித் தோப்பில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் சுவாமி தலைமை பதியில் நடைபெற்ற வழிபாட்டு நிகழ்ச்சியில் ஜெயலலிதா இன்று (ஜனவரி 9) கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையம் போனார் ஜெயலலிதா. அய்யா வைகுண்டர் சுவாமி தலைமை பதியில் வழிபாடு செய்தார். இந்த நிகழ்ச்சியில் ஜெயலலிதா ஆற்றிய உரை:

2006 தேர்தல் கவர்ச்சி வாக்குறுதிகள்!

அரிசி, கலர் டி.வி., தரிசு நிலம் ஆகியவைதான் 2006 சட்டசபைத் தேர்தலில் முக்கியமான கவர்ச்சி அறிவிப்புகள். ரேஷனில் ரூ. 2-க்கு ஒரு கிலோ அரிசி, ஏழைக் குடும்பங்களுக்கு இலவச கலர் டி.வி., ஏழை விவசாயத் தொழிலாளருக்கு தலா 2 ஏக்கர் தரிசு நிலம் என தேர்தல் அறிக்கையில் அறிவித்தது தி.மு.க. ‘‘இதில் எதுவுமே சாத்தியமில்லை’’ என்று முக்கிய எதிர்க்கட்சியான அ.தி.மு.க. அப்போது எதிர்ப்பு காட்டியது. ஆனால், விஜயகாந்த் மட்டும் இதைக் குறை கூறவில்லை. ‘‘ஓர் அரசு நினைத்தால் எதையும் செய்ய முடியும்’’ என்றார்.

தமிழக‌ சட்டசபை கலாட்டா காட்சி படங்கள்!

தமிழ்நாடு சட்டசபையில் இன்று (ஜனவரி 7) கவர்னர் உரையாற்றினார். ஸ்பெக்ட்ரம், விலைவாசி உயர்வு ஆகியவற்றை கண்டித்து அ.தி.மு.க. ம.தி.மு.க. கட்சி எம்.எல்.ஏ.கள் கருப்பு சட்டை அணிந்து வந்தனர். இரண்டு கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ.கள் கருப்பு துண்டு அணிந்து வந்தார்கள்.

பிரச்சாரம் செய்யாமலேயே வென்ற‌ செங்கோட்டையன்!

அரசியல் கட்சிகளின் பெரிய தலைவர்களே தாங்கள் போட்டியிடும் தொகுதியில் பிரசாரம் செய்வதற்கு சில நாட்களை ஒதுக்குவது வழக்கம். ஆனால், சொந்தத் தொகுதியில் பிரசாரமே செய்யாமல், வெற்றி பெற்றுவிடும் நம்பிக்கையில் தன்னுடைய கட்சித் தலைவியின் பிரசாரப் பயணத்தில் ஓடினார் ஒருவர். அவர் யாருமல்ல செங்கோட்டையன்தான். கடந்த சட்டசபைத் தேர்தலில் நடந்த விஷயம் இது.

கனிமொழி பிறந்தநாள்: கருணாநிதி ஆசி

கனிமொழிக்கு இன்று (ஜனவரி 5)பிறந்தநாள். சி.ஐ.டி. காலனியில் உள்ள ராஜாத்தி அம்மாள் வீட்டுக்கு போன முதல்வர் கருணாநிதி மகள் கனிமொழிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி ஆசி வழங்கினார். ஸ்பெக்ட்ரம் விவகாரம், நீரா ராடியாவுடன் ராஜாத்தி அம்மாள், கனிமொழி ஆகியோர் பேசிய‌ டேப் உரையாடல்கள் என்று அரசியல் பரபரப்பு பற்றிக்கொண்டிருக்கும் சமயத்தில் பிறந்தநாள் வாழ்த்து சொல்ல கருணாநிதி போயிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

கருணாநிதி ஆட்சி முடங்கும் நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது: ஜெயலலிதா

ஜெயலலிதா இன்று (ஜனவரி 5) வெளியிட்ட அறிக்கை: “ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்” என்பது போல், அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் தற்போது நிலவும் அலங்கோல நிலையை வைத்தே தமிழ்நாட்டின் அவல நிலையை தமிழக மக்கள் எளிதில் புரிந்து கொள்ளலாம்.  அந்த அளவுக்கு நிர்வாகத் திறமையற்ற, ஊழல் மிகுந்த, கொடுங்கோல் குடும்ப ஆட்சி தமிழ் நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.  தற்போது தமிழ் நாட்டில் செயல்பட்டு வரும் எட்டு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேருந்துகள் இயங்கி வருகின்றன.

கூட்டணி கட்சிகளுக்கு தி.மு.க.வின் விருது உற்சவம்!

தமிழ் மொழி வளர்ச்சிக்கும், தமிழ்ப் பண்பாட்டு மேன்மைக்கும் தொண்டாற்றிடும் தமிழறிஞர்கள், கவிஞர்கள், சமூக நீதிக்கு உழைத்திடும் பெருமக்கள் ஆகியோரில் சிறந்தோரைத் தேர்வு செய்து சான்றோர்கள் பெயரில் ஆண்டுதோறும் தமிழக அரசின் சார்பில் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி 2011ம் ஆண்டுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கிறது. சில மாதங்களில் தமிழக சட்டசபைக்கு தேர்தல் வருவதால் கூட்டணிக் கட்சிகளை குளிர்விக்கும் வகையில் விருதுகள் தரப்பட்டிருக்கின்றன.    

ம‌.ம.க. தொகுதி உடன்பாடு குழு அமைப்பு

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மனிதநேய மக்கள் கட்சி உயர்நிலைக் குழு தலைமை ஒருங்கினைப்பாளர் ஜவாஹிருல்லா தலைமையில் சென்னையில் கூடியது. மனிதநேய மக்கள் கட்சியின் உயர்நிலைக் குழுவின் உறுப்பினர்களான ஹைதர் அலி, அப்துல் சமது, ரஹமத்துல்லா,ஹாரூன் ரஷீத், ரிபாயி, தமிமுன் அன்சாரி, ஜெயினுல் ஆபிதீன், முகம்மது கவுஸ், சம்சுதீன் நாசர் உமரி, கோவை உமர், பேராசிரியர் ஹாஜாகனி, ஜுனைத், எம்.நாசர், உட்பட பலர் கலந்து கலந்து கொண்டனர்.

5 முனைப்போட்டியை சந்தித்த 2006 தேர்தல்!

2006 சட்டசபைத் தேர்தலில் முன் எப்போதும் இல்லாத வகையில் 5 முனைப்போட்டி ஏற்பட்டது. அ.தி.மு.க., தி.மு.க., பி.ஜே.பி. கூட்டணிகள், நடிகர் விஜயகாந்தின் தே.மு.தி.க. ஆகியவை எல்லா தொகுதிகளிலும் போட்டியிட்டன. அகில இந்திய பார்வர்டு பிளாக் 100-க்கும் மேற்பட்ட தொகுதிகளிலும், புதிய தமிழகம் உள்ளிட்ட வேறு சில கட்சிகள் பல தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டன. அதனால் எல்லா தொகுதிகளிலும் 4 கூட்டணிகளின் வேட்பாளர்கள் தவிர, வேறொரு கட்சியின் ஒரு வேட்பாளரும் களத்தில் இருந்தார். அந்த வகையில் 2006 சட்டசபைத் தேர்தலில் 5 முனைப்போட்டி ஏற்பட்டது.

‘‘நயினா ஒண்டிக்கு ஒண்டி வர்றீயா...’’ !

2006 சட்டசபைத் தேர்தலில் எதிரொலித்த முக்கியமான கோஷம் இது. அந்த தேர்தலில் வழக்கம் போல சென்னையில்தான் பிரச்சாரத்தை ஆரம்பித்தார் கருணாநிதி. சென்னை புரசைவாக்கம் தானா தெருவில் நடந்த அந்த பிரச்சார கூட்டத்தில்தான் ‘‘நயினா ஒண்டிக்கு ஒண்டி வர்றீயா?’’ என்று சீறினார் தயாநிதி மாறன்.

பிரத‌ம‌ரை ச‌ந்தித்தார் க‌ருணாநிதி

நேற்று சென்னை வந்த பிரதமர் மன்மோகன் சிங்கை விமான நிலையத்தில் முதல்வர் கருணாநிதி வரவேற்க செல்ல‌வில்லை. அவ‌ருக்கு ப‌திலாக‌ துணை முத‌ல்வ‌ர் ஸ்டாலின்தான் ஏர்போர்ட் சென்றார். இர‌வு க‌வ‌ர்ன‌ர் மாளிகையில் த‌ங்கிய‌ பிர‌த‌ம‌ரைக்கூட‌ க‌ருணாநிதி போய் பார்க்காத‌ நிலையில் இன்று (ஜ‌ன‌வ‌ரி 3) காலை திடிரென்று ம‌ன்மோக‌ன் சிங்கை க‌ருணாநிதி ச‌ந்தித்தார்.

பிரதமரை வரவேற்க‌ கருணாநிதி போகாதது ஏன்?

சென்னையில் ஜனவரி 3ம் தேதி நடக்கும் அறிவியல் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்திய பிரதமர் மன்மோகன் சிங் ஞாயிற்றுக் கிழமை இரவு 7.30 மணிக்கு சென்னை வந்தார். சென்னை விமான நிலையத்திற்கு வந்த அவரை வரவேற்க முதல்வர் கருணாநிதி செல்லவில்லை. துணை முதல்வர் ஸ்டாலின்தான் பிரதமரை வரவேற்றார். மன்மோகன் சிங் ஏர்போர்ட்டிற்கு வந்த போது கவிஞர் வைரமுத்து புத்தக வெளியிட்டு விழாவில் முதல்வர் கருணாநிதி கலந்து கொண்டார்.

பிரதமரை விட தமிழுக்குதான் பெருமை சேர்ப்பேன்: கருணாநிதி பேச்சு

கவிஞர் வைரமுத்துவின் ஆயிரம் பாடல்கள் நூலை முதல்வர் கருணாநிதி இன்று (ஜனவரி 2) வெளியிட்டார். இந்த விழாவில் ரஜினி, கமல், ஏ.ஆர்.ரஹ்மான், பாலசந்தர், எம்.எஸ்.விஸ்வநாதன், வாலி, மணிரத்தினம் என்று நிறைய பிரபலங்கள் கலந்துகொண்டார்கள். விழாவில் கருணாநிதி ஆற்றிய உரை இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக தி.மு.க. அரசு குரல் கொடுத்தது என்பதைக் காரணமாகக் காட்டி - 1991 ஆம் ஆண்டு ஜனவரித் திங்களில் தி.மு.க. அரசு கலைக்கப்பட்டது.  அப்படிக் கலைக்கப்பட்ட போது, “குங்குமம்” வார இதழில் வைரமுத்து அவர்கள் எழுதிய ஒரு கவிதை வெளிவந்தது.

ஜெயலலிதாவுடன் சோ சந்திப்பு

ஜெய‌ல‌லிதாவை இன்று (ஜ‌ன‌வ‌ரி 1)மாலை போய‌ஸ் கார்ட‌ன் இல்ல‌த்தில் துக்ளக் பத்திரிகையின் ஆசிரியர் சோ சந்தித்து பேசினார்.கடந்த வியாழக் கிழமை அ.தி.மு.க.வின் பொதுக்குழு கூட்டம் நடந்து முடிந்திருக்கும் நிலையில் இந்த சந்திப்பு நடந்திருக்கிறது. "சில கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறேன். ஒரு சில நாட்களில் கூட்டணி பற்றிய அறிவிப்பு வெளியிடுவேன்" என்று பொதுக்குழுவில் ஜெயலலிதா அறிவித்தார். இந்த நிலையில் ஜெயலலிதாவை சோ சந்தித்தது முக்கியத்துவம் பெறுகிறது. தேர்தல் மூவ், கூட்டணி பற்றிதான் சோவுடன் ஜெயலலிதா ஆலோசனை நடத்தியிருக்கலாம் அல்லது பி.ஜே.பி.யை கூட்டணிக்குள் சேர்த்துக் கொள்ள சொல்லி சோ கேட்டிருக்கலாம் என்று இந்த சந்திப்புக்கு காரணங்கள் சொல்லப்படுகின்றன. துக்ளக் பத்திரிகையின் ஆண்டு விழா பொங்கல் தினத்தில் நடைபெறுவது வழக்கம். அந்த விழாவிற்கு ஜெயலலிதாவை சோ அழைத்திருக்கலாம் என்றும் சொல்கிறார்கள்.

தி.மு.க.வின் சாதனைகளை காங்கிரசும் சொல்லும்: கருணாநிதி பேச்சு

இலவச சர்க்கரைப் பொங்கல் பொருள்கள், இலவச வேட்டி சேலைகள் வழங்கும் திட்டத்தைத் முதல்வர் கருணாநிதி இன்று (ஜனவரி 1) சென்னை பல்லாவரத்தில் தொடங்கி வைத்தார். அப்போது அவர் ஆற்றிய உரை: இன்றையதினம் இனிய நாள்; இனிப்பான நாள். தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளுக்கான பொருள்களை இலவசமாக வழங்கும் விழா. தமிழர்கள் தங்களுடைய மொழியை, கலையை, நாகரிகத்தை, இனச் செழுமையை எண்ணிப் பார்த்து பூரிப்படைகிற நாள்; பொங்கல் திருநாள்.  இந்தப் பொங்கல் திருநாளை “தமிழர் திருநாள்” என்று நாம் கொண்டாடுகின்றோம். நாம் என்றால்  இன்றைக்குக் கொண்டாடுகின்ற திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்த நாம் அல்ல.  நமக்கு முன்பே, நம்முடைய இன உணர்வுக்கு மெருகேற்றிய, இன உணர்வு தீப்பந்தத்தை ஓங்கிப் பிடித்த மறைமலையடிகளார் போன்றவர்கள், திரு.வி.க. போன்றவர்கள், நாவலர் சோமசுந்தர பாரதியார் போன்றவர்கள், நமச்சிவாயனார்  போன்றவர்கள் இத்தகைய   தமிழ்ப் பெரியோர்கள், சான்றோர்கள், ஆன்றோர்கள்  எல்லாம் ஒன்று கூடி, எல்லா மொழிக்காரர்களுக்கும் ஒரு ஆண்டுக் கணக்கு இருக்கின்றது.