Skip to main content

தமிழகத்தின் சிறிய‌ தொகுதிகள்!


கருணாநிதி வெற்றி பெற்ற சேப்பாக்கம் தொகுதிதான் 2006 சட்டசபைத் தேர்தல் வரையில் தமிழகத்தில் மிக சிறிய தொகுதியாக இருந்தது. தொகுதி மறு சீரமைப்புக்கு பிறகு சில தொகுதிகள் நீக்கப்பட்டு புதிய தொகுதிகள் அறிமுகம் செய்யப்பட்டன. இதனால் சேப்பாக்கம் தொகுதிக்கு அருகில் இருந்த திருவல்லிக்கேணி தொகுதி நீக்கப்பட்டு சேப்பாக்கம் தொகுதியோடு இணைக்கப்பட்டன. இதனால் இப்போது சேப்பாக்கம் -  ‍ திருவல்லிக்கேணி என்று புதிய தொகுதி உருவானது. தொகுதி மறுசீரமைப்புக்கு பிறகு முதல் சட்டசபைத் தேர்தல் இப்போதுதான் நடக்க போகிறது. இந்தநிலையில் மிக சிறிய தொகுதி என்கிற அந்தஸ்த்தை இழந்திருக்கிறது சேப்பாக்கம் தொகுதி. வாக்காளர் கணக்கெடுப்பு பணிகள் கடந்த டிசம்பர் மாதம் முடிந்து ஜனவரி மாதம் வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டன‌. அதன்படி தமிழகத்தில் குறைந்த‌ வாக்காளர்கள் கொண்ட மிக சிறிய தொகுதி நாகை மாவட்டத்தில் இருக்கும் கீழ்வெள்ளூர் (தனி) தொகுதிதான்.


 கீழ்வெள்ளூர் (தனி) தொகுதியில் 70 ஆயிரத்து 284 ஆண் வாக்காளர்களும் 69 ஆயிரத்து 843 பெண் வாக்காளர்களும் என மொத்தம் 1லட்சத்து 40 ஆயிரத்து 127 வாக்காளர்கள் உள்ளனர்.

 கீழ்வெள்ளூர் (தனி) தொகுதிக்கு அடுத்தபடியாக சென்னை துறைமுகம் தொகுதி இரண்டாவது இடத்தில் இருக்கிறது. 75 ஆயிரத்து 621 ஆண் வாக்காளர்களும் 69 ஆயிரத்து 531 பெண் வாக்காளர்களும் 31 திருநங்கைகள் என மொத்தம் 1லட்சத்து 45 ஆயிரத்து 183 வாக்காளர்கள் துறைமுகம் தொகுதியில் இருக்கிறார்கள்.

மூன்றாவது இடத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் இருக்கும் கந்தர்வக்கோட்டை (தனி) தொகுதி இடம் பெற்றிருக்கிறது. 76 ஆயிரத்து 341 ஆண் வாக்காளர்களும் 72 ஆயிரத்து 284 பெண் வாக்காளர்களும் என மொத்தம் 1 லட்சத்து 48 ஆயிரத்து 625 வாக்காளர்களை கொண்டிருக்கிறது கந்தர்வக்கோட்டை தொகுதி.

Comments

Popular posts from this blog

அழகிரி நாடு: மதுரையில் ஜெயலலிதா பேச்சு

ம‌துரையில் இன்று (அக்டோபர் 18) தி.மு.க. அரசை கண்டித்து நடந்த ஆர்பாட்டத்தில் ஜெயலலிதா பேசினார். வைகை நதிக்கரை இன்று ஒரு நாள் மட்டும் கடற்கரையாய் மாறுகின்ற வண்ணம் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எண்ணுக்குள் அடக்க முடியாத அளவுக்கு திரளாகக் கூடியிருக்கும் பாண்டி நாட்டு சகோதரர்களே - சகோதரிகளே! உங்கள் அனைவருக்கும் முதற்கண் எனது அன்பான வணக்கத்தை உரித்தாக்கிக் கொள்கிறேன். வைகை நதிக்கரைக்கு நான் வரக்கூடாது என்று கட்டவிழ்த்து விடப்பட்ட அச்சுறுத்தல் கடிதங்களை எல்லாம், நீங்கள் அனுப்பிய அழைப்பிதழ்களாகவே ஏற்றுக்கொண்டு நீதியுரை மதுரைக்கு நீதி கேட்க வந்திருக்கிறேன்.

ஸ்பெக்ட்ரம் பலூன் 'புஸ்" ஆகி விடும்: வீரமணி

திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி இன்று (டிசம்பர் 22) வெளியிட்ட அறிக்கை: தொலைத்தொடர்புத் துறையின் தற்போதைய அமைச்சர் கபில்சிபல் நேற்றிரவு தனியார் செய்தித் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், பல்வேறு திடுக்கிடக் கூடிய தகவல்களை ஆணித்தரமான முறையில் விளக்கியுள்ளார்.1999ம் ஆண்டில் - பாரதீய ஜனதா ஆட்சியில், வாஜ்பாய் பிரதமராக இருந்த காலகட்டத்தில் - கடைப்பிடிக்கப்பட்டதொலைத்தொடர்பு கொள்கையினால், மத்திய அரசுக்கு ஏற்பட்ட இழப்புத் தொகை ஒரு லட்சத்து 43 ஆயிரம் கோடியாகும் என்பதை சுட்டிக்காட்டியுள்ளார். 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு சம்பந்தமாக இந்த இழப்பு - இது இப்போது சொல்லப்படுவது போன்ற கற்பனையின் அடிப்படையில் சொல்லப்படும் தொகை அல்ல; நடைமுறைக் கணக்குப்படி ஏற்பட்ட இழப்புத் தொகையாகும்.

பதவியைவிட கொள்கைகளே முக்கியம்: கி.வீரமணி

கலைஞர் எடுத்த - வரலாற்றில் இடம் பெறும் முக்கிய அரசியல் முடிவை உள்ளூர் தமிழர்கள் முதல் உலகத் தமிழர்கள் வரை அனைவரும் மகிழ்ச்சியுடன் வரவேற்கின்றனர். பதவிகளை விட கொள்கையே முக்கியம் என்ற ரீதியில் தி.மு.க.வின் திட்டம் அமைய வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி வேண்டுகோள் விடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.