தமிழக சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்துடன் தொகுதிப் பங்கீடு குறித்து அ.தி.மு.க.வோடு பேச்சுவார்த்தை நடத்தியது. அ.தி.மு.க. தொகுதி பங்கீட்டுக் குழு உறுப்பினர்களான, பொருளாளர் ஓ. பன்னீர்செல்வம், தலைமை நிலையச் செயலாளர் கே.ஏ. செங்கோட்டையன், தேர்தல் பிரிவுச் செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன், ஆகியோர், இன்று (பிப்ரவரி 4) மாலை, அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் ஆர்.டி. மாரியப்பன், காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் க. சோமு, தலைமை நிலையச் செயலாளர் தாயகம் குருநாதன் ஆகியோருடன் முதல் கட்டப் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
மதுரையில் இன்று (அக்டோபர் 18) தி.மு.க. அரசை கண்டித்து நடந்த ஆர்பாட்டத்தில் ஜெயலலிதா பேசினார். வைகை நதிக்கரை இன்று ஒரு நாள் மட்டும் கடற்கரையாய் மாறுகின்ற வண்ணம் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எண்ணுக்குள் அடக்க முடியாத அளவுக்கு திரளாகக் கூடியிருக்கும் பாண்டி நாட்டு சகோதரர்களே - சகோதரிகளே! உங்கள் அனைவருக்கும் முதற்கண் எனது அன்பான வணக்கத்தை உரித்தாக்கிக் கொள்கிறேன். வைகை நதிக்கரைக்கு நான் வரக்கூடாது என்று கட்டவிழ்த்து விடப்பட்ட அச்சுறுத்தல் கடிதங்களை எல்லாம், நீங்கள் அனுப்பிய அழைப்பிதழ்களாகவே ஏற்றுக்கொண்டு நீதியுரை மதுரைக்கு நீதி கேட்க வந்திருக்கிறேன்.
Comments