Skip to main content

கூட்டணிக்கு குழு அமைக்கப்படுகிறது: கருணாநிதி பேட்டி

உள் நாட்டு பாதுகாப்பு தொடர்பாக டெல்லியில் நடைபெறும் முதல்வர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக முதல்வர் கருணாநிதி நேற்று (ஜனவரி 30) டெல்லி சென்றார். அங்கே பத்திரிகையாளர்களுக்கு கருணாநிதி பேட்டி அளித்த போது வரும் சட்டசபைத் தேர்தலில் தி.மு.க. அணியில் பா.ம.க. இடம் பெறும் என்று கருணாநிதி தெரிவித்தார். இந்த நிலையில் திங்கள் கிழமை காலையில் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்தார்.

சோனியா சந்திப்பு மாலையில் நடப்பதற்கு முன்பே ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் திடிரென்று ராசாவை அழைத்து சி.பி.ஐ. விசாரித்தது. அதோடு ஸ்பெக்ட்ரம் தொடர்பாக அமைக்கப்பட்ட நீதிபதி சிவராஜ் பாட்டீல் தனது அறிக்கையை பிரதமரிடம் வழங்கினார். இந்த பரபரப்புக்கு இடையே சோனியாவை சந்தித்து கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தினார்.

சோனியா காந்தியை அவரது இல்லத்தில் சந்தித்து முக்கால் மணி நேரத்திற்கு மேல் உரையாடினார். அப்போது நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர். பாலு,  மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி ஆகியோர் உடன் இருந்தனர். இந்தச் சந்திப்புக்குப் பின் முதலமைச்சர் கருணாநிதி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

கேள்வி: சோனியா காந்தியை சந்தித்த போது என்ன பேசினீர்கள், எவ்வளவு நேரம் பேசினீர்கள், அதன் விவரம் கூற முடியுமா?

பதில்: சோனியா காந்தி அம்மையாருடன் முக்கால் மணி நேரம்  விவாதித்தோம். காங்கிரஸ்,  திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணி தொடருகிறது. தொகுதிகளைப் பற்றி விவரங்கள், எண்ணிக்கை பற்றி  விவாதிக்க காங்கிரஸ் சார்பில் ஒரு குழுவினை அமைக்கிறார்கள். அந்தக் குழுவில் யார் யார் இடம் பெறுவார்கள் என்பதை விரைவில் அறிவிப்பார்கள்.   அதன் பிறகு எங்களுடைய கூட்டணிப் பணிகள் தொடரும்.

கேள்வி : அந்தக் குழுவின் கூட்டம் எப்போது நடைபெறும்?

பதில்: குழு அமைத்த பிறகு.

கேள்வி : பேச்சுவார்த்தை எப்படி இருந்தது?

பதில்: திருப்திகரமாக அமைந்தது.

இப்படி கருணாநிதி சொன்னாலும் பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லையாம். 80 தொகுதிகள் வரை தர வேண்டும் என்று காங்கிரஸ் விடப்பிடியாக இருக்கிறதாம். அதனால்தான் குழு அமைக்கப்பட்டிருக்கிறது என்று கருணாநிதி சொல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்.

Comments

Popular posts from this blog

ஸ்பெக்ட்ரம் பலூன் 'புஸ்" ஆகி விடும்: வீரமணி

திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி இன்று (டிசம்பர் 22) வெளியிட்ட அறிக்கை: தொலைத்தொடர்புத் துறையின் தற்போதைய அமைச்சர் கபில்சிபல் நேற்றிரவு தனியார் செய்தித் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், பல்வேறு திடுக்கிடக் கூடிய தகவல்களை ஆணித்தரமான முறையில் விளக்கியுள்ளார்.1999ம் ஆண்டில் - பாரதீய ஜனதா ஆட்சியில், வாஜ்பாய் பிரதமராக இருந்த காலகட்டத்தில் - கடைப்பிடிக்கப்பட்டதொலைத்தொடர்பு கொள்கையினால், மத்திய அரசுக்கு ஏற்பட்ட இழப்புத் தொகை ஒரு லட்சத்து 43 ஆயிரம் கோடியாகும் என்பதை சுட்டிக்காட்டியுள்ளார். 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு சம்பந்தமாக இந்த இழப்பு - இது இப்போது சொல்லப்படுவது போன்ற கற்பனையின் அடிப்படையில் சொல்லப்படும் தொகை அல்ல; நடைமுறைக் கணக்குப்படி ஏற்பட்ட இழப்புத் தொகையாகும்.

பதவியைவிட கொள்கைகளே முக்கியம்: கி.வீரமணி

கலைஞர் எடுத்த - வரலாற்றில் இடம் பெறும் முக்கிய அரசியல் முடிவை உள்ளூர் தமிழர்கள் முதல் உலகத் தமிழர்கள் வரை அனைவரும் மகிழ்ச்சியுடன் வரவேற்கின்றனர். பதவிகளை விட கொள்கையே முக்கியம் என்ற ரீதியில் தி.மு.க.வின் திட்டம் அமைய வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி வேண்டுகோள் விடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அழகிரி நாடு: மதுரையில் ஜெயலலிதா பேச்சு

ம‌துரையில் இன்று (அக்டோபர் 18) தி.மு.க. அரசை கண்டித்து நடந்த ஆர்பாட்டத்தில் ஜெயலலிதா பேசினார். வைகை நதிக்கரை இன்று ஒரு நாள் மட்டும் கடற்கரையாய் மாறுகின்ற வண்ணம் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எண்ணுக்குள் அடக்க முடியாத அளவுக்கு திரளாகக் கூடியிருக்கும் பாண்டி நாட்டு சகோதரர்களே - சகோதரிகளே! உங்கள் அனைவருக்கும் முதற்கண் எனது அன்பான வணக்கத்தை உரித்தாக்கிக் கொள்கிறேன். வைகை நதிக்கரைக்கு நான் வரக்கூடாது என்று கட்டவிழ்த்து விடப்பட்ட அச்சுறுத்தல் கடிதங்களை எல்லாம், நீங்கள் அனுப்பிய அழைப்பிதழ்களாகவே ஏற்றுக்கொண்டு நீதியுரை மதுரைக்கு நீதி கேட்க வந்திருக்கிறேன்.