Skip to main content

கருணாநிதி ஆட்சி வீழ்ச்சி அடையும்: ஜெயலலிதா அறிக்கை

ஜெயலலிதா இன்று (பிப்ரவரி 4) வெளியிட்ட் அறிக்கை:

கேரள மாநிலம் வல்லார்படத்தில் சர்வதேச பெட்டக மாற்று முனையத்தை அமைக்க அனுமதி கொடுத்ததன் மூலம் தென் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போட்டுவிட்டார் கருணாநிதி.


தூத்துக்குடி துறைமுகம் வளர்ந்து வரும் துறைமுகமாகும். திருப்பூர், அவினாசி, ஈரோடு, கரூர், சிவகாசி, கோவை பகுதிகளிலிருந்து வெளி நாடுகளுக்கு செல்லும் சரக்குகள் தூத்துக்குடியில் இருக்கும் சிறிய கப்பல் மூலம் கொழும்பில் உள்ள சர்வதேச பெட்டக மாற்று முனையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்குள்ள தாய் கப்பலில் அனைத்துச் சரக்குகளும் ஏற்றப்படும். இதன் காரணமாக தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து மாதந்தோறும் 16,000 பெட்டக ஏற்றுமதியும், 14,000 பெட்டக இறக்குமதியும் நடைபெற்று வருகிறது.

தி.மு.க.வைச் சேர்ந்த டி.ஆர். பாலு மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த போது, கேரள மாநிலம், கொச்சிக்கு அருகில் உள்ள வல்லார்படம் என்ற இடத்தில் முதன் முதலாக சர்வதேச பெட்டக மாற்று முனையம் அமைக்க மத்திய அரசால் அனுமதி கொடுக்கப்பட்டது.  தற்போது இந்த முனையம் விரைவில் செயல்பாட்டிற்கு வர உள்ளது.

இந்த முனையம் செயல்பாட்டிற்கு வந்துவிட்டால், திருப்பூர், அவினாசி, கரூர், ஈரோடு, கோவை பகுதிகளில் உள்ள ஏற்றுமதியாளர்கள் தங்கள் சரக்குகளை தூத்துக்குடி துறைமுகத்திற்கு கொண்டு வருவதற்குப் பதிலாக, நேரடியாக கேரள மாநிலம், வல்லார்படத்தில் உள்ள சர்வதேச பெட்டக மாற்று முனையத்திற்கு அனுப்பி விடுவார்கள். இதனையடுத்து, தூத்துக்குடி துறைமுகத்தில் உள்ள தற்போதைய ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகம் வெகுவாக குறைந்து, தென் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கும் நிலை ஏற்படும்.  தூத்துக்குடி துறைமுகத்தின் முக்கியத்துவம் வெகுவாக குறைவதோடு மட்டுமல்லாமல், இதை நம்பியுள்ள தொழிலாளர்கள், வியாபாரிகள், சுங்க முகவர்கள், மற்றும் இதர பணியாளர்கள் வெகுவாக பாதிக்கப்படுவார்கள்.

மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இருந்து கொண்டு தமிழக மக்களுக்கு “நன்மை” செய்கின்ற கருணாநிதியின் லட்சணம் இது தான்! கருணாநிதியின் இந்தச் செயலுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். தூத்துக்குடி துறைமுகத்தின் வளர்ச்சியை தடுத்து, தென் தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கியுள்ள கருணாநிதியின் ஆட்சி விரைவில் வீழ்ச்சியடையும்.

Comments

Unknown said…
ம்ம்ம்... அப்புறம் .... இந்த அம்மா வந்து நிமித்திடுவாங்களாமா?

Popular posts from this blog

அழகிரி நாடு: மதுரையில் ஜெயலலிதா பேச்சு

ம‌துரையில் இன்று (அக்டோபர் 18) தி.மு.க. அரசை கண்டித்து நடந்த ஆர்பாட்டத்தில் ஜெயலலிதா பேசினார். வைகை நதிக்கரை இன்று ஒரு நாள் மட்டும் கடற்கரையாய் மாறுகின்ற வண்ணம் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எண்ணுக்குள் அடக்க முடியாத அளவுக்கு திரளாகக் கூடியிருக்கும் பாண்டி நாட்டு சகோதரர்களே - சகோதரிகளே! உங்கள் அனைவருக்கும் முதற்கண் எனது அன்பான வணக்கத்தை உரித்தாக்கிக் கொள்கிறேன். வைகை நதிக்கரைக்கு நான் வரக்கூடாது என்று கட்டவிழ்த்து விடப்பட்ட அச்சுறுத்தல் கடிதங்களை எல்லாம், நீங்கள் அனுப்பிய அழைப்பிதழ்களாகவே ஏற்றுக்கொண்டு நீதியுரை மதுரைக்கு நீதி கேட்க வந்திருக்கிறேன்.

ராமநாதபுரம் மாவட்ட தொகுதிகள் எல்லை

1. பரமக்குடி (தனி) தொகுதி பரமக்குடி தாலுக்கா, கழுதி தாலுக்கா (பகுதி) த.புனவாசல், வங்காருபுரம், பெரியானைக்குளம், அச்சங்குளம், அ.தரைக்குடி, வலாந்தை, எழுவனூர், கூடக்குளம், காக்குடி, நகரத்தார்குறிச்சி, அபிராமம், நத்தம், மரக்குளம் மற்றும் மண்டலமாணிக்கம் கிராமங்கள். அபிராமம் (பேரூராட்சி).

ஜெயலலிதாவுக்கு தண்டனையா?

  2007 ஜூலை 4 தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழில் எழுதிய கட்டுரை இது! ஜெயலலிதாவுக்கு தண்டனையா? கடந்த 2001-ம் ஆண்டு நடந்த தமிழக சட்ட சபைத் தேர்தலில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஆண்டிபட்டி, கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை மற்றும் புவனகிரி ஆகிய நான்கு தொகுதிகளில் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்தார். ஆனால் அந்த நேரத்தில், ஏற்கெனவே ஆட்சி யில் இருந்த போது விதிகளை மீறி டான்சி நிலத்தை வாங்கியதாகச் சொல்லி போடப் பட்ட வழக்கொன்றில் ஜெயலலிதாவுக்கு சிறப்பு நீதிமன்றம் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்திருந்தது. ஊழல் வழக்கில் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டால் தேர்தலில் போட்டியிட முடியாது என்பது தேர்தல் கமிஷனின் விதி. ஆகவே, ஜெயலலிதா வின் நான்கு மனுக்களும் தள்ளுபடி செய்யப் பட்டு அவர் தேர்தலில் நிற்கும் வாய்ப்பை இழந்தார். இது ஒருபுறமிருக்க, ‘மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி ஒருவர் ஒரு சமயத்தில் இரண்டு தொகுதிகளில் மட்டுமே போட்டியிட முடியும். ஆனால், நான்கு தொகுதிகளில் வேட்புமனுத் தாக்கல் செய்திருந்த ஜெயலலிதா, தான் இரண்டு தொகுதிகளுக்கு மேல் வேட்புமனுத் தாக்கல் செய்யவில்லை என...